அனுபவம் வேண்டாம்.. Zoho தரும் அசத்தலான வேலை.. சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

ஜோஹோ.. தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து அடிக்கடி பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

it jobs job

தமிழகத்தில் சென்னை, தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்தில் கன்டென்ட் ரைட்டர் (Content Writer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 0 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்கலாம். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் கூட விண்ணப்பம் செய்யலாம்.

இருப்பினும் அவர்களுக்கு குறிப்பிட்ட தகுதி என்பது வேண்டும். அந்த வகையில் கிராமர் மிஸ்டேக் இன்றி ஆங்கிலத்தில் சிம்பிளாக எழுத தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆர்ட்டிக்கிள் மற்றும் பிளாக்ஸ் எழுதிய அல்லது படித்த அனுபவம் இருக்க வேண்டும். எஸ்இஓ மற்றும் சமூக வலைதளம் பற்றிய அடிப்படையை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பைனான்ஸ் மற்றும் பிசினஸ் டொமைன் பற்றிய அறிவு இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகவும். அதேபோல் டீமாகவும், தனி ஆளாகவும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கான மாத சம்பளம் அல்லது ஆண்டு ஊதியம் பற்றி தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். ஏனென்றால் தேவையான அளவுக்கு விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பம் செய்திருந்தால் அப்ளை லிங்க் காலாவதியாகி விடும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+