ஜோக்ஸ் - மாணவனிடம் சிக்கி சின்னாபின்னமான ஆசிரியர்
பரபரப்புகளும், சோகங்களும், இலக்குகளும், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தில் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிரிப்பு முக்கியம். அதை ஏற்படுத்தும் நகைச்சுவையைதான் இந்த ஜோக்ஸ் தொகுப்பின் மூலம் நாம் வழங்குகிறோம்.
கணக்கு வாத்தியார்: (மாணவனிடம்) ராமு இங்க வா... நான் உன்கிட்ட முதல்ல 2 பேனா கொடுக்கிறேன். அடுத்தது திரும்பவும் 2 பேனா கொடுக்கிறேன். அப்டின்னா உன்கிட்ட இப்ப எத்தனை பேனா மொத்தம் இருக்கும்?
ராமு: ஐந்து பேனா இருக்குது சார்.
கணக்கு வாத்தியார்: நான் சொன்னத ஒழுங்க கவனிச்சியா இல்லையா? முதல்ல 2 பேனா கொடுத்தேன். அப்றம் மீண்டும் 2 பேனா தந்தேன். இப்ப உன்கிட்ட எத்தனை பேனா இருக்கு? கரெக்டா சொல்லு பார்ப்போம்...

ராமு: இப்பவும் 5 பேனாதான் சார்..
கணக்கு வாத்தியார்: (கடுப்புடன்) அடிவாங்கப்போற.. சரி உன் வழிக்கே வரேன். முதல்ல 2 சாக்லேட் கொடுக்கிறேன் அடுத்தது திரும்பவும் 2 சாக்லேட் கொடுக்கிறேன். அப்டின்னா உன்கிட்ட இப்ப எத்தனை சாக்லேட் இருக்கும்?
ராமு: 4 சாக்லேட்
கணக்கு வாத்தியார்: குட் பாய்.. இப்ப திரும்பவும் வரேன்.. நான் உன்கிட்ட 2 பேனா கொடுக்கிறேன். அடுத்தது திரும்பவும் வேற 2 பேனாக்கள தரேன். அப்டின்னா இப்ப எத்தனை பேனா மொத்தமா இருக்குது?
ராமு: 4 தான் சார்..
கணக்கு வாத்தியார்: அடேய் ஏன்டா உசுற வாங்குற.. சாக்லேட் மட்டும் 4 வருது, பேனா எப்டிடா 5 வரும்?
ராமு: சார், என் கிட்ட ஏற்கனவே ஒரு பேனா இருந்ததால ஐந்துன்னு சொன்னேன். சாக்லேட் எதுவும் இல்லாததால 4 அப்டின்னு சொன்னேன்.
கணக்கு வாத்தியார்: சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. கெளம்பு...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications