குழந்தை நீதி கதைகள்: நிலா சாட்சி.. நிலா சாட்சினு ஏமாத்திட்டானே.. யாரா இருக்கும்?
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க. நாம இதுவரை படிச்ச கதைகளிலே நரி தான் எல்லோரையும் ஏமாற்றும் இல்லையா. ஏன் நம்ம கூட இருந்து யாராச்சும் ஏமாத்தினா அவங்களையே நம்ம நரி அப்படினு பட்ட பெயர் வைப்போம் இல்லையா. ஆனால் இங்க அந்த நரியை ஒருத்தங்க ஏமாத்திட்டாங்க எப்படினு கதையை படிச்சி தெரிஞ்சிக்கோங்க குட்டீஸ்.
ஒரு மலை கிராமம். அங்க வாழுற மக்களுக்குனு சொந்தமா நிலம் எல்லாம் கிடையாது. அவங்க பாக்குறாங்க இடங்களில் விவசாயம் பண்ணி, அறுவடை செய்து சாப்பிடுவாங்க. சுற்றி மலைகள், காடுகள் அப்படித்தான் இருக்கும். அதனால இங்க விலங்குகளும் அதிகம். அந்த மக்களுக்கு விலங்குகளிடையே ரொம்ப பழக்க வழக்கங்கள் இருந்தது.

ஒரு கிராமவாசி காட்டில் ஒரு பகுதில சில கேரட்களை விவசாயம் செய்வதற்காக நட்டு வைத்தான். அந்த நிலம் அவனது அல்ல. பக்கத்தில் அழகான நீரோடை இருந்ததால் கேரட் விளைய ஏதுவான இடம் என நினைத்து முடிவு செய்து அந்த இடத்தை சரி செய்தான்.
மறுநாள் வந்து அதற்கான தண்ணீர் மற்றும் களைகள் களைவது என வேலை பார்த்து கொண்டிருந்தான். அப்போது இதை பார்த்த நரி ஒன்று, விவசாயி நீ செய்வது சரி அல்ல இது என்னுடைய நிலம் நீ எப்படி இதில் விவசாயம் செய்வாய் என்றது. அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சட்டென யோசித்து உனக்கும் விளைச்சலில் பங்கு தருகிறேன் என்றான். நரியும் வேலை செய்யாமல் நமக்கு பலன் கிடைக்குது என எண்ணி ஒத்து கொண்டது. ஆமாம் என்ன விளைவிக்கிறாய் என்றது.
விவசாயி ஒரு நிமிடம் யோசித்தான், அது வந்து கேரட். இதன் வேர்களை நான் எடுத்து கொள்கிறேன். செழிப்பாக வளரும் இலைகளை நீ எடுத்து கொள் என்றான். நரி, வேர்களால் உனக்கு என்ன பயன், என்றது. விவசாயி அதை மலை அடிவாரத்தில் வாழ்வபர்கள் வாங்குவார்கள் என்றான். அது சரி, ஏன் வெட்டி கதை, உன்னை எப்படி நம்புவது என்றது. விவசாயி டக்கென வானத்தில் இருந்த நிலாவை காண்பித்து நிலா சாட்சியாக என்றான். நரியும் நம்புகிறேன் என்று சென்றது.
விவசாயி பாடு பட்டு அறுவடை நாளை நெருங்கினான். அவன் அறுவடை செய்து கொண்டிருக்கும்போது நரி அங்கு வந்தது. விவசாயி நரிக்கு இலைகளை கொடுத்துவிட்டு வேர்களை தன் பக்கம் வைத்து கொண்டான். விவசாயி கிளம்பும் நேரத்தில் நரி, ஒரு நிமிடம் நில் அந்த வேரை என்னிடம் கொடு நான் ருசி பார்க்கிறேன் என்றது. கேரட்டை கடித்த நரிக்கு விவசாயி தன்னை ஏமாற்றிவிட்டான் என தோன்றியது. இந்த வேர்கள் இனிப்பாக இருக்கிறது , நீ என்னை ஏமாற்றி விட்டாய் , இந்த இலைகளில் ருசி இல்லை. இனிமேல் என் நிலத்தில் நீ வரக்கூடாது என மிரட்டியது. விவசாயியும் சரி என்று சென்றான்.

கொஞ்ச நாள் கழித்து நரி , விவசாயியை தன் நிலத்தில் பார்த்தது. அதற்கு கோபமாக வந்தது இப்போது என்ன விளைவித்திருக்கிறாய் , பூக்களாக இருக்கிறது என்றது. சரி இந்த முறை எனக்கு வேர்கள் வேண்டும் என்றது நரி. விவசாயியும் சரி என்றான். உன்னை எப்படி நம்ப என்றது நரி. விவசாயி மீண்டும் நிலவின் சாட்சியாக உனக்கு அளித்த வாக்கின் படி இந்த முறை வேர்கள் உன்னுடையது என்றான். நரியும் சென்றது.
அறுவடை நாளும் வந்தது. நரி இந்த முறை கவனமாக எல்லா வேர்களையும் வாங்கி கொண்டது. அவனும் அறுவடை செய்தவற்றை எடுத்து வைத்து கொண்டான். நரி, எதற்கும் வேரை சாப்பிட்டு பார்க்கலாம் என சாப்பிட்டது. இது என்ன இப்படி இருக்கிறது என்றது. விவசாயி அது கடுகின் வேர்கள். இந்த முறை நான் பயிரிட்டது கடுகு என்றான். நரிக்கு கோபம் கொந்தளித்தது. இருந்தாலும் ஏமாந்தது தான் தான் என வருந்தியது. நிலா சாட்சியாகனு சொல்லியே ஏமாத்திட்டானே என வருந்தியது நரி.
குழந்தைகளா, நமக்கு தெரியாத ஒரு விஷயத்தில் நாம் தலையிட்டால் எளிதில் ஏமாற்றப்படலாம். ஆகவே தெரிந்து கொண்டு அதை செய்து முடிக்கலாம்.












Click it and Unblock the Notifications