குழந்தை நீதி கதைகள்: இந்த அறிவு இல்லைனா? நீங்களும் கழுதைகளா தான் இருப்பீங்க!
சென்னை: Kids story in Tamil:
ஹலோ குட்டிஸ் எப்படி இருக்கீங்க, எல்லோரும் தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா? சரி, ஒரு விஷயத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் யாரோ ஒருவரால் மக்கள் கழுதையான கதையை படிக்கலாமா!

ஒரு பழமையான நகரம் வளர்ந்து பெரு நகரமாக மாறிய காலமது. அங்கு ஒரு நான்கு வழிச்சாலை இருக்கிறது. அதை கடந்து சென்றால் தான் மக்கள் மற்ற நகரங்களுக்கோ அல்லது அவர்கள் ஊரில் இருந்து மற்ற நாட்டிற்கோ பயணிக்க முடியும். வாகனங்கள், விலங்குகள், மனிதர்கள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் என அந்த சாலை எப்போதுமே பிஸியாக இருந்து கொண்டே இருக்கும்.
ஒரு நாள் அந்த வழியாக சென்ற ஒரு நான்கு பள்ளி சிறுவர்கள், அந்த சாலையின் ஓரத்தில் ஒரு சிறிய பாறை இருப்பதை பார்க்கிறார்கள். அதில் ஏதோ கிறுக்கியது போல அவர்களுக்கு தெரியவே அது என்ன என்ற ஆர்வத்தால் அதன் அருகில் சென்று பார்க்க அவர்களுக்கு அது சரியாக விளங்கவில்லை. உடனடியாடிய பள்ளிக்கு சென்று அங்கு அவர்களுக்கு பிடித்த ஆசிரியை கண்டு நடந்தவற்றை கூறுகிறார்கள்.
இதனை வருடமாக அது என்ன என்று கூட நிமிர்ந்து பார்க்காத மக்கள் மத்தியில் சிறுவர்கள் கூறியதை கேட்டு ஆசிரியர் அங்கு சென்று பார்த்தார். அவர் அதில் இருந்ததை அப்படியே வரைந்தார் அது பார்ப்பதற்கு ஒரு குச்சி, மனிதன், ஒரு கழுதை என மூன்றும் அந்த பாறையில் பொறிக்கப்பட்டது போல இருந்தது. சரி அதன் ஆர்வம் விடாமல், அருகில் இருக்கும் ஒரு அந்தக்காலத்தில் வாழ்ந்த ஒரு சாமியாரை பார்க்க செல்கிறார்கள். அவர்கள் போன நேரம் பார்த்து அவர் ஏதோ வெளியூருக்கு செல்ல அங்கு அந்த சாமியாரின் துணைக்கு சிஷ்யனாக இருந்தவன் ஏதோ வேலை செய்தவன் இருந்ததை பார்க்கிறார்கள்.
அவன் மாடுகளை பராமரித்து கொண்டு அந்த இடங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தான். அவன் பார்ப்பதற்கு அந்த அளவுக்கு அறிவாளியாக இல்லாவிட்டாலும், அவருடன் இருப்பதால் இவனுக்கு ஏதும் தெரிந்திருக்கும் என்று நம்பிய ஆசிரியர் அவனை கேட்க, அவனோ இதுவா என தெரிந்தது போலவே மிகவும் ஆர்வமாக பதில் சொல்ல முற்பட்டான். அவனுக்கு அது விளங்கவில்லை என்றாலும், அது அந்த பாறையை மனிதர்கள் அகர்பத்தி வைத்து கும்பிட்டால் நல்லது நடக்கும் இல்லையென்றால் பார்த்துவிட்டு சும்மா போகிறவர்கள் கழுதையாக மாறிவிடுவார்கள் என்று சொல்ல ஆசிரியர் பயந்தார்.
அப்போ சாமி நீங்களே அதை வந்து செய்து கொடுங்கள் என்று சொல்ல, அவனும் தன்னை பெரிய மேதாவியாக எண்ணி கொண்டு அங்கிருந்து சென்று பாறையை பூஜை செய்கிறான். இத பார்த்த மக்களும் கழுதையாக வேண்டாம் என்ற பயத்திலே தினமும் அந்த பாறையை வழிபட அந்த சிஷ்யனோ அவன் பெரிய கடவுள் போல நடந்து கொள்கிறான். வாயில் சில மந்திரங்களை முணுமுணுத்து கொண்டு மக்களை ஏமாற்ற ஆரம்பிக்கிறான். இப்படியே பல மாதங்கள் போகின்றன.
பெரியவர் அவரது பயணத்தை முடித்து கொண்டு அவரது இடத்திற்கு திரும்பி வந்தால் அவரது மாடுகள், வீடு என அனைத்தும் அலங்கோலமாக கிடப்பதை பார்த்து தனது சிஷ்யன் மேல் கோபம் கொள்கிறார். இவனை நம்பி இந்த வேலையை ஒப்படைத்தால் இதை கூட செய்யாமல் எங்கே போனான் என தேட , அவர் அந்த பாறையை பற்றி தெரிந்து கொண்டு அங்கு சென்றார்.
பாறையின் மேல் இருந்த வடிவங்களை பார்த்து இவன் கூறிய உளறல்களை மக்க எப்படி இப்படி முட்டாள் தனமாக நம்பி கொண்டிருக்கிறார்கள் என்று வியந்தார். மேலும் ஒரு பெரிய இரும்பு ராடை எடுத்து வந்து அந்த பாறையை உடைக்க ஆரம்பித்தார். முதலில் திகைத்த மக்கள் அவர் மேல் இருந்த நம்பிக்கையால் அவர்களும் அந்த பாறையை உடைத்தார்கள்.
சற்றும் எதிர்பார்க்காமல் அதில் இருந்து அந்த காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட புதையல் கிடைத்தது. மக்கள் ஆச்சர்யமாக பார்க்க. அந்த சாமியாரோ சிஷ்யனை பார்த்து, இப்படி எவனோ ஒரு முட்டாள் சொல்வது போல செய்தால் நீங்களும் இப்படி கழுதைகளாக தான் இருப்பீர்கள் இல்லை என்றால் எப்போதோ அந்த பாறையை இடித்து உங்கள் வாழ்க்கையை சரியாக அமைத்து இருப்பீர்கள் என்றார். அனைவரும் அவர்களின் அறியாமையை எண்ணி கூனி குறுகினார்கள். சிஷ்யன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான்.












Click it and Unblock the Notifications