Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: விவேக்கின் தீர செயல்.. முட்டாள்தனமானதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க, எல்லோரும் பரீட்ச்சைக்கு தயார் ஆகிட்டு இருக்கீங்களா.. சரி நீங்க உங்கள் வாழ்க்கையில் இதுவரை செய்த தைரியமான செயல் இருந்தால் கண்டிப்பா கமெண்டில் சொல்லலாம். நம்ம கதையில் விவேக் செய்த தைரியமான செயலை பற்றி படிக்கலாமா வாங்க.

ஏய்.. பாத்து பொறுமையா என ஒரு குரல் கேட்டது. டினு தான் விவேக்கை பார்த்து சொல்லி கொண்டிருந்தாள். டினு, வினு இரட்டையர்கள். விவேக் ஒரு சுவரின் மேல் ஏறி நடந்து கொண்டிருந்தான். அது கொஞ்சம் உயரமானதாகவும் கரடு முரடாகவும் இருந்தது. இருந்தாலும் விவேக் அதில் ஏறி சாகசம் செய்வது போல நடந்து கொண்டிருந்தான்.

kids story wild stories children stories

அந்தப்பக்கம் ஆழமான ஆறு உள்ளது என ரேவதி சொல்ல, எனக்குத்தான் நீச்சல் தெரியுமே என்றான் விவேக். இருந்தாலும் நீ நடக்கும் சுவரின் பக்கம் ஆழம் அதிகம் இப்படி செய்யாதே என ரேவதி சொல்ல, என்ன நான் விழுந்தாலும் தப்பிக்க தெரியாது என்று சொல்கிறாயா? அதெல்லாம் நான் தைரியசாலி எனக்கு ஒன்றும் ஆகாது முடிந்தால் நீ ஏறு, என்னை பார்த்து பொறாமைப்படாதே என அவளை கேலி செய்தான் விவேக்.

தூரத்தில் இருந்து எல்லோரும் வாங்க ஸ்னாக்ஸ் சாப்பிடலாம் என குரல் கேட்க டினு, வினு அவங்க அம்மாவிடம் வந்தார்கள். விவேக், ரேவதி, டினு, வினு அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாட ஆசைப்பட்டதால் வினுவின் அம்மாவான லீனா இவர்களை அழைத்து வந்தார். அப்போது ரேவதி, விவேக் செய்வதை லீனாவிடம் சொல்ல, அப்படியெல்லாம் செய்யாதே விவேக் என கண்டித்தார்.

இவளால் செய்ய முடியாது என என் மேல் பொறாமையில் பேசுகிறாள் என சொல்லிவிட்டு ஸ்னாக்ஸ் எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த ஆறு இருந்த சுவருக்கு சென்றான் விவேக். ரேவதிக்கு சுயமரியாதை சீண்டியது போல ஆனதால் அவளும் அந்த சுவரில் ஏறினாள், ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருந்ததால் அவளால் சரியாக அதில் ஏறமுடியாமல் கீழே விழுந்தாள். அதை பார்த்து விவேக் சிரிக்க ரேவதிக்கு இன்னும் கோவம் அதிகமானது.

உனக்கு தைரியமே இல்லை அதனால் தான் கீழே விழுந்தாய் என விவேக் கேலி செய்ய இது ஒன்னும் தைரியம் இல்லை நீ லூசுத்தனமாக அதில் ஏறினால் நானும் ஏறணுமா என சொல்ல விவேக் மீண்டும் சிரித்துக்கொண்டு ஜான்சி ராணி தெரியுமா அவங்க உன்ன மாதிரி பயந்து கோழை மாதிரி இருந்திருந்தா நாட்டை காப்பாத்திருக்க முடியுமா என பேச, அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றால் ரேவதி.

ரேவதி அழுவதை பார்த்த அவளது தம்பி பிரதீப் அம்மாவை கூப்பிட, விவேக் தன்னை கோழை என கேலி செய்ததை சொன்னாள் ரேவதி. சரி நமது வீட்டின் நான்காவது மாடியில் இருந்து குதிக்க சொன்னால் கூதிப்பிய என்று அம்மா கேட்க, அவ கண்டிப்பா குதிப்பாள் இப்போ இருக்குற நிலைக்கு என வம்பிழுத்தான் பிரதீப். இல்லை அம்மா என்றாள் ரேவதி. ஏன் என்று கேட்டார் அம்மா.

விழுந்தால் கண்டிப்பாக அடிபடும் என சொல்ல, அப்போ நீ கோழை குதிக்கவில்லை என்று சொன்னால் ஏத்துகொல்வாயா என கேட்டார் அம்மா. அதெப்படி முட்டாள் தான் இப்படி செய்வான் என்றாள் ரேவதி. உனக்கு செய்ய வேண்டும் என்றால் அது தேவையான ஒன்றாக இருந்தால் கண்டிப்பாக செய்ய கூடிய திறமை உன்னிடத்தில் இருக்கிறது அல்லவா என அம்மா கேட்டார். ஆமாம் அம்மா, ஆனால் ஜான்சி ராணி எல்லாம் திறமையாக தைரியமாக சண்டை போட்டார்கள், நான் அப்படி இல்லை தானே கோழை போல வந்துவிட்டேன் அல்லவா என்றாள் ரேவதி.

சரி, விவேக் தைரியசாலி என்று வைத்து கொள்ளலாம். அவன் அந்த குளத்தில் விழுந்த யாரையாவது காப்பாற்றினானா இல்லை அவன் முட்டாள்தனமாக காயம் ஏற்படும் என தெரிந்து சுவரின் மேல் ஏறி சாகசம் செய்தான். ஆனால் ஜான்சி ராணி நாட்டிற்காக மக்களுக்காக உயிரை விடும் அளவுக்கு தைரியமாக போரிட்டார். இரண்டும் ஒன்றா என்றார் அம்மா.

தெளிவான ரேவதி, விவேக் வீட்டின் கதவை தட்டி அவனை அழைத்தாள். திரும்பி வீட்டிற்கு வரும்போது புன்னகையோடு வந்ததை பார்த்த பிரதீப் விவேக்கை நல்ல திட்டிவிட்டாள் போல என சிரித்தான். என்னதான் விவேக்கிற்கு ரேவதி எடுத்து சொன்னாலும் அவனை பொறுத்தவரை அதுதான் தைரியம். முட்டாள்தனமான அந்த செயலை அவன் மாற்றிக்கொள்ள மாட்டான்.

நீங்கள் தைரியமானவராக மாற போறீங்களா இல்லை முட்டாளாக இருக்க போறீங்களானு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+