Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: பொண்ணா இல்லை பொம்மையா? ரகசியத்தை உடைத்த டென்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டீஸ், இன்னைக்கு என்ன விசித்திர கதை படிக்க போறோம்னு ஆவலா இருக்கீங்களா?. உங்களுக்கு பார்பி கேர்ள் மாதிரி ஒரு பொம்மையை பிடிக்குமா? ஒருவேளை அந்த மாதிரி அழகா இருக்கிற பொம்மை போல ஒரு பொண்ண பார்க்கிற வாய்ப்பு கிடைச்சா என்ன பண்ணுவீங்க. இப்போ வாங்க கதைல பொம்மையா, பொண்ணா பாக்கலாம்..

ஒரு காலத்துல அழகான பாரிஸ் நகரத்துல ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. பிரான்ஸ், டென்சி ரெண்டு பேருமே பாலே நடனம் ஆடுவதில் சிறந்தவர்கள். தினமும் அதற்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒரு குழுவாக ஒரு விழாவில் போட்டியில் கலந்து கொளவதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து கொண்டிருந்தார்கள். அந்த பயிற்சி வகுப்பில் ஜேக்கப் புதிதாக இணைந்தான். டென்சி அவன் மீதி சிறிது அக்கறை எடுத்து சொல்லி கொடுத்தாள்.

Kids story in tamil : Keppelia

பிரான்ஸ் போட்டிக்கு தேவையான உடைகளை வாங்குவதற்காக ஒரு கடைக்கு சென்றான். அது பாலே நடனத்திற்கான பிரத்யேக உடை தயாரிப்பு நிறுவனம். அவன் அந்த கடையின் உள்ளே செல்லும்போது மெழுகு சிலை போல ஒரு பெண் பாலே நடனத்தை பயிற்சி செய்து கொண்டிருந்தாள். இவன் அவளை பார்த்துக்கொண்டே உடைகளை வாங்கி கொண்டு டென்சியிடம் காண்பித்தான். அவள் மேல் உள்ள கிறக்கத்தில் அவனுக்கு உடை எடுக்காமல் பெண்களுக்கான உடைகளை அவனை அறியாமல் வாங்கி வந்ததை டென்சி கிண்டல் செய்தாள்.

போட்டிக்கான நாள் ஆரம்பித்தது. பிரான்ஸ் ஒழுங்கா பயிற்சிகளை செய்யாமல் அந்த கடையில் பார்த்த பெண்ணை மட்டுமே எண்ணி நடனத்தை கோட்டை விட்டான். இதனால் டென்சி யார் அந்த பெண் என்பதை கண்டுபிடிக்க தனது தோழி மரியாவுடன் அந்த கடையில் நோட்டமிட்டாள். இரவு ஆகியும் அவள் அங்கிருந்து கிளம்பாததால் கடையில் ஒளிந்து கொண்டார்கள். கடையை மூடியதும் அந்த பெண்ணின் அருகில் சென்றார்கள். அதன் கைகளில் கேப்போலியா என எழுதிய டேக் இருந்தது. பார்ப்பதற்கு அப்படியே பிரான்ஸ் கூறியது போல மெழுகு பொம்மை போல இருந்தாள். அருகில் சென்று தொட முயலும் போது யாரோ வருவதை உணர்ந்த மரியா, டென்சியை அழைத்து கொண்டு வெளியில் ஓடினார்கள்.

மறுநாள் டென்சி, பிரான்ஸ்சிடம் நீ பார்த்த பொண்ணோட பேர் என்ன என்றாள். பேரெல்லாம் எனக்கு தெரியாது என்றான் பிரான்ஸ். அவள் பேர் கேப்பேலியா, அப்பறம் அவ பொண்ணே இல்லடா என்றாள். அவன் அதை காதில் வாங்கி கொள்ளாமல் பித்துபிடித்தவன் போல நடந்தான். அவளை தேடி அந்த கடைக்கே சென்றான். அவள் அழகா அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருந்தாள்.

பிரான்ஸ் அவளை நோக்கி சென்று ஹாய் என்றான். அவளும் பதிலுக்கு ஹாய் என்றாள். பிரான்ஸ்க்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அது வந்து, என உளறினான். கேளுங்கள் என்றால் கேப்பேலியா. அவன் தயங்கி நீங்கள் அழகாக பாலே ஆடுகிறீர்கள் என்றான். அவளும் மெல்லிய சிரிப்பில் நன்றி கூறினாள். பாரிஸில் மிகப்பெரிய கார்னிவல் போட்டியில் கலந்து கொள்ள போகிறேன் என்றாள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் ஆடலாம் என்றாள். பிரான்சிற்கு தலைகால் புரியவில்லை அவனும் ஒத்துக்கொண்டான்.

எங்கள் மாஸ்டர் வருகிறார். அவரிடம் சொல்கிறேன் என்றாள் கேப்பேலியா. அவளது மாஸ்டரிடம் பிரான்ஸை பற்றி கூறினாள். அவரும் தினமும் பயிற்சிக்கு வந்துவிடு என்றார். இங்கு வர ஆரம்பித்ததால் டென்சி உடன் ஆடுவதை மறந்தான். ஒழுங்காக அங்கு பயிற்சிக்கும் செல்லவில்லை. மரியா, பேசாமல் ஜேக்கப் உடன் ஆடு நமக்கு போட்டி நாள் மிகவும் நெருங்கி விட்டது என்றாள். டென்சியும் அதற்கு ஒத்து கொண்டு பாலே அவனுடன் இணைந்து குழுவாக கலந்து கொண்டார்கள்.

அந்த போட்டியில் இவர்களது குழுவிற்கு வெற்றியும் கிடைத்தது. டென்சி இருந்தாலும் பிரான்ஸை மிஸ் பண்ணினாள். அவனை பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் நபர் ஆயிற்றே, என்னதான் செய்கிறான் அப்படி அந்த பெரிய கார்னிவலுக்கு தயாராகிறார்களா? என ஒரு ஆர்வத்தில் அந்த கடைக்கு உளவு பார்க்க சென்றாள்

கடையில் கேப்பேலியா, அவளது மாஸ்டருடன் ஏதோ தீவிரமாக பேசி கொண்டிருப்பதை பார்த்தாள். கொஞ்ச நேரத்தில் அவளது மாஸ்டர் அவள் மேல் ஏதோ திரவத்தை ஊற்றினார். பள பளவென இருந்த கேப்பேலியா, ஏதோ பொலிவிழந்த பொம்மை போல இருந்தது. அவளின் முதுகில் இருந்து இரண்டு பேட்டரிகளை வெளியே எடுத்தார். டென்சி அதிர்ச்சியில் உறைந்தாள். இந்த சந்தேகம் எனக்கு இருந்தது என மனதிற்குள் நினைத்தாள்.

மரியாவிடம் இதை கூறியே ஆகா வேண்டும் என நினைத்து மறுநாள் அவளை அழைத்து கொண்டு கடைக்கு சென்றாள். அங்கு பிரான்ஸ் மற்றும் கேப்பேலியா பயிற்சியில் இருந்தார்கள். இருவரையும் பார்த்த பிரான்ஸ், கேப்பேலியா மிகவும் நேர்த்தியாக ஆடுவாள் என்று பெருமையாக கூறி கொண்டிருந்தான். இதை கேட்ட டென்சி, அது பொம்மைடா அப்படி தான் ஆடும், நீ வேணும்னா அவ முதுகில் பேட்டரி இருக்கு பாரு என்றாள். பிரான்ஸ் சிரித்து கொண்டே அவளும் உன்னை போல பொண்ணு தான் என்றான்.

டென்சி , அவளை தொட்டு பார்த்தாள். அப்படியே பெண்ணாக இருந்தாள் கேப்பேலியா. இவளுக்கு அதிர்ச்சி அடங்கவில்லை. மரியா அவளை திட்டி கொண்டே வா போகலாம் என்றாள். அந்த நேரம் கேப்பேலியாவின் மாஸ்டர் உள்ளே வந்தார். இவர்களை பார்த்தது சிரித்து கொண்டே என்ன நண்பர்கள் ஒன்றாக இருக்கிறீர்களா என்றார். பிரான்ஸ் கேப்பேலியாவை பார்க்க வந்துள்ளார்கள் என்றான். மாஸ்டர், அப்படினா நாளை கார்னிவலில் நாம் சந்திப்போம் இவர்களது பாழே நிகழ்ச்சி உள்ளது என்றார். சரி வருகிறோம் என்று மரியா கூறி கொண்டே, டென்சியை அழைத்து சென்றாள்.

மரியா, டென்சியை நம்பவில்லை, அவளை திட்ட ஆரம்பித்தாள். இதை நிரூபிக்க வேண்டும் என்று மீண்டும் இரவில் அந்த கடைக்கு சென்றாள். பொம்மையாக இருந்தவள் எப்படி மனிதர்க இருக்க முடியும் என்று பார்த்தாள். மாஸ்டர் கேப்பேலியா மேல் இன்னொரு திரவத்தை ஊற்றியதும் அவள் பொம்மையில் இருந்து மனித உருவில் மாறினாள். அந்த இரண்டு விதமான திரவங்களை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றாள் டென்சி.

Kids story in tamil : Keppelia

பாரிஸ் நகரமே, கார்னிவலை காண வந்திருந்தது. அங்குதான் கேப்பேலியாவின் பாலே நடனமும் நடக்க இருந்தது. அதற்கு முன் மாஸ்டர் இன்னும் சில பெண்களின் பாழே நடனங்களை நடத்தினார். இவர்களை பார்த்த மக்கள் எப்படி இவ்வளவு பொலிவாக இருக்கிறார்கள் என பேசி கொண்டிருந்தார்கள். மரியாவுடன் சென்ற டென்சி இதையெல்லாம் கேட்டு கொண்டு அமைதியாக இருந்தாள்.

அடுத்ததாக, பிரான்ஸ் மற்றும் கேப்பேலியா பாழே அரங்கேறியது. அவளை பார்த்த மொத்த கூட்டமும் இவளவு நேர்த்தியாக நடனம் ஆடுகிறாளே என வியப்பில் ஆழ்ந்தனர். அவள் பார்ப்பதற்கும் மிக அழகாக இருந்தாள். அவளை பற்றியே அனைவரும் பேசி கொண்டிருந்தார்கள். கோட்டத்தில் சட்டெனெ மேடையில் ஏறிய டென்சி அவள் மேல் திரவத்தை ஊற்றினாள். அவள் அப்படியே ஒரு பொம்மையாக மாறினாள். மற்ற பெண்கள் மீதும் ஊற்றினாள். அவர்களும் பொம்மையாக மாறினார்கள். அனைவரும் பயந்தார்கள்.

டென்சி மக்களுக்கு மாஸ்டரின் இந்த வேலையை சொல்லி புரிய வைத்தாள். இந்த திரவத்தை தயாரிக்க அவன் பலரை கொலை செய்தது தெரிய வந்தது. அவனை சிறையில் அடைத்தார்கள். பிரான்ஸ் கேப்பேலியாவை நினைத்து வருந்தினான். டென்சி அவனுக்கு உண்மையை எடுத்து கூறினாள். கண்டிப்பாக அவளை ஒரு மனித பிறவியாக நம்முடன் வைத்து கொள்ள முடியாது, ஆனால் பேட்டரி போட்டு உனக்காக அவள் பேசும் பொம்மையாக உன்னுடன் இருப்பாள் என்றாள் டென்சி. பிரான்ஸ் கேப்பேலியாவுடன் மகிழ்ச்சியாக நடந்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+