Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்.. இளவரசியின் மனதை கவர்ந்தது எந்த பூ..

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், பூக்கள் அப்டினா உங்களுக்கு என்ன நியாபகம் வரும். எனக்கு ரோஜா தான். உங்களுக்கு பிடிச்ச பூ பேர கமெண்ட்ல சொல்லுங்க. அதுக்கு முன்னாடி நம்ம கதையை படிக்க போலாம். ஆமா இன்னைக்கு நீங்க படிக்க போற கதைக்கும் பூக்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கு. ஸோ, படிக்கலாமா..

கிரிஸ்டல் அப்படினு ஒரு அழகான நகரம் இருந்தது. அங்க ஒரு ராஜாவும், அழகான ஒரு இளவரசியும் ஆட்சி செஞ்சிட்டு வந்தாங்க. இளவரசி பேரு பிளாரைட். இவர் ரொம்ப கனிவா, பொறுமையா முடிவுகளை கையாண்டு கொண்டிருந்தார். இவரது திறமைகளை பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டார்கள் .

இதெல்லாம் அவருக்கு எப்படி கிடைத்தது என்று தெரியாது ஆனால் அவரது பொறுமை அனைவருக்கும் பிடித்ததால், மிகவும் பிடித்த இளவரசியாக வாழ்ந்து வந்தார். அவர் அரண்மனையில் தனியாக தோட்டத்தை மேம்படுத்தி வருகிறார். அவர் கையசைத்தால் வாடிய செடிகள் கூட தளிர்த்துவிடும். இவர் தோட்டத்தின் உள்ளே நுழைந்தாலே பூக்கள் குஷியாகி அவர் மேல் தூவி வரவேற்கும்.

இளவரசி தோட்டத்திற்குள் யாருக்கும் அனுமதி கிடையாது. இரண்டு மெய்க்காவலர்கள் தவிர. இளவரசி தோட்டத்திற்கு செல்லும்போது ஒரு பணிப்பெண் போன்ற உடையிலே செல்வார். அவரது கிரீடத்தை கூட அணிய மாட்டார். அதன் பின்னால் ஒரு ரகசியமும் இருக்கிறது. அந்த பூக்கள், செடிகளுடன் நாள் முழுவதும் செலவிடுவார். அங்கிருக்கு சின்ன சின்ன பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் என எதுவாக இருந்தாலும் அதனுடன் மிகவும் கனிவாக நடந்து கொள்வார்.

Kids story in tamil : The pixie fairy

இவர் அந்த தோட்டத்தை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார். இதைவிட ராஜா இன்னொரு ரகசியத்தை காத்து வைத்திருந்தார். மகள் தோட்டத்தில் இருப்பதை பார்த்து ஏதோ சிந்தனையில் உறைந்தார். அமைச்சர்களிடம் இளவரசிக்கு உடனடியாக வரன் பார்க்க வேண்டும். மற்ற ராஜ்ஜியங்களில் இருக்கும் இளவரசர்களை வரவழையுங்கள். மேலும் இளவரசிக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவருக்கு பிடித்த பூக்களை கொண்டு வருபவர்களுக்கு கண்டிப்பாக முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறினார். அமைச்சரும் மற்ற ராஜ்ஜியங்களுக்கு ஓலை அனுப்பினார்.

இளவரசர்கள் பலரும் வந்தனர். ஆயுதங்களை வைத்து கொண்டு சாகசங்கள் செய்து இளவரசியை மணந்து விடலாம் என நினைத்தனர். அதில் வந்த ஒருவர் மட்டும் உங்களுக்கு பிடித்த பூவை கொண்டு வந்துள்ளேன் என கூறினார். இளவரசியும் மிகவும் ஆர்வம் ஆனார். அவர் கையில் இருந்த ரோஜா பூவை பார்த்ததும் இளவரசி கத்தினார். ஒரு பூவை எப்படி கையாள வேண்டும் என உங்களுக்கு தெரியாதா, காவலர்களே அந்த பூவை என் தோட்டத்தில் வையுங்கள் என உத்தரவிட்டாள்.

அந்த இளவரசர், இளவரசி அவர்களே நீங்கள் அந்த பூவை ஏற்று கொண்டீர்கள் என்றால் என்னையும் ஏற்று கொண்டீர்கள் என அர்த்தமாகுமா என கேட்டார். இளவரசி , என்ன.. என கேட்டு அங்கிருந்து வேகமாக அரண்மனையில் உள்ள அவரது தோட்டத்துக்கு கிளம்பினார். ராஜாவும் என்ன இவர்கள் நாம் சொல்லி விட்டும் இப்படி சொதப்புகிறார்களே என கவலை கொண்டார்.

இளவரசி அமைச்சரவையில் நடந்தவற்றை ஒவ்வொன்றாக அங்கிருக்கும் பூக்கள், செடிகளிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு சில அசைவுகளை உணர்ந்தார். ஒரு வினோத சத்தம் கேட்டது. இது தேனீ ரீங்காரம் போல இல்ல, வேறு என்னவா இருக்கும், யாரது வெளியில் வாருங்கள் என்றாள். ஒரு குட்டி பூச்சி போல ஏதோ பூக்கள் நடுவில் இருந்து வெளியில் வந்தது.

என்ன பணிப்பெண்ணே பூக்களிடம் ஏதோ முணுமுணுத்து கொண்டிருக்கிறாய் என ஒரு குட்டி பெர்ரி கேட்டது. அது அப்படி கேட்டதில் ஆச்சர்யமில்லை. ஏனெனில் இளவரசி அவரது உயர்ந்த உடைகள், கீரிடம் ஏதும் அனைத்து அந்த தோட்டத்திற்கு வரமாட்டார். பார்ப்பதற்கு பணிப்பெண் போன்றே தோன்றும்.

யார் நீ?.. என்றாள் இளவரசி. நான் ஒரு பிக்ஸி பெர்ரி. எங்கள் நகரம் இதைவிட செழிப்பாக பூக்கள், செடிகள், அருவிகள் என அழகாக இருக்கும் என்றது. இங்கு என்ன செய்கிறாய் என்றாள் இளவரசி. பெர்ரி சொன்னது அதுவா சும்மா என் வீட்டில் அம்மாவுடன் சண்டை அதான் அப்படியே திரிகிறேன் என்றது.

உன்னால் எப்படி என் தோட்டத்திற்குள் நுழைய முடிந்தது. சுற்றி காவல் இருக்கிறதே என்றாள். ஓ.. அதுவா சுவற்றில் துளையிட்டு பெரிய காம்புகளை வைத்து தாண்டி வந்தேன் என்றது. அவள் விசித்திரமாக பார்த்தாள் . அட பின்ன என்ன பெண்ணே நானே குட்டியாக இருக்கிறேன், எனக்கு இறக்கைகள் இருக்கிறது பறந்துதான் வந்தேன் என்றது.

சரி கிளம்பு என்று கூறிவிட்டு அவளும் அரண்மனையிக்கு வந்தாள். இவர்களது சந்திப்பு தினமும் நடந்தது. பிக்ஸி பெர்ரி அவளை ரசித்தது எப்படி பாச்சிகளிடத்தும் இவளால் கனிவாக இருக்க முடிகிறது என வியந்து பார்த்தது. அப்படி தினமும் வரும்போது ஒரு நாள் மெய்க்காப்பாளரிடம் மாட்டியது பிக்ஸி.

அரசவைக்கு அழைத்து வந்தனர். ஏதோ பூச்சி இளவரசி தோட்டத்திற்கு செல்வதை பார்த்தோம் என்று. பிக்ஸி அதிர்ச்சியானது. நீ இங்கு இளவரசியா?.. உன்னை பணிப்பெண் என்று நினைத்தேனே என்றது. இளவரசி அவரை விடுங்கள் , எனக்கு தெரிந்தவர் தான் அவர் என்றாள்.

பிக்ஸி, ராஜாவிடம்... அரசே , அரண்மனை வரை வந்துவிட்டேன் உங்கள் மகளுக்கு வரன் பார்க்கிறீர்கள் நான் அவரது மனதை வெல்ல முயற்சி செய்யலாமா என கேட்டது. அரசரும் உடனடியாக சம்மதித்தார். இளவரசிக்கு இருவரும் பழகிய நாட்கள் நினைவுக்கு வந்தது. சரி என்று அவரும் கூறினார். ஆனால் எனக்கு பிடித்த பூ எதுவோ அதை நாளை கொண்டு வந்தால் உங்களை மணம் முடிக்கிறேன் . இல்லை என்றால் உங்களை உங்கள் ராஜ்ஜியத்திற்கே அனுப்பி வைக்கப்படும் என்றாள் இளவரசி அவனும் சம்மதித்தான். இரவெல்லாம் தூங்காமல் யோசித்தான்.

மறுநாள் அரசவை கூடியது. ஒரு அழகான பெட்டியில், ஒரு பூவை கொண்டு வந்து திறந்து கட்டினான். அது ஒரு வசந்த கால பூ, அவ்வளவு எளிதில் கிடைக்காது, ஆனால் வசந்தகாலத்தில் எல்லா இடங்களிலும் இருக்கும். அரசவையில் ஆச்சார்யப்பட்டார்கள். இது கோட்டைக்கு வெளியே அதிகமாக இருக்கிறதே , இதுவா இளவரசிக்கு பிடிக்கும், இந்த லவ்லி பூவா என அரசவையே ஆச்சர்யமாக பார்த்தது.

இளவரசி ஆமாம் என்பதுபோல் தலையசைத்தாள். அந்த பூ பறந்து இளவரசி பக்கம் போனது அவள் முன் பிரகாசமாக மின்னியது. அவளையும் ஒரு பிக்ஸி பெர்ரியாக மாத்தியது. இப்போ அரசர் ஒரு உண்மையை அரசவையில் கூறினார். இளவரசி அரண்மனையில் பூக்களுடன் விளையாடி கொண்டிருக்கும்போது, அவளுக்கு பூக்கள் மேல் இருந்த உண்மையான அன்பை பார்த்த பூக்களின் தேவதை அவளுக்கு சின்ன வயதில் இந்த வரத்தை அளித்தது. அதாவது உண்மையான பிறப்பின் நோக்கமே பூக்களிடம் அவள் அன்பாக இருப்பாள் என்பதாகும். அவளது விருப்பமான பூவுடன் வரும் ஒருவனால் சரியான நேரத்தில் அவளது சுய ரூபத்திற்கு மாறுவாள் என்று கூறியது

இதற்காகத்தான் அரசரும் அவளை புரிந்து கொண்ட இளவரசன் கிடைக்க ஆசைபட்டார். இரண்டு பிக்ஸி பேரருளும் அரசவையை இன்னும் செழிப்பாக மாத்தினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+