"அனுபவம் வேண்டாம்".. Zoho ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலை.. மதுரையிலேயே பணி நியமனம்
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் ஜோஹோ ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 17-ம் தேதி கடைசி நாளாகும்.
இப்போது கல்லூரி படிப்பை முடிக்கும் பலருக்கும் ஐடி நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனால் ஐடி துறை சாராத படிப்பை கல்லூரியில் முடித்திருந்தாலும் அதன்பிறகு ஐடி துறை சார்ந்த படிப்புகளை தனியே படித்து பலரும் அந்த துறைக்குள் அடியெடுத்து வைக்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை ஏராளமான ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில் பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் மதுரையில் இயங்கி வரும் ஜோஹோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்தில் டெக்னிக்கல் ரைட்டர்ஸ் (Technical Writers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு 2024, 2025ம் ஆண்டில் டிகிரி முடித்து சம்பந்தப்பட்ட பிரிவில் 0 - 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் 2026ம் ஆண்டில் படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணி அனுபவம் இல்லாதவர்களுக்கு குறிப்பிட்ட திறமை என்பது இருக்க வேண்டும். அதன்படி கிராமர் பிழை இன்றி ஆங்கிலத்தில் எழுத தெரிந்திருக்க வேண்டும். டெக்னிக்கல் கான்செப்ட் மற்றும் டெர்மினோலாஜிஸ் உள்ளிட்டவற்றை புரிந்து கொள்ளும் தன்மை இருக்க வேண்டும். எஸ்இஓ மற்றும் சோசியல் மீடியா டிரெண்ட் உள்ளிட்டவற்றை பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.
காம்ப்ளக்ஸ் டெக்னிக்கல் டாபிக்குகளை டிரான்ஸ்லேஷன் செய்ய தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 17 ம் தேதி கடைசி நாளாகும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications