எல்லாம் சரிதான், ஆனா 'வெயிட்' சரியில்லையே மச்சான்...!
Subscribe to Oneindia Tamil
குப்புசாமி டவுனுக்குப் போயிருந்தான். அங்கு பஸ் ஸ்டாண்ட்டில் வைத்திருந்த எடை மெஷினைப் பார்த்தான். அதில் காசு போட்டான். ஒரு சீட்டு வந்தது. அதைப் பார்த்து செம குஷியாகி விட்டான். உடனே வந்த வேலையை முடித்துக் கொண்டு வேகமாக ஊருக்குத் திரும்பினான்.
வீட்டுக்கு வந்த அவன் மனைவியிடம், இங்க பாரு, நான் வெயிட் பார்க்க மெஷினுக்குப் போனேன். அங்கு இந்த சீட்டில் எப்படி எழுதியிருக்கு பாரு என்று சீட்டைக் காட்டினான்.
எப்படி எழுதியிருக்கு என்று கேட்டாள் மனைவி. அதற்கு குப்புசாமி, நான் மிகவும் சக்தி வாய்ந்தவனாக இருப்பேனாம், படுக்கை அறையில் மனைவியை திருப்திப்படுத்தும் சக்தி எனக்கு நிறைய இருக்கிறது என்று சந்தோஷத்துடன் கூறினான்.
அதைக் கேட்ட மனைவி சொன்னாள், எல்லாம் சரிதான், ஆனால் உன்னோட வெயிட் தப்பா போட்டிருக்கே மச்சான்...












Click it and Unblock the Notifications