குழந்தை நீதி கதைகள்: மூளையை தீட்டு; வேலையை காட்டு- மணியும் மக்களும்!
ஹலோ குட்டிஸ் எப்படி இருக்கீங்க. நீங்க எல்லாரும் சமத்தா இருந்தா மட்டும் போதாது, அறிவாவும் இருக்கனும்.நம்ம பட்டுலு மாதிரி, உங்களுக்கு பட்டுலு யாருனு தெரியாதுல. வாங்க பட்டுலு கதையை சொல்றேன்.
அழகான சுட்டி பொண்ணு தான் நம்ம பட்டுலு. ஒரு அழகான சிறிய கிராமத்துல பட்டுலுவும் அவங்க அப்பா மோட்டூவும் வாழ்ந்து வந்தனர். அளவான மக்கள் தொகையோட அந்த ஊர் செழுமையாக இருந்தது. பட்டுலு கிராம மக்கள் அனைவரிடமும் அன்போடு பழகுவா. மக்களுக்கும் பட்டுலு வ ரொம்ப பிடிக்கும். மோட்டுகிட்ட சொல்லுவா," அப்பா நா படிச்சு பெரிய பொண்ணா ஆகி இந்த மக்களுக்கு நல்லது செய்வேன்". என்று , மோட்டூ வும் பட்டுலு வ அறிவாளி பொண்ணா வளர்த்து வந்தார். கிராமம் நிம்மதியா இருந்து வந்தது. ஆனால் அது ரொம்ப நாள் நிலைக்கவில்லை.

அந்த கிராமத்தின் எல்லையில் ஒரு அடர்ந்த காடு இருந்தது. கிராமத்திலிருந்த எல்லை கோவிலில் ஒரு தங்கமணி கட்டப்பட்டிருந்தது.ஒருநாள் ஒரு திருடன் அந்த மணியை திருடி கொண்டு காட்டுக்குள் ஓடி விட்டான்.ஆனால் துரதிஷ்டவசமாக அன்றே அவனை ஒரு புலி கொன்று தின்றுவிட்டது.
கோவிலுக்கு சொந்தமான தங்கமணி காணாமல் போனதில் மக்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். அன்று இரவு அந்த மணி அடிக்கும் ஓசை கேட்டது. பல பக்கங்களிருந்தும் மணியோசை கேட்பதுபோல அவர்களுக்கு தோன்றியது.இதைக்கேட்டு கிராம மக்கள் பயந்து போனார்கள்.கோவில் மணியை திரும்பபெற தாங்கள் எந்த முயற்சியும் செய்யாததால் எல்லை தெய்வம் கோபித்து கொள்வதாக அந்த மக்கள் எண்ணி கலங்கினர்.
கிராமமக்களின் இந்த நிலையைக்கண்டு பட்டுலு கவலைக்கொண்டாள்.தனது அப்பாவிடம் சொல்லி புலம்பினாள். கிராமமக்கள் ஒரு முடிவெடுத்தனர். கிராமத்திலுள்ள ஆண்மகன்கள் காட்டுக்குள் சென்று மணியை தேடிக்கொண்டு வரவேண்டுமென்று .மோட்டூ வும் கிளம்ப தயாரானார். அப்போது பட்டுலு, "அப்பா நானும் வரேன்.மணியை கண்டுப்பிடிச்சு கிராம மக்கள சந்தோசப்படுத்தனும்" என்றாள். பட்லுவின் எண்ணத்தை கண்டு நெகிழ்ந்த மோட்டு, யாருக்கும் தெரியாமல் பட்டுலு வை மறைத்து கொண்டு சென்றார்.
கிராமமக்கள் தேட ஆரம்பித்தனர்.பயத்தினால் யாரும் காட்டின் உட்புறம் செல்லவில்லை. வானம் இருட்ட தொடங்கியது. மணியோ கிடைத்தப்பாடில்லை. நன்கு இருட்டிய சமயம் அந்த மணியோசை கேட்டது,மக்கள் பயந்தனர். ஒருமுறை ஒரு திசையிலிருந்தும் மறுமுறை வேறுதிசையிலிருந்தும் மணியோசை கேட்டது. இதற்குமேல் இங்கு இருக்கக்கூடாது என்று அனைவரும் கிளம்பினர். மோட்டூ வும் பட்டுலு வை
பத்திரமாக வீடு கொண்டுவந்து சேர்த்தார். பட்டுலு விற்கு தூக்கம் வரவில்லை.மோட்டூவை எழுப்பி, "அப்பா எனக்கு மறுபடியும் அந்த காட்டுக்கு போகணும். மணியை கண்டுபிடிக்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு" என்றாள்.மோட்டூ வோ, "இப்போ போகமுடியாது பட்டுலு,தூங்கு" என்றார். விடியும்வரை காத்திருந்த பட்டுலு, அப்பாவிடம் அடம்பிடித்து காட்டுக்கு கூட்டி சென்றாள்.அவர்கள் போன கொஞ்சநேரத்தில் மணியோசை மெதுவாக கேட்டது.காட்டின் உட்புறம் நோக்கி சென்றனர். மணியோசை அதிகமாக கேட்கவே ஓசை வரும் திசையை நோக்கி ஓடினாள் பட்டுலு.மோட்டூவும் பின்னால் ஓடினார்.பட்டுலு ஒரு இடத்தில நின்றாள். அவள்முன் ஒரு குரங்கு கூட்டம் ஒரு முரசு, தங்கமணி மற்றும் சில பொருட்களை கொண்டு விளையாடிக்கொண்டு இருந்தன. அதை பார்த்து மோட்டூ வும் பட்டுலு வும் சிரித்தனர், இவ்வளவு நாள் குரங்குகள் தான் மணியோசை எழுப்பி மக்களை பயமுறுத்தியதை எண்ணி. பின்பு சில பழங்களை கொண்டு குரங்குகளை திசை திருப்பி அனுப்பிவிட்டு தங்கமணி மீட்டனர்.நேராக சென்று கிராமமக்களிடம் தங்கமணியை கொடுத்து நடந்த நிகழ்வுகளை விவரமாக கூறினார்கள், மோட்டூ வும் பட்டுலு வும். கிராமமக்கள் பட்டுலு வின் அறிவையும் துணிச்சலையும் கண்டு வியந்தனர். எப்படியம்மா உனக்கு இது தோன்றியது என கேட்டனர். அதற்கு, " ஸ்கூல் ல மிஸ் சொன்னாங்க, எதுக்கும் பயப்படக்கூடாது.அறிவை பயன்படுத்தி நடக்கும்னு. அத தான் நான் செஞ்ச" என்று சொன்னாள். கிராமமக்கள் பட்டுலு வை பாராட்டினார்கள். மோட்டூ வும் தனது மகளை கொஞ்சியவாறு வீட்டிற்கு நடந்தார். அன்றிலிருந்து கிராமமக்கள் பகுத்தறிவோடு நடந்துகொண்டனர்.
கதை புடிச்சுதா குட்டிஸ். நீங்கள் எதற்கும் பயப்படாம அறிவைக்கொண்டு ஒரு வேலையை செய்யவேண்டும், நம்ம பட்டுலு மாதிரி சரியா.
பகுத்தறிவு விளக்கை ஏற்றி, மூடநம்பிக்கை இருளை ஓட்டு
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications