நீங்கதான் டாக்டர் எப்படியாவது என் மனைவிக்கு...!
Subscribe to Oneindia Tamil
நோயாளியின் கணவர்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியா கேக்கறதில்லை. நீங்க தான் வைத்தியம் பார்க்கணும்
டாக்டர்: எவ்வளவு தூரத்திலிருந்து பேசினா கேக்க மாட்டேங்கறதுன்னு சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி சிகிச்சை கொடுக்கலாம்.
வீட்டுக்கு வந்த அவன் மனைவிக்கு பின்னால் 50 அடி தூரத்தில் இருந்து "டார்லிங் ராத்திரி டின்னருக்கு என்ன சமைக்கற" என்று கேட்டான்.
மனைவியிடமிருந்து பதில் வராமல் போகவே 40 அடி தள்ளி அதே கேள்வியை கேட்டான். அப்படியும் பதில் வராததால் 30 அடி 20 அடி என்று நகர்ந்து கேட்டபின் மனைவியின் மிக அருகில் நெருங்கி அதே கேள்வியை கேட்டான். மனைவி திரும்பி "இதோட ஐந்தாவது தடவையா சொல்லிட்டேன் ராத்திரிக்கு சிக்கன் சமைச்சுக்கிட்டு இருக்கேன்" என்றாள்.












Click it and Unblock the Notifications