Jokes: கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்.. "சுள்"ளுன்னு சிரிக்கலாம் வாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா ஒரு பக்கம் பிடித்து இறுக்குகிறது.. என்ன செய்தால் இதிலிருந்து தப்பலாம் என்று நினைத்து நினைத்து மூளையும் டயர்ட் ஆகி விடுகிறது. .. அதிலிருந்து "செத்த" வெளியே வந்து கலகலப்பாக முயல்வோம்.. அதுக்காகவே கொஞ்சம் கடி ஜோக்ஸ்..!.. எல்லாம் வழக்கம் போல வாட்ஸ் ஆப்பில் வந்து குவிந்ததுதான்.

jokes kadi jokes let your pressure go out

டீச்சர்: "கண்ணகி மதுரையை எரித்தாள் " இது என்ன காலம்?
மாணவர்: "FIRE SERVICE" இல்லாத காலம் Sir !
டீச்சர்: ????

--

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிட்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

--

டாக்டர்: வாங்க உட்காருங்க.. கையை நீட்டுங்க.. நாக்கை நீட்டுங்க.. ஆ..ன்னு சத்தம் கொடுங்க.. நல்லா இழுத்து மூச்சு விடுங்க.. திரும்புங்க.. இப்ப சொல்லுங்க என்ன செய்யுது.

டாக்டரிடம் வந்தவர்: ஒன்னும் இல்லை டாக்டர்.. மகளுக்கு கல்யாணம் பத்திரிக்கை கொடுக்க வந்தேன்.. இந்தாங்க. வரட்டா!

--

ராஜா - வாழ்க்கையைப் பத்தி சிம்பிளா ஒரு கருத்து சொல்றேன் கேட்டுக்கோ

ரோஜா - எங்க சொல்லு

ராஜா - நம்ம உடம்புல ஆயிரக்கணக்கான "செல்" இருக்கு.. ஆனால் ஒரு செல்லில் கூட "சிம்" கார்டைப் போட முடியாது.. போட்டுப் பேசவும் முடியாது.. இதுதான் வாழ்க்கை!

--

நோயாளி - ஏன் டாக்டர், இதைக் கொடுத்தபோது சுகர் மாத்திரைன்னுதானே சொன்னீங்க

டாக்டர் - ஆமா.. சொன்னேன்.. அதுக்கென்ன இப்போ

நோயாளி - இல்ல டாக்டர்.. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு பார்த்தேன்.. இனிப்பாவே இல்லையே.. கசந்துச்சே.. அதான் வந்தேன்

டாக்டர்- !!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+