Zoho-வில் "அக்கவுண்ட் மேனேஜர்" வேலை வேண்டுமா? சென்னையிலேயே பணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து அக்கவுண்ட் மேனேஜர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஜோஹோவில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள பணி குறித்த விவரம் வருமாறு:

it jobs jobs job

ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது அக்கவுண்ட் மேனேஜர் (Account Manager) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு பிரத்யேகமாக கல்வி தகுதி எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு அக்கவுண்ட் மேனேஜர் பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்கவுண்ட் மேனேஜ்மென்ட் அல்லது கிளைன்ட் பேசிங் ரோலில் அனுபவம் இருக்க வேண்டும்.

கம்யூனிகேஷன் திறமை, நிகோஷியேஷன், பிரச்சனைகளை தீர்க்கும் திறன், ஸ்ட்ராங் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் உள்ளிட்டவை இருக்க வேண்டும். அதேபோல் சிஆர்எமில் கஸ்டமர் ரெக்கார்ட்டை பின்பற்ற தெரிந்திருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த பணிக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு பணிக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+