குழந்தை நீதி கதைகள்: ஒரு பாயாசத்தால் வந்த வினை..வீட்டையே கொளுத்திய கரடி!
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. லீவில் எல்லாரும் என்ன பண்றீங்க.. கார்ட்டூன் பார்த்தே போரடிக்குதா.சரி உங்க புகைப்படங்களை ஒன் இந்தியாவில் போடுவதற்கு இந்த கோடையில் ஒரு வாய்ப்பு இருக்கு உங்களுக்கு தெரியுமா? அந்த வாய்ப்பை இந்த கோடையில் தவற விடாதீர்கள்.. சரி, உங்களில் யாருக்கெல்லாம் பாயாசம் பிடிக்கும். அந்த பாயாசத்தால் இங்க என்ன ஆச்சு தெரிஞ்சிக்க கதையை படிங்க.
பாபு ஒரு கிராமத்தில் நல்ல ருசியான பழங்களை கொடுக்க கூடிய மாந்தோட்டம் மற்றும் வாழை தோட்டம் வைத்திருந்தான். அதில் விளையும் பழங்களுக்கு வெளியூர் சந்தையில் நல்ல விலையும் கிடைத்தது. அதை வைத்து மனைவி சரளாவுடன் நன்றாக வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் மாம்பழங்களை விற்று கொண்டிருக்கும்போது அவனது தோழனை பார்க்க, அவன் மதிய உணவிற்கு வீட்டுக்கு அழைக்கிறான். பாபுவும் விற்று விட்டு வருகிறேன் என்று சொல்ல, அவனும் காத்திருந்து இணைந்தே வீட்டிற்கு சென்றார்கள். நண்பனின் மனைவி தடபுடலாக விருந்தை போல ஏற்பாடு செய்தாள். பொறுமையாக தங்கள் நினைவுகளை பேசிக்கொண்டிருந்த நண்பர்கள், உணவு தயார் ஆனதும் திருப்தியாக சாப்பிட்டார்கள். கடைசியாக பாயாசம் கொண்டு வந்து கொடுத்தார் நண்பனின் மனைவி.
அதை சாப்பிட்டதும் பாபு அவனையே மறந்தது போல் உணர்ந்தான். அத்தனை ருசி, நல்ல முந்திரி, ஜவ்வரிசி போட்டு பாலில் நன்றாக ஊறிய சேமியா என பாயாசம் பட்டையை கிளப்பியது என, மீண்டும் மீண்டும் வாங்கி குடித்தான். வயிறு முட்ட சிறிது ஓய்வெடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பினான். அவன் சாப்பிட்டதை பற்றி மனைவியிடம் சொல்ல, அவளும் பாயாசம் சாப்பிட ஆசைப்பட்டாள். சரி நான் போய் கொஞ்சம் விறகுகளை எடுத்து வருகிறேன் என்று பாபு காட்டுக்குள் போனான்.
கொஞ்ச தூரம் சென்றதும், மரக்கிளைகளை ஒடிக்க, அங்கு ஒரு மரத்தில் ஏதோ மின்னுவதை பார்த்து பயந்தான். அது ஒரு கரடியின் கண்கள். கரடி அவன் செய்வதை பார்த்து கொண்டு பேச தொடங்கியது, யாரப்பா நீ, இங்கு என்ன செய்கிறாய்? இந்த ராத்திரியில் என்று கேட்க, பயந்து நடுங்கிய பாபு, அது..அது.. அது வந்து, என இழுத்தான். சமைக்க விறகு இல்லையா என கரடி கேட்டது. ஆமாம், ஆமாம் என வேகமாக சொன்னான் பாபு. இந்த அர்த்த ராத்திரியில் அப்படி என்ன செய்ய போகிறாய் என்று கேட்க, இல்லை, நாளை செய்வதற்குத்தான். இன்று விறகுகளை எடுத்தால் நாளை தேவையான பொருட்களை வாங்க செல்வேன் என்றான்.
ஓ.. அப்படி என்ன சமைக்க போகிறாய், எவ்வளவு விறகு கட்டைகள் வேணும் என்று கரடி கேட்க, பாபு பாயசம் செய்ய போகிறேன் என்று சொன்னான். அது எப்படி இருக்கும் என்று கேட்டது கரடி. நிறைய முந்திரி, பால் ஊற்றி இனிப்பாக இருக்கும் என்று சொன்னான். கரடிக்கு அதை ருசி பார்க்க ஆசை வந்தது. எனக்கும் தருவியா என்று கேட்க, முடியாது என்று சொன்னால் பாபுவின் உயிரே போகலாம், தப்பித்தால் போதுமென சரி என்று சொன்னான். சரி உனக்கு தேவையான விறகுகளை நான் கொண்டு வருகிறேன். எவ்வளவு வேண்டும் என்று கேட்க, பேராசை பிடித்த பாபு 50 கட்டைகள் வேண்டும் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
காட்டில் நடந்தவற்றை எல்லாம் சரளாவிடம் சொல்ல, அவளும் அப்போ நிறைய செய்ய வேண்டும் என்றாள். மறுநாள் பாயாசத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தான் பாபு. சரளா மணக்க மணக்க பாயாசத்தை தயார் செய்தாள். பாயாசம் ரெடி ஆனதும் கரடிக்காக கொஞ்ச நேரம் காத்திருந்தார்கள். ருசி பார்க்க ஆரம்பித்து பாயசம், தீரும் வரை இரண்டு பேருமே கொஞ்சம் கொஞ்சமாக குடித்து முடித்தார்கள். பாயாசம் தீர்ந்தது.
கரடி வரும் நேரம் நெருங்கவே பயந்து போன இருவரும் இருந்த பொருட்களை வைத்து செய்யலாம் என முடிவு செய்ய, பால் மிகவும் குறைவாக இருந்தது. அதில் தண்ணீரை கலந்து ஜவ்வரிசிக்கு பதிலாக பொடியாக கற்களை போட்டு, ஏலக்காய் இல்லாமல் கறிமசாலாவை போட்டு ஏதோ செய்தார்கள். கரடிக்கு பாயாசத்தின் ருசி தெரியவா போகுது என கேவலமாக யோசித்த பாபு கிடைத்த பொருட்களை எல்லாம் பாயாசத்தில் போட்டான். அது ரெடி ஆனதும் ஒரு பானையில் ஊற்றி வெளியில் வைத்துவிட்டு தூரமாக மறைந்தார்கள்.
சொன்னதுபோலவே 50 விறகு கட்டைகளை தூக்கி கொண்டு கரடி வர, வெளியில் பாயாசம் இருப்பதை பார்த்ததும் குஷியாகி பாபுவை அழைத்தது. அவன் வரவில்லை, பொறுமை இழந்த கரடி பாயாசத்தை குடித்தது. முதலில் நன்றாக இருப்பதாக எண்ணி குடித்த கரடிக்கு, பால் மிகவும் தண்ணியாக இருப்பதை புரிந்து கொண்டது. மேலும் கூழாங் கற்கள் வாயில் கடிபட கோபம் உச்சிக்கு ஏறியது. அந்த பானையை தூக்கிப்போட்டு உடைத்தது. கூப்பிட கூப்பிட பாபு வரவில்லை. கரடியின் கோபத்தை பார்த்த பாபு மிகவும் பத்திரமாக பதுங்கினான்.
நீண்ட நேரம் கூப்பிட்டும் வராத பாபுவின் மேல் கோபம் கொண்ட கரடி அவனுக்கு வருமானம் கொடுத்த மாந்தோட்டத்தையும், வாழை தோட்டத்தையும் அடித்து நொறுக்கியது. கொண்டு வந்த கட்டையை எடுத்து தீ மூட்டி வீட்டை கொளுத்தியது. தன்னை ஏமாற்றிய பாபுவை பழி தீர்த்ததாக எண்ணி அங்கிருந்து கிளம்பியது கரடி.
ஒரு பாயாசத்தை மேல் உள்ள ஆசையால் கொடுத்த வாக்கை மறந்து மொத்தத்தையும் இழந்த பாபு கதறி அழுதான். அவன் பேராசையால் பெரு சேதமே அடைந்தான்.
ஆகையால் குழந்தைகளே! ஒருவருக்கு நீங்கள் கொடுக்கும் சத்தியத்தை நிறைவேற்ற வேண்டும்.. இல்லையெனில் அவர்கள் காயப்பட்டு அதனால் வரும் இழப்பு பெரிதாக இருக்கும்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications