குழந்தை நீதி கதைகள்: விளக்கை தேய்க்க.. வந்தது யாருன்னு பாத்தீங்களா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டிஸ், எப்படி இருக்கீங்க.. எல்லோரும் என்ன பண்றீங்க. சரி உங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி உங்க கண்ணு முன்னாடி மை டியர் பூதம் வந்தா என்ன கேப்பீங்க. யோசிச்சு சொல்லுங்க, அதுக்கு முன்னாடி இந்த கதையை படிச்சிடுங்க.
நான்சி, ஒரு செல்வந்தன் வீட்டில் வேலை செய்பவள். அங்கு இருக்கும் அனைத்து வீட்டு வேலைகளையும் அவள் தனி ஆளாக செய்து வந்தாள். அவளுக்கு அது கடினமாக இருந்தாலும் அவளுக்கு சாப்பாடு போட்டு, தங்க இடம் கொடுக்க வேறு யாரும் இல்லை என்பதால் எந்த வேலையாக இருந்தாலும் பொறுத்து கொண்டு செய்து வந்தாள்.

ஒருநாள் வீட்டில் இருக்கும் வெள்ளி பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஒரு விளக்கை சுத்தம் செய்ய அதில் இருந்து புகையாக கிளம்பியது. அவளுக்கு ஒரு பக்கம் பயம், ஏதோ தவறு செய்துவிட்டோமோ என நடுங்க, ஒரு பெரிய கணத்த குரலில் உனக்கு 3 வரன்கள் தருகிறேன் என ஒரு பெரிய உருவம் பூதம் போல வந்து சொல்லியது.
அவளுக்கு என்ன கேக்கவென்றே தெரியவில்லை. அப்போது அவளுக்கு இருந்த ஒரே கஷ்டம் என்னவென்றால் அந்த அறையில் இருக்கும் வெள்ளி பாத்திரங்கள் தான். அவள் பூதத்திடம் இந்த வெள்ளி பாத்திரங்களை மின்ன செய் அது போதும் என்றாள். கண் முடி திறப்பதற்குள் மொத்த பத்திரமும் சுத்தமாக மாறி மின்னியது. வீட்டின் உரிமையாளர் நான்சி இத்தனை அருமையாக சுத்தம் செய்து இருக்கிறாளே என பாராட்டினார்கள்.
நான்சியும் மகிழ்ச்சியாக அந்த நாளை கழித்தாள். மறுநாள் அவள் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தாள். அது நிறையவே செய்ய வேண்டி இருந்தது. அவளுக்கு கையும் வலித்தது. ஆகையால் பூதத்தை அழைத்து, இந்த நூல்களை வைத்து ஸ்வெட்டர் செய்துவிடு என்றாள். அதுவும் நொடியில் செய்து முடித்தது. நான்சி அந்த நாளை பொறுமையாக கழித்தாள். இது அவளுக்கு ஒரு நல்ல ஐடியா ஒன்றை கொடுத்தது.
மறுநாளே பூதத்தை அழைத்தாள். எனக்கு இதற்குமேல் வேலைக்காரியாக இருக்க வேண்டாம் என்றாள். பூதம் இதுதான் உனது கடைசி ஆசை சரியாக கேள் என்றது. நான் முடிவு செய்துவிட்டேன், எனக்கு இனிமேலும் வேலைக்காரியாக இருக்க விருப்பம் இல்லை , யாருக்கும் வேலை செய்யவும் முடியாது என்றாள். பூதம் மந்திரத்தை சொல்ல, ஒரு வினாடியில் நான்சி இயற்கை காற்று வீசுவதை உணர்ந்தாள்.
கண்களை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் முன்னாள் பாத்திரத்தை வைத்து அதில் சிலர் நாணயங்களை போட்டிருந்தார்கள். இப்போது அவள் ரோட்டில் பிச்சை எடுப்பவளாக மாறினாள். அவளால் அதை ஏற்க முடியவில்லை. வேலை செய்தலும் தனக்கென தங்க ஒரு இடம் இருந்தது, அவளுக்கு எதுவும் புரியாமல் பூதத்தை பார்த்து கத்தினாள்.
பூதம் நான்சி முன் தோன்றி, நீதானே வேலை செய்யாமல் இருக்க வேண்டும் என்றாய் என்றது. உன்னிடம் வரத்தை தெளிவாக கேள் என எச்சரித்தேன் என்றது. தான் சரியாக நிதானித்து கேட்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்த நான்சி, பூதத்திடம் மன்னிப்பு கேட்டாள். என்னை பழைய நிலைமைக்கு மாற்றிவிட்டு என கெஞ்சினாள். பூதமும் அவளை வேலைக்காரியாக மாற்றியது.
ஆகவே குழந்தைகளே நீங்கள் என்ன கேட்க போகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். அது பூதமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications