குழந்தை நீதி கதைகள்: சொடக்கு மேல சொடக்கு போடுது.. கடல் கன்னியும் கைசனும் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் கண்மணிகளே! வெயில் தாக்கத்துல இருந்து தப்பிக்க நமக்கெல்லாம் மழை வருது இல்லையா. அப்படி மலை வரலைனா நாம என்ன பண்ணுவோம் ஏதாவது குளிர்பிரதேசத்துக்கோ இல்ல கடல் சார்ந்த இடத்துக்கோ பயணிப்போம் இல்லையா. ஒருவேளை அப்படி போக முடியலைன்னு வருத்தமா இருந்தீங்கனா நம்ம கதையை படிங்க. நான் உங்கள இன்னைக்கு கடலுக்கு கூட்டிட்டு போக போறேன்.

Kids story in tamil : The Maiden of sea- Alena

ஒரு நீண்ட நெடு கடல் , பார்பதற்கே நம்ம மெரினா மாதிரி நீளமா அந்த கடல் இருக்கு. அழகான தெளிந்த கடல் அலை, அந்த கடற்கரை அருகில் ஒரு மீனவன் இருந்தான். அவன் பெயர் கைசன். அவனுக்கு லோனா என்ற பாட்டி இருந்தார். அவன் தினமும் கடலுக்கு சென்று மீன் பிடித்து கொண்டு ராஜாவிற்கு கொடுத்து வந்தான் அதற்கு அவனுக்கு சன்மானமும் கிடைத்தது. பிறகு கடலுக்கு வந்து நன்றி சொல்வான். அவனுக்கு அவன் பாட்டி கற்று கொடுத்தது. அவன் " இந்த கடல் மிக அமைதியாக , அழகாக இருக்கிறது, இதை பார்த்து ரசித்துக்கொண்டே சந்தோசமாக இருக்கலாம்" என மனதுக்குள் பேசினான்.

காலையில் மீன் பிடிக்க கிளம்பினான் . பாட்டி லோனா " தினமும் எடுத்து செல்லும் பிரட்டை மறக்காதே, அது நாம் கடலுக்கு அளிக்கும் உணவு" என்றார். கைசன் " சாரி பாட்டி இனிமேல் மறக்க மாட்டேன் " என அதை வாங்கிக்கொண்டான். கடலுக்குள் சென்றதும் பிரட்டை கடலுக்கு வீசினான். பிறகு அவன் வலையை எடுத்து கடலில் வீசினான். சிறிது நேரத்தில் மீன்கள் வலையில் சிக்கின எடுத்து கொண்டு வீட்டை அடைந்தான். பாட்டி லோனாவிற்கு உடல் நிலை சற்று சரியில்லை. "பாட்டி ஓய்வெடுங்கள், நான் அரசரை பார்த்து விட்டு வந்துவிடுகிறேன்" என்றான். பாட்டியை கவனித்து கொள்ள அவனை தவிர வேறு யாரும் கிடையாது. அவனும் அரசரை பார்த்து விட்டு வேகமாக வீடு திரும்பினான். லோனாவிடம் சென்று, " பாட்டி உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா? நான் சென்று உங்களுக்கு ஏதாவது சமைத்து வருகிறேன்" என்று சமையலறை சென்றான். உள்ளே சென்றவனுக்கு அதிர்ச்சி, பெண் ஒருவர் நின்று சமைத்து கொண்டு இருந்தார்.

அவன் அதிர்ச்சி மீளாமல் அருகில் சென்றான். அவள் கொள்ளை அழகி , நீண்ட அழகிய கூந்தல், தலையில் கடற்பாசிகள் பூக்கள் நிறைந்த கிரீடம் அணிந்துருந்தாள். ஒரு இளவரசியை போன்று அழகாக இருந்தாள்.

Kids story in tamil : The Maiden of sea- Alena

அவன் பயந்து போய் "பாட்டி, உள்ளே ஏதோ பெண் ஒருவர் இருக்கிறார்" என்றான். லோனா," அதுவா அலெனா அவள் பெயர், நீ போன பிறகு அவள்தான் என்னை பார்த்து கொள்கிறாள்" என்றார். அலெனா பாட்டிக்கு தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு வந்தாள் .

அவன் அவளை பார்த்து புன்னகைத்தான். அவளிடம் " நீங்கள் யார்? "என்று வினவினான். அலெனா " நான் இந்த கடலில் வாழ்கிறேன், நான் ஒரு கடல் கன்னி" என்றாள். கைசன் " நீங்கள் ஏன் எங்களுக்கு உதவ வேண்டும் ?" என்றான். அலெனா" நீ தினமும் என்னை கவனித்து கொள்கிறாய், உணவளிக்கிறாய், ஆகையால் நான் உனக்கு உதவ வந்தேன்" என்று சிரித்தாள். இருவரும் அவர்களது அன்றாட வேலைகளை பார்த்து கொள்ள ஆரம்பித்தனர். ஒருவர் ஒருவரை புரிந்து கொள்ளவும் செய்தனர். அலெனா, கைசன் இருவருக்கும் இடையே ஒரு வித அன்பு உருவானது. அப்போதுதான் அந்த சோகமான நிகழ்வு நடந்தது.

அரசர் இறந்து விட்டார். அவர் பண்பானவர். அவருக்கு பின் இளவரசர் முடி சூட்டி கொண்டார். அவர் மக்களிடையே கொடூரமாக நடந்து கொண்டார். அரசவை கூடியது. அரசர் " இந்த ஸ்க்ரீன்கள் தங்கத்தால் செய்ய வேண்டும் அதுவும் 2 நாட்களில் வேலை முடிய வேண்டும்" என்றார். "ஆனால் அரசே அதற்கு 1 வாரம் ஆகும் " அரசவை பொற்கொல்லன். " உன்னால் முடியாதல்லவா, உடனே உன்னை நாடு கடத்துகிறேன்" என்று உத்தரவிட்டார். அரசரின் ஒவ்வொவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மனதில் பயத்தை கொண்டு வந்தது. அவரை பற்றி பேசுவதற்கே பயந்தனர். அவர் மக்கள் என்ன பேசுகிறார் என்பதை அறிவதற்கே உளவாளிகளை வைத்து இருந்தார். யாராவது பேசினால் சிறை தண்டனை அல்லது நாடு கடத்தப்பட்டார்கள்.

இது ஏதும் கைசனுக்கு பிரச்சனை கொண்டு வரவில்லை. அவன் கடல் அருகே அமைதியான வாழ்க்கை வாழ்ந்திருந்தான். ஆனால் ஒருநாள் அரசர் நாட்டை சுற்றி பார்க்க கிளம்பினார். அவர் கடலையும் வேடிக்கை பார்த்து கொண்டே பயணித்தார். அங்கு அழகான அலெனா பாறையின் மீது அமர்ந்து இருந்தாள். அவளை பார்த்ததும் ரசித்து கொண்டே அருகில் சென்றார். கடலில் இருந்து அந்த சமயத்தில் கைசன் திரும்பினான். அவர்கள் நெருக்கமாய் இருப்பதை பார்த்த அரசருக்கு கோபம் வந்தது. " யார் இவன்? என்றார் அரசர். சிப்பாய் " அவன் நம் அரண்மனைக்கு மீன்கள் தரும் மீனவன்" என்றான். "சரி அவன் நாளை என்னை பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கைசன் மறுநாள் அரசவைக்கு வந்தான். அரசர் " கடற்கரையில் படை காவலாளிகள் தங்குவதற்கு டென்ட் அமைக்க வேண்டும் அவர்கள் தங்கும் இடம் போக பாதி இடம் காலியாக இருக்க வேண்டும் என்று சொன்னார். கைசன் " ஆனால் அரசே அது எப்படி முடியும்" என்றான். அனைவரும் கைசனை பார்த்தனர். "2 நாட்களில் நீ அதை செய்தாகவேண்டும் இல்லையெனில் நாடு கடத்தபடுவாய்" என்று உத்தரவிட்டார். அவன் பயந்தவாரே வீட்டிற்கு திரும்பினான்.

அவன் முகம் வாடியிருப்பதை பார்த்த அலெனா, " என்னாயிற்று ?" என்றாள். அரசர் இரண்டு நாட்களில் படை காவலாளிகளுக்கு டென்ட் அமைக்க சொன்னார் ஆனால் அது எப்படி முடியும், அதில் பாதி இடம் காலியாக வேறு இருக்க வேண்டுமாம்" என்றான். அவ்வளவுதானா ? என்றாள் அலெனா. ஒரு சொடக்கு போட்டாள். அரசர் எதிர் பார்த்த மாதிரியே டென்ட் ரெடி ஆகியது. அரசர் வந்து பார்வையிட்டார். இவன் எப்படி இதை செய்து முடித்தான் என சிந்தனையில்," உக்காருவதற்கு மேசைகள் யார் அமைப்பார், நாளைக்குள் அது அனைத்தும் இருக்க வேண்டும் இல்லையெனில் உன்னை உடனடியாக நாடு கடத்தி விடுவேன்" என்றார்

அவன் மறுபடியும் சோகமாக இருந்தான். அலெனா "என்னாச்சு? ஏன் அழுகிறாய்" என்றாள். அவன் அரசர் சொன்னதை கூறினான். அலெனா " சரி கவலையை விடு, எனக்கு தெரிந்த தோழிகள் இதை சிறப்பாக செய்வார்கள் " என்றாள் . சொடக்கு போட்டாள். அலெனா தோழிகள் வந்தனர். அரசர் கேட்ட மேஜை வேலைகளை முடித்தனர். அரசர் வந்து பார்த்ததும் ஆச்சர்யபட்டார். " இவன் எப்படி இதை முடித்தான் " என நினைத்து கொண்டே கைசனை அழைத்தார். "எனக்கு இந்த கடலில் உள்ள முத்துக்கள் வேண்டும் நாளை வருவேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினார் .

கைசன் மீண்டும் சோகமானான். அலெனா அரசருக்கு பாடம் புகட்ட எண்ணினாள். மறுநாள் அரசர் வரும்போது அவர் முன்னே ஒரு சிறுவன் நடந்து சென்றான். அவர் அவனை பார்த்து ," உன் கைகளில் என்ன மின்னுகிறதே" என்றார். அவன் "ஆமாம் இவை முத்துக்கள், நான்தான் இந்த கடலில் முத்துக்களை எடுப்பவன்" என்றான். அரசர் "அப்படியா எனில் எனக்கு அத்தனை முத்துக்களையும் எடுத்துக்கொண்டு வா" என்றார். அவனும் கடலில் குதித்தான். ஒரு மூட்டையை கொண்டு வந்தான். அதை அரசர் முன் கொட்டினான். அதில் சில கடல் பாசிகள், ஒரு முத்து சிப்பி இருந்தது. அரசர் அதை திறந்து காட்ட சொன்னார். அவனும் அதை திறந்தான். உள்ளே இருந்த ஆக்டோபஸ் அவர் முகத்தில் துப்பியது. கோபமான அரசர் உன்னை என்ன செய்கிறேன் பார் என்றார். சிறுவன் அலெனாவாக மாறினாள். அதிர்ந்த அரசர் என்ன மாயாஜாலம் காட்டுகிறாயா என்று மிரட்டினார்.

அவள்," உங்களுக்கு பாடம் புகட்டாமல் விடுவதாய் இல்லை "என்றாள் . சொடக்கு போட்டாள். அரசரின் நகைகள் காணாமல் போயின.அரசர் கோபத்தின் உச்சத்திற்கே சென்றார். காவலாளிகளிடம் " அவளை சிறை பிடியுங்கள் " என்றார். அலெனா சொடக்கு போட்டாள். காவலாளிகள் அரசரை மறந்தனர். " யார் இவன் நம்மை வேலை வாங்குகிறான்" என்றார்கள். அரசர் திகைத்து போனார். அலெனாவிடம், என்னை பழைய நிலைக்கு மாற்று என்றார். அங்கு வந்த கைசனும் அவர் மாறி விட்டார் விட்டு விடலாம் என்றான். அலெனா அரசரிடம், " இதற்குமேல் மக்களை துன்புறுத்த கூடாது, அப்படி செய்தால் உங்கள் நிலைமை இதை விட மோசமாகி விடும் " என்றாள். அரசரும் வருந்தி மன்னித்து விடுங்கள் என்றார். அலெனா சொடக்கு போட்டதும் அரசர் பழைய நிலைக்கு வந்தார். " ஆனால் என்னுடைய நகைகள் இல்லாமல் எப்படி செல்வது" என்றார். அலெனா " நீங்கள் நடந்து கொள்ளும் விதம் படி அவை தானாக உங்களை வந்தடையும்" என்றாள்.

அரசரும் மக்கள் தேவையறிந்து ஆட்சி செய்தார். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். கைசன் " அலெனா உனக்கு மிக்க நன்றி " என்றான். உங்கள் மகிழ்ச்சியே எனக்கும் மகிழ்ச்சி என்றாள் அலெனா. சந்தோசமாக வாழ்க்கையை தொடங்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+