ZOHOவின் அடுத்த ஆஃபர்.. விண்ணப்பிக்க ஜுலை 30 கடைசி நாள்.. சென்னை, தென்காசியில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜுலை 30 ஆகும்.

தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. சென்னை, மதுரை, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்பட பல இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

it jobs jobs job

சமீப நாட்களாக சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். தற்போது தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உள்ள ஜோஹோ நிறுவனத்துக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி தென்காசி ஜோஹோவில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 0 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதில் பூஜ்ஜியம் என குறிப்பிடப்பட்டுள்ளதால் பணி அனுபவம் இன்றி தேவையான திறமை இருப்பின் அவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கு தகுதி என்னவென்று பார்த்தால் விண்ணப்பத்தாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் விண்ணப்பத்தாரர்கள் 2014 ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டுக்குள்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களின் பணி என்பது புதிய சாப்ட்வேர் புரோகிராமை டெவலப் செய்தல், டெஸ்ட் செய்தல் இம்பிளிமென்ட் செய்வதை அறிந்திருக்க வேண்டும். மேலும் Code எழுதுவது, பிரச்சனைகளை தீர்க்கும் திறமை கொண்டிருக்க வேண்டும். சாப்ட்வேர் புரோகிராமின் Troubleshoot மற்றும் Debug செய்வது உள்ளிட்டவற்றை தயாராக இருக்க வேண்டும். மேலும் புதிய தொழில்நுட்பங்களை கற்க ரெடியாக இருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் கற்று தெரிந்த புரோகிராமிங் லேங்குவேஜ்கள் அனைத்தையும் விண்ணப்பம் செய்யும்போது தெளிவாக குறிப்பிட வேண்டும். சி++, ஜாவா தெரிந்திருந்தால் கட்டாயம் குறிப்பிடுங்கள். இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஜூலை 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி இண்டர்வியூ நடைபெற வாய்ப்புள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 30 என்று காத்திருக்க வேண்டாம். ஏனென்றால் சில சமயங்களில் நிறுவனம் எதிர்பார்த்த அளவிலான விண்ணப்பம் வரும்பட்சத்தில் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வதை நிறுத்தி விடுவார்கள். இதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் உள்ளிட்டவை Call letter-ல் குறிப்பிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+