குழந்தை நீதி கதைகள்: ஆசை ஆசையாய் இருக்கிறதே!.. நினைத்ததை கேட்டிடவே- விஷிங் வெள்
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க எல்லாரும். சீக்கரம் ஸ்கூல் ஓபன் பண்ண போறாங்க. ஜாலிய இருக்கா ? இந்த காலகட்டத்துல உங்களுக்கு நெறைய ஆசைகள் வந்துருக்கும். சிலது நிறைவேறாம போயிருக்கும். நம்ம நினைக்கறதெல்லாம் ஒருத்தங்க நிறைவேத்துன எப்படி இருக்கும். அப்படி ஒரு ஆசை நிறைவேற்றியை பத்தி தா பக்க போறோம் கதைக்குள்ள போலாமா. வாங்க
முன்னொரு காலத்துல வெள்ளார அப்படிங்கிற நகரம் இருந்துச்சு.அங்க ஒரு கிணறு இருந்துச்சு. அத அங்கு இருக்க மக்கள் எல்லாரும் 'விஷிங் வெள்'னு கூப்பிடுவாங்க அதாவது ஆசையை நிறைவேற்றும் கிணறு. பல வருசமா அது மக்களோட ஆசைகளை நிறைவேற்றி வருது. உதாரணமாக, ஒரு சின்ன பொண்ணு அந்த கிணறு முன்னாடி நின்னு, "எனக்கு ஒரே ஒரு டெட்டி பீர் பொம்மை வேணும் ப்ளீஸ்" னு கேட்டுட்டு கிணறுல ஒரு நாணயத்தை போட்டுச்சு. அடுத்த நொடி அவளுக்கு பின்னாடி ஒரு நபர் டெட்டி பீர் பொம்மையோட நின்னரு. சந்தோஷம் தாங்காத அந்த சின்ன பொண்ணு, "தாங்யு வெள்"னு சொல்லுது. இந்த மாதிரி மக்கள் தங்களுக்கு வேண்டியதை எல்லாம் அந்த கிணறு கிட்ட கேப்பாங்க. கிணறும் அதை நிறைவேற்றும். 'விஷிங் வெள்'ளை அரசாங்கம் பாரம்பரிய இடமா மத்தினாங்க. அந்த கிணற்றுக்கு பக்கத்துல ஒரு தபால் பெட்டி இருந்துச்சு அதோட பெரு

'விஷ் வெள்' நாளுக்கு நாள் மக்களுக்கு கிணற்றோட தேவை அதிகமா தேவபட்டுச்சு.அந்த நகர மக்கள் கிணற்று கிட்ட வந்து தங்களோட ஆசைகளை சொல்லுவாங்கலாம். சுற்றுலா பயணிகள் அத பாத்து ஆச்சரியப்படுவாங்கலாம். ஆனால்,கொஞ்ச நாள்ல அந்த 'விஷிங் வெள்' சபிக்கபட்டதா ஒரு வதந்தி பரவிச்சு. அங்க வர்றத மக்கள் கொறச்சுக்கிட்டாங்க.அதுக்கு ஒருத்தர் மட்டும் ரொம்ப கவல பட்டர். அவர் பெரு ஜோனாதன். அந்த நகரத்துல செய்தி வாசிப்பாளரா இருந்தாரு. ஒரு நாள் அவருக்கு ரொம்ப கஷ்டமான செய்தி ஒண்ணா மக்களுக்கு சொன்னாரு "வணக்கம் மக்களே, நம்ம எல்லாருக்கும் பிடிச்ச 'விஷிங் வெள்'ல அரசாங்கம் மூட போறாங்க"னு . இத மத்தவங்க எப்படி எடுத்திருப்பாங்கனு தெரில ஆனா ஜோனாதன் ரொம்ப கவலைய இருந்தாரு. பிரச்சனை என்னனா 'விஷிங் வெள்' கிட்ட மக்கள் தங்களோட எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வந்துச்சு. எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுவது நல்லதுன்னு நினைக்கறீங்களா? அதுல ஆபத்தும் இருக்கு. சில நிகழ்வுகள் அதனால நடத்துக்கு. ஒரு மாதம் முன்னாடி, ஒரு பெண்மணி 'விஷிங் வெள்' கிட்ட வந்து, "இந்த நகரத்துல நான் மட்டும் பூக்காரியா இருக்கறது எனக்கு புடிக்கல. எனக்கு பணக்காரிய மாறணும்.நிறைய பணம் இருந்த நான் வேல பக்க வேண்டாம்ல"னு தன்னோட அசைய சொல்லி நாணயத்தை போட்டா. அதே மாதிரி ஒரு ஆண்மகன் கிணறு கிட்ட வந்து, நான் குண்டாக கூடாதுனு பாத்து பாத்து சாப்பட்ற.கஷ்டமா இருக்கு. நான் எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக கூடாதுனு" கேட்டுக்கிட்டாரு. ஜோனாதனனுக்கு கூட ஒரு ஆசை இருந்துச்சு. யாருக்கும் தெரியாம இரவுல வந்து, ஹாய் 'விஷிங் வெள்' உன்கிட்ட ஒன்னு கேக்கணும். "நான் ஒரு பயந்தாக்கொளி. எனக்கு மெஸ்ஸினு ஒரு பொண்ண ரொம்ப புடிக்கும்.அவ கிட்ட பேச பயமா இருக்கு, நான் என்ன பண்ணாலும் அவளுக்கு புடிச்ச மாதிரி பண்ணிடுனு" தன்னோட ஆசையா முன்வெச்சாரு. அடுத்த நாள், ஜோனாதன் கிட்ட மெஸ்ஸி தானாக வந்து, "ஹாய் ஜோனாதன்"னு சொல்லி சிரிச்சாங்க. ஜோனாதன்க்கு ஒரே ஆச்சர்யம் "என்னோட பேர் உங்களுக்கு தெரியுமா?"னு கேட்டாரு. அதற்கு மெஸ்ஸி, "நீங்க ரொம்ப காமெடிய பேசறீங்க.உங்கள ரொம்ப புடிச்சிருக்கு"னு சொன்னாங்க. ஜோனாதன்க்கு சந்தோஷம் தாங்கமுடியல. அடுத்து பணக்காரியகனும் னு நெனச்ச அந்த பெண்மணி தன்னோட பூக்கடைய மூடிட்டாங்க. கட்டுக்கட்டா பணத்தோட தன்னோட வீட்டுல ரெஸ்ட் எடுத்தாங்க. அடுத்தாக, எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக கூடாதுனு நெனச்ச அந்த ஆண்மகன் துங்கற நெறைய தவிர மற்ற எல்லாநேரமும் சாப்டுட்டு சந்தோசமா இருந்தாரு. ஆனா, இதெல்லாம் கொஞ்ச காலம்தா. ஜோனாதன் வாழ்க்கைல மெஸ்ஸி ஒரு அங்கமா மாறிட்டாங்க.அதாவது மெஸ்ஸியோட முழுநேர வேலையே ஜோனாதன் ரசிக்கறதா மாறிடுச்சு.ஜோனாதன்யோட எல்லா செயலையும் மெஸ்ஸி மூக்கை நொழைக்கறமாதிரி இருந்துச்சு. அப்பறம் நகரத்துல பூக்கடையே இல்லாம போயிருச்சு. மக்கள் ஏங்க ஆரம்பிச்சாங்க. அந்த பெண்மணிக்கு வாழ்க்கை சலிப்புதட்ட ஆரம்பிச்சுது. எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக கூடாதுனு நெறைய சாப்பிடு அந்த ஆண்மகன் மருத்துவமனையில உடல்நிலை சரி இல்லாம அனுமதிக்கபட்டர். ஆசை பட்டவர்களுக்கு எல்லாம் கொஞ்ச நல்ல தங்களோட ஆசை சலிப்பா இருந்தாலே 'விஷிங் வெள்' சபிக்கபடத்தை பக்கபட்டுச்சு. 'விஷிங் வெள்'ள எல்லாரும் குறைசொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஜோனாதன் அப்படி பண்ணல. ஏன்னா ஜோனாதன் அம்மா 'விஷிங் வெள்' பத்தி நெறைய ஜோனாதன் கிட்ட சொல்லிருக்காங்க. ஜோனாதன் 'விஷிங் வெள்'க்கு என ஆச்சுன்னு கண்டுபிடிக்க நெனைச்சாரு.ரொம்ப நாள் 'விஷிங் வெள்' சுத்தி ஆராய்ச்சி செய்துட்டு இருந்துச்சு. மெஸ்ஸியும் அவரை சுத்தியே இருந்தாங்க வழக்கம் போல. 'விஷிங் வெள்' மூடப்பட கூடாதுனு அவரு ஆசைபட்டாரு. ஒருநாள் நல்ல தூங்கிட்டு இருந்தாரு.அப்போ ஜோனாதனோட அம்மா அவர் கனவுல வந்தாங்க,"ஜான், உன்னோட கேள்விக்கான பதில் அந்த தபால்பெட்டில இருக்குனு சொன்னாங்க. நாடு இரவுல ஜோனாதன் ஓடி அந்த தபால் பெட்டியை ஓபன் பண்ணாரு. அதுல ரோசா னு எழுதப்பட்ட ஒரு கைசெயின் கெடச்சுது. மறுநாள் காலைல அவரு அத எடுத்துக்கிட்டு நகரத்துல இருக்க நகரத்துல இருக்க நகைக்கடைக்கு போறாரு. அங்க அந்த கைசெயின் காமிச்சு அதோட விவரத்தை கேட்டாரு. கடையோட உரிமையாளர் அத பாத்ததும் இது ரோசா கு அன்பளிப்பா பண்ணது. ரோசாவ தனக்கு நல்ல தெரியும்னு சொன்னாரு. ஜோனாதன் ரோசாகும்
கினருக்கும் இருக்கற உறவை பத்தி தெரிஞ்சுக்க நெனைச்சாரு. நெறைய வருஷங்களுக்கு முன்னாடி ரோசா சின்ன பொண்ணு. டெய்லி அவ 'விஷிங் வெள்' கிட்ட வந்து பேசுவா. அவ வந்தாலே 'விஷிங் வெள்' ஒளிவீசும், நெறைய ஆசைகளை 'விஷிங் வெள்' கிட்ட கேப்பா. அதில நியாமான ஆசைகளா இருக்கும். நல்ல படிக்கணும், தைரியமா இருக்கனும், எல்லார்கிட்டயும் அன்பா பழகணும்னு கேப்பா. 'விஷிங் வெள்' அதையெல்லாம் நிறைவேற்றி ரொசாவா சந்தோசமாக்கும். இளம் பெண்ணான ரோசா ஒரு நாள் 'விஷிங் வெள்' கிட்ட வந்து, அவள் ஒருத்தரை விரும்புவதாகவும், அவரோட இருக்கணும்னு கேட்டா. முதல் முறையை ரோசா ஓட ஆசையா 'விஷிங் வெள்' நிறைவேற்றலா. அதிருப்தி ஆனா ரோசா அதுக்கு அப்பறம் 'விஷிங் வெள்'ளை பக்க வரவே இல்லை. ஒரு மாசத்துக்கு முன்னாடி ரோசா இந்த நகரத்தை விட்டு வேற நகரத்துக்கு போட்டாங்கனு கடைக்காரங்க சொல்ராங்க. ஜோனாதன்கு இப்போ புரிந்து. கிணறு இந்த ஒரு மாசமாதா சரியா இல்ல. ரோசா நால தான். 'விஷிங் வெள்' இப்படி இருக்குனு.
ஒரு நாள் மாலைநேரம், ஜோனாதன், மெஸ்ஸி கிணறு கிட்ட வந்தாங்க. பின்னாடி ஒரு வயசான பாட்டி.அவங்க தான் ரோசா. "என்னோட பழைய நண்பர் கிட்ட அழைச்சுட்டு போறான்னு சொல்லிட்டு இங்க கூட்டிட்டு வந்துருக்கு"னு ஜோனாதன் கிட்ட கேட்டாங்க. ஜோனாதன் நடந்த எல்லாதையும் ரோசா கிட்ட சொன்னாரு. அவங்களுக்கு ஒரே ஆச்சரியம் " என்ன நடந்த எல்லாத்துக்கும் நான் தான் காரணமா? ஆனா இது வெறும் கிணறு தான இதுல என இருக்கு"னு கிணறு பக்கத்துல போறாங்க. நீ என்னோட ஆசையா நிறைவேற்றாம போனதால எனக்கு கோவம் இருந்துந்து உண்மை தான். ஆனா உன்ன நான் மன்னிச்சிட்ட. இப்போ என்னோட வாழ்க்கை சந்தோசமாதா இருக்கு. கவலபடதனு கிணறு மேல கைய வெச்சாங்க. கிணறு மறுபடியும் ஒளி வீசுச்சு. இத பாத்து ரோசா ஆச்சர்ய பட்டாங்க. "நீங்க சொன்னது உண்மை தானா?னு கேட்டாங்க. ஜோனாதன் அதற்கு, ஆமா ரோசா, உங்கள மிஸ் பண்ணதாலதான் கேட்டவங்க ஆசையெல்லாம் இந்த கிணறு இதுவரைக்கும் நிறைவேற்றி இருக்கு"னு சொன்னாரு. "இப்போ தா எனக்கு புரிந்து நான் சரியான விசயத்துக்கு ஆசைபற்றுக்கணும். விவரம் தெரியாத வயசுல நான் யோசிக்காம ஒரு விசயத்துக்கு ஆசைப்பட்ட அத கிணறு நிறைவேற்றலானு கோவப்பட்டது . என்னோட தப்பு தான். உன்னோடது இல்லனு". கிணறு கிட்ட சொன்னாங்க . ஜோனாதன்க்கு புரியல. "என்ன சரியான ஆசையா அப்படினா?" னு கேட்டாரு. அதற்கு ரோசா, "ஆமா அந்த தபால் பெட்டில 'விஷ் வெள்'னு எழுதுனது நான் தான்.
இந்த கிணறு கிட்ட எல்லாரும் சரியான விசயங்களுக்கு ஆசைப்படணும். அத இந்த கிணறு நிறைவேற்றும்னு நான் நம்புனேன். அத மக்களும் நம்பனும்னு நெனச்ச.நானே அத மறந்து தேவையில்லாத ஆசையா கேட்டு தப்பு பண்ணிட்டானு" சொன்னாங்க. ரோசா 'விஷிங் வெள்'ள கட்டித்தழுவிக்கிட்டாங்க. கிணறு சரியாவதை ஜோனாதனும் மெஸ்யும் அத கண்ணீர் மல்க பாத்தாங்க. ஜோனாதன் சொன்னாரு, மெஸி எங்க அம்மா சொன்னது சரி தான். உன்னோட பதில் தபால் பெட்டில இருக்குனு சொன்னாங்க. உள்ள இல்லை.வெளிய இருக்கும்.அது சரியான விசயங்களுக்கு ஆசைப்படணும்னு .இனி நமக்கு வேணுங்கற ஆசை எல்லாமே கேக்காம, சரியான விசயங்கள நெனச்சு சரியான விசயங்களுக்கு ஆசை படுவோம்னு" சொன்னாரு. மெஸ்ஸி கேட்டுட்டு இருந்தாங்க. திடிர்னு மெஸ்ஸி கனவுல இருந்து முழிச்சது போல ஜோனாதன பாத்து "யாரு நீ? நான் இங்க என்ன பண்றனு கேட்டுட்டு வீட்டுக்கு போய்ட்டாங்க. ஜோனாதன் சிரிச்சுட்டு விட்டுட்டாரு. மேலும் தவறா போன பூக்காரி வாழ்க்கையும் பழைய நிலைமைக்கு திரும்பிருச்சு. மருத்துவமனையிலிருந்து அந்த வாலிபன் சரி ஆகி வீடு திரும்பினான். அதற்கு அப்பறம் சரியான ஆசைகளை மட்டும் அந்த கிணறு நிறைவேற்றியது. ரோசாவும் விஷிங் வெள்ளும் தங்கள் நட்பை தொடர்ந்தார்கள்.












Click it and Unblock the Notifications