குழந்தை நீதி கதைகள்: அப்பாவின் கைவசம் வந்த வீடு.. ஷாக்கான இரட்டையர்கள்!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. அப்பா என்றால் யாருக்கெல்லாம் பிடிக்கும். ஸ்ட்ரிக்ட்டான அப்பாவிடம் மாட்டிக்கொண்ட இரட்டையர்களின் கதையை படிக்கலாமா.. வாங்க
தீப்தி.. தீப்தி.. எங்கே இருக்கிறாய் என்றார் அப்பா. அத்தையின் வீட்டில் இருந்து பொறுமையாக வெளியே வந்தாள் தீப்தி. தீபக் எங்கே என்றதும் பின்னாடியே அவனும் வந்தான். அம்மா மருத்துவமனையில் இருந்து நாளை வந்துவிடுவாள். நாம் வீட்டுக்கு செல்லலாம் என்றார். சந்தோஷத்தில் குழந்தைகளின் முகம் மின்னியது.

தீப்தி, தீபக் 8 வயதான இரட்டையர்கள். அவர்களின் அம்மாவிற்கு குடலில் ஏற்பட்ட வலி காரணமாக, ஆப்ரேஷன் செய்து 5 நாட்கள் ஆகிறது. இருவரும் அதுவரை அவர்களின் அத்தை வீட்டில் தான் இருந்தார்கள். அங்கு அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் நரகத்தில் இருந்தது போலவே உணர்ந்தார்கள். அப்பா வந்து அழைத்ததும் அம்மா வந்துவிடுவார் என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள்.
வீட்டுக்கு போனதும், இனிமேல் நான்தான் சமைக்க போகிறேன், என்று அப்பா சொல்லவும் இருவரும் ஷாக் ஆகி அப்பாவுக்கு சமைக்க தெரியுமா என முழித்தார்கள். அப்புறம் உங்கள் இருவருக்கும் வேலைகளை பிரிச்சி கொடுப்பேன் அது எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும் என்றார். அம்மா வந்தாலும் எதுவும் வேலை செய்ய முடியாது. அவருக்கு 1 மாதம் ஓய்வு தேவை என சொல்ல மீண்டும் சோகமானார்கள் தீப்தி, தீபக்.
அப்பா காலையில் சாண்டவிச் செய்து கொடுத்தார். மதியம் பிரெட் உடன் முட்டை கொடுத்தார். குழந்தைகள் அது பிடிக்காது என சொல்லி வேண்டாம் சொல்ல, இதைத்தான் சாப்பிட்டாக வேண்டும் என மிரட்ட அவர்கள் அதை சாப்பிட்டார்கள். அப்பா கைகள் பார்ப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருப்பதாலே குழந்தைகள் பயந்தார்கள்.

அம்மாவும் வீட்டுக்கு வந்தார். தீப்தி.. தீப்தி அம்மா படுக்கைகளை சரி செய்து விட்டாயா என கேட்க, மறந்தவளாய் வேக வேகமாக ஓடி சென்று தயார் செய்தாள். தீபக் அம்மாவின் அறையை சுத்தம் செய்து விட்டாயா என்று கேட்டதும் அவன் மறந்து போனதை பார்த்த அப்பா ஒரு பார்வை பார்க்கவும் அவனும் அங்கிருந்து ஓடி போனான். குழந்தைகளின் முகம் வாடி போனதை பார்த்த அம்மா, நான் பார்த்து கொள்கிறேன் அவர்கள் குழந்தைகள் என்று சொல்ல, அப்பா அதெல்லாம் வேண்டாம் உனக்கு ஓய்வு தேவை என்று அறைக்கு அழைத்து சென்றார்.
அம்மா வீட்டில் இருக்கும்போது இருவரும் விரும்பியதை சாப்பிட்டார்கள், கேட்கும்போதெல்லாம் ஸ்னாக்ஸ் கொடுத்தார். ஆனால் இப்போது எல்லாமே மாறிவிட்டது. ஸ்னாக்ஸ் என்றாலே சாக்லேட் சாப்பிட அப்பா தருவதில்லை. அவர் கொடுக்கும் உணவுகள் எல்லாமே, ஆரோக்கியமானதாக இருந்ததே தவிர அவர்களுக்கு பிடித்ததாக இல்லை.
ஒருநாள் எப்போதும் போல, தீபக் விளையாடிவிட்டு அவனது கிரிக்கெட் பொருட்களை எல்லாம் சேர்த்து வழியில் வைத்துவிட்டு மறந்து போனான். அது இருப்பது தெரியாமல் அப்பாவின் கால் இடற, அவர் தீபக் என கத்தினார். அவன் பயந்து போக உன் விளையாட்டு பொருட்களை எல்லாம் இப்படித்தான் வைப்பாயா என கத்த அவன் டிவியில் கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவன் மறந்து போக மீண்டும் அப்பா அதே போல கால் இடற அவ்வளவுதான் தீபக் அலறி அடித்து கொண்டு ஓடி எடுத்து ஓரமாக வைத்தான்.
அதில் இருந்து எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில இருந்தன. கொடுக்கப்பட்ட உணவுகளை சரியாக சாப்பிட்டார்கள். அம்மா உடல்நிலை தேறி வரும்போது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். இப்போது அம்மாவுக்கு நிறையவே நேரம் கிடைத்தது. அப்பாவின் கண்டிப்பு குழந்தைகளை நேர்த்தியாக மாற்றியது என்பது அம்மாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications