சொல்லிக் கொடுத்துக்கிட்டிருந்தேன்...!
Subscribe to Oneindia Tamil
உள்ளே குசுகுசுவென இருவர் பேசும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு அந்தப் பக்கமாகப் போன நபர் என்ன பேசுகிறார்கள் என்று காதை வைத்துக் கேட்டார். உள்ளே இருவர் பேசிக் கொண்டிருந்தனர்.
... மெதுவா தூக்கிப் பிடி, இரண்டு விரல்களை விடு, பெருசா இருந்தா 3 விரல்களைக் கூட விடலாம். நல்லாப் பிடிச்சுக்கிட்டு, மேலும், கீழுமா தேய்க்கனும். அப்படித்தான்...
இதற்கு மேலும் பொறுக்க முடியாத அந்த ஒட்டுக் கேட்ட நபர் வேகமாக உள்ளே போனார். அப்போது அங்கு இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் கோபமாக, என்னடா நடக்குது இங்கே என்று கேட்டார்.
அதற்கு ஒருவன் சொன்னான்... கண்ணாடி கிளாஸை எப்படிக் கழுவுறதுன்னு இவனுக்குச் சொல்லிக் கொடுத்துக் கிட்டிருந்தேன்...!












Click it and Unblock the Notifications