"சேல்ஸ் பிரிவில் வேலை".. ZOHO-வில் சென்னை - கோவையில் பணி நியமனம்.. சூப்பர் சான்ஸ்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமாக உள்ள ஜோஹோவில் (Zoho) இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை மற்றும் டெல்லியில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு ஜோஹோ ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் தற்போது Sales Developement Representatives பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சேல்ஸ் டீமில் பணியாற்ற தேவையான குறைந்தபட்ச தகுதிகள் இருக்க வேண்டும்.
அதேபோல் இன்கம்மிங் சேல்ஸ் கால்ஸ், இ-மெயில் உள்ளிட்டவற்றை கையாள தெரிந்திருக்க வேண்டும். மேலும் இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், புராடக்ட் பிரசென்டேஷன் ஸ்கில்ஸ் உள்ளிட்டவை இருக்க வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும்.
அதேபோல் கஸ்டமர்களை அனுசரித்து பேசவும், தனிப்பட்ட முறையில் திறமையாக பணி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் நைட்ஷிப்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் அறிவிக்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
மேலும், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
இ-மெயில் அல்லது தொலைபேசி வழியாக விண்ணப்பத்தாரர்களை ஜோஹோ நிறுவனம் தொடர்பு கொள்ளும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் டெல்லியில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications