நீ வாங்குறப்போ நான் கேட்டேனா...!
அந்த நபருக்கு புதிதாக எது வந்தாலும் உடனே வாங்கி விட வேண்டும். அதைப் பயன்படுத்துகிறாரோ இல்லையோ வாங்கி விட வேண்டும். அதிலும் நாளிதழ்களில் விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்குவதில் ஒரு வெறியாகவே திரிபவர்.
அப்படித்தான் அன்றைய நாளிதழில் ரேடியல் டயர் குறித்த விளம்பரம் வந்தது. இதைப் பார்த்து குஷியாகிவிட்ட அவர், உடனே போய் நான்கு ரேடியல் கார் டயர்களை வாங்கப் போகிறேன் என்றார்.
இதைக் கேட்டு அவரது மனைவிக்கு டென்ஷனாகி விட்டது. ஏதாவது மறை கழன்று விட்டதா உங்களுக்கு. ரேடியல் டயருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். அதைப் போய் வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்.
அதைக் கேட்டு கோபமான கணவர், நீயும்தான் புதிதாக வரும் பிராக்களையெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார். உனக்கும் அவற்றுக்கும் என்ன சம்பந்தம். அதைப் பற்றி நான் ஏதாவது சொன்னேனா...என்றாரே பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications