ஆயிரம் ரூபாய்க்கு எது வாங்கினாலும் இலவசம்
ஒரு வாட்ச் கடை முன்னால் நடிகர் செந்திலை ஒரு கும்பல் மொத்தமாக கூடி சாத்து சாத்திக் கொண்டிருக்கின்றனர்.. அங்கே வருகிறார் கவுண்டமணி..
கவுண்டர்: ஏம்பா.. இந்த பயலை போட்டு இம்புட்டு அடி அடிக்கிறீங்க....
கூட்டத்தில் ஒருவன்: யோவ்.. இவன் ஒன் கூட்டாளியா?
கவுண்டர்: அய்யோ.. ஏதோ அறியா பிள்ளைன்னு கேட்டா கூட்டாளி ரேஞ்சுக்கு கோர்த்து விடுறீங்களே..
செந்தில்: அண்ணே. நான் தப்பே செய்யலைன்னே... பின்னி எடுக்கிறானுக..
கவுண்டர்: ஏண்டா தப்பே செய்யலைன்னா இத்தனை பேரு சேர்ந்து மொத்துவாங்களா? உண்மையை பேசுங்கடா..
செந்தில்: நான் உண்மையை சொல்றேன்ண்ணே.. நீங்களே நியாயத்தை சொல்லுங்க...
கவுண்டர்:எப்படியும் லொள்ளுமாதிரித்தனம் செஞ்சிருப்ப... இருந்தாலும் சொல்லித் தொலைடா
செந்தில்: இந்த கடையில போட்டிருக்கிற இந்த போர்டுல என்ன இருக்குதுன்னே?
கவுண்டர்: இந்த போர்டுல... ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்னு போட்டிருக்கு..
செந்தில்: அதைத்தான் நான் செஞ்சேன்.. வாட்ச் தராம லாடம் கட்டிப்புட்டானுக அண்ணே..
கவுண்டர்: நீ உலக மகா கஞ்சனாச்சே.. நீ எப்படிடா ஆயிரம் ரூபாய்க்கு செலவு செஞ்சிருப்ப... பொய்ய பொருத்தமா சொல்லுங்கடா..
செந்தில்: சத்தியமா.. ஆயிரம் ரூபாய்க்கு நான் இங்க வாங்கினேன்ணே...
கவுண்டர்: நீ ஆயிரம் ரூபாய்க்கு.. நான் நம்பனும்.. எங்க நீங்க வாங்கன.. வாங்கன்னு சொல்றியே அதை காமிடா பார்க்கலாம்..
செந்தில்: இந்தா பாருங்க.. இந்த மூட்டையில இருக்கிற அத்தனையும் இங்கதான் வாங்கினேன்.....
கவுண்டர்: டேய்.....என்ன சொல்றா.. இத்தனையையும் இங்கதான் வாங்கனாயா?
செந்தில்: ஆமான்ண்ணே.. ஆயிரம் ரூபாய் கொடுத்து இவ்ளோ சில்றை வாங்கியிருக்கேன்.. சில்லறை பசங்க வாட்ச் தராம வாட்டி எடுத்துட்டானுக...
கவுண்டர்: என்னது.. சில்லறையா? நீ ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்கினதுக்கு ஒரு வாட்ச் இலவசமா கேட்டியாக்கும்?
செந்தில்: க்கும்.. ஆயிரம் ரூபாய்க்கு எது வாங்கினாலும் இலவசம்னா நான் கேட்டதும் சரிதான்னே.. இதுக்குப் போய் அடிக்கிறானுகளே..
கவுண்டர்: (முறைத்தபடியே) தம்பி.. உங்க சிந்தனைக்கும் மூளை வளர்ச்சிக்கும் நீயெல்லாம் வேல்ர்டு பேங்கே வச்சிருக்கனும்... அதனால எவன்கிட்ட மாட்டிக்காம எங்காவது ஓடிப் போய் ஒளிஞ்சுக்கோ..
செந்தில்: அண்ணே.. என்னை அறிவாளின்னு நம்புன உங்களுக்கு காலம்பூராவும்..
கவுண்டர்: நிறுத்திட்டு.. ஓடிப் போய் தலைமறைவாகிடு.. இல்லை. வாட்ச் கடைகாரனை கூப்பிடவா?
(செந்தில் தலைதெறிக்க ஓடுகிறார்)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications