குழந்தை நீதி கதைகள்: பேராசையால் சிலையான வால்டர்.. பழைய நிலைக்கு வந்தனா? இல்லையா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் செல்லங்களா, என்ன பண்றீங்க புது வருஷத்துக்காக யாரெல்லாம் ஆவலா காத்துகிட்டு இருக்கீங்க. சரி இந்த புது வருஷத்திலே நீங்க என்ன உறுதி மொழி எடுக்க போறீங்க, இல்லைன்னா உங்ககிட்ட இருக்க எந்த கெட்ட பழக்கத்தை விட போறீங்க. யோசிச்சிகிட்டே நம்ம விசித்திர கதையை படிக்க போலாமா.
வால்டர் ரொம்ப துரு துருன்னு விளையாட்டிட்டு இருக்கும்போது திடீரென வீட்டுக்குள்ள அவங்க அம்மா சத்தம் கேட்டு உள்ளே ஓடி போறான். அங்க அவனோட அம்மா இறந்து கிடக்குறாங்க. அவனோட அப்பா வந்ததும் ஊர்மக்கள் மத்தியில் எல்லா காரியங்களையும் முடிச்சிட்டு ரெண்டு பெரும் ரொம்ப தனியாவே வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க அப்பா ஒரு விறகுவெட்டி அதனால அவனை தனியா விட்டுட்டு இரவு நேரமாகி தான் திரும்ப வருவாரு. அவன் சாப்பிட்டான, இல்லையா என்பதை கூட அவரால தெரிஞ்சிக்க முடியல. அதுனால மார்கஸ் என்ற பெண்ணை கல்யாணம் பண்ணிக்குறாரு. அந்த பொண்ணு ரொம்பவும் அமைதியானவள்.

வால்டர் அவளை அம்மாவாக ஏற்று கொள்ளவில்லை. இருந்தாலும் அவளுடைய கடமைகளை சரியாக செய்து கொண்டிருந்தாள் மார்கஸ். கொஞ்ச நாள் போக போக வால்டர் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவர் படுத்த படுக்கையாக மாறினார். அவரையும் கவனித்து கொண்டு வால்டரையும் கவனித்து கொண்டாள் மார்கஸ். இருந்தாலும் அவளது பாசத்தை அவன் உதாசீனபடுத்தினான்.
வால்டரின் அப்பா இறந்துவிட கடைசி நிமிடத்தில் வால்டரை நன்றாக பார்த்து கொள்வேன் என சத்தியம் செய்து கொடுத்தாள் மார்கஸ். அவள் வேளைக்கு சென்று வால்டருக்கும் சேர்த்து சாப்பாடு போட்டாள். இப்போது வளர்ந்து பெரியவனாக இருக்கும் வால்டர் இன்னும் அதிகமாக உதாரியாக இருந்தான். மர்கஸ் கொண்டு வரும் பணத்தை எப்படியெல்லாம் வீணாக்க முடியுமோ அப்படியெல்லாம் வீணாக்கினான்.
ஒருநாள் அவள் வீட்டின் பின்புற தோட்டத்தில் ஒரு சத்தம் கேட்கவே போய் பார்த்தால் அங்கு ஒரு பெரிய பிணந்தின்னி கழுகு கீழே விழுந்து வலியால் கத்திக்கொண்டிருக்க அதற்கு மருந்துபோட்டு உணவும் கொடுக்கிறாள். அந்த பழக்கத்தில் அந்த கழுகு தினமும் இரவு அவளை தேடி வருகிறது. அவளும் அதனை தடவி கொடுத்து உணவளிக்கிறாள். பாசத்தை ஏற்காத வால்டர் மத்தியில் அந்த பறவை அவளை தேடி வருவது அவளுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.

இப்படியே பல நாட்கள் போனது. அவளிடம் அன்றைய வீட்டு தேவைக்கே காசு இல்லாமல் போனது. இரவு கழுகிற்கு என்ன உணவாக கொடுக்க முடியும் என்று சோகமாக இருந்தாள். இரவானதும் கழுகு வந்தது, அவள் சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று மனிதர்கள் பேசும் மொழியில் பேச அவள் திகைத்து போனாள். நீ சோகமாக இருப்பதால் எனக்கும் சோகமாக இருக்கிறது, அதனால் என் இறக்கையில் இருந்து ஒரு இறகை பிடுங்கி எடு,என்று சொல்ல எதற்காக என்றால் மார்கஸ். உனக்கு அனைத்தும் வாங்குவதற்கு தேவைகள் இருக்கின்றன அதற்கு இது உதவும் என்று சொன்னது கழுகு. அவள் முடியாது அது உனக்கு வலிக்கும் என்ன இருந்தாலும் உன்னையும் என் குழந்தை போலவே பார்த்துவிட்டேன் என்றாள். இறகு எனக்கு மீண்டும் வளர்ந்துவிடும் இத்தனை நாள் நீ என்னை கவனித்து இருக்கிறாய் ஆகையால் எடுத்துக்கொள் என்று சொல்ல , மார்கஸ் ஒரு இறகை பிடுங்கினாள். கழுகு வலியால் கத்தியது. அவள் அதை ஒரு துணிக்கு அடியில் புதைத்து வைக்க மறுநாள் அந்த இறகு தங்கமாக மாறியது.
அவளது வீட்டின் தேவைகள் அனைத்தையும் தீர்ந்து போக, மீதம் பணமும் இருந்தது. வீடு எப்படி இவ்வளவு செழிப்பாக இருக்கிறது என்று ஆச்சர்யப்பட்ட வால்டர் அவள் மறைத்து வைத்திருந்த பணத்தையும் எடுத்து கொண்டு போய் செலவு செய்தான். கொஞ்ச நாள் நன்றாக போனாலும் வீட்டில் இருந்த பொருட்களை விற்க ஆரம்பித்தான். மீண்டும் இரவு கழுகிடம் சோகமாக அமர்ந்து கண்ணீர்விட்டாள் மார்கஸ். கழுகு இன்னொரு இறகை பிடிங்கிக்கொள்ள சொன்னது, அவளுக்கு மனம் இல்லை என்றாலும் அதை செய்தாள். மறுநாள் அது தங்கமாக மாறியது.
வேலைக்கே போகாமல் மர்கஸிடம் எப்படி பணம் வந்தது என்று யோசித்த வால்டர், அவளை கவனமாக கவனிக்க ஆரம்பித்தான். அவள் தினமும் இரவு வீட்டின் பின்புறம் சென்று ஒரு கழுகுவிடம் ஏதோ பேசுவதை கவனித்தான். மேலும் அதற்கு உணவளித்ததையும் கவனித்தான். மார்கஸ் இப்படித்தான் தங்கத்தை பெறுகிறாள் என்பதை தெரிந்து கொண்ட வால்டர் மறுநாள் இரவு, மர்கஸ் போல உடையணிந்து கழுகிற்கு உணவளித்தான். பிறகு ஒரு பெரிய கத்தியை எடுத்து அதன் இறகை வெட்டின்னான். பதறி கத்தியது கழுகு நீ மார்கஸ் இல்லை அவள் அப்படி செய்யமாட்டாள் என்றது. அவன் உருவத்தை மாற்றி ஆமாம் என்றான்.
கோவத்தின் உச்சத்திற்கு போன கழுகு பேராசை கொண்ட நீ, ஒருவரின் பாசத்தை உதாசீனப்படுத்திய நீ இன்றுமுதல் சிலையாக மாறுவாய். ஒரு உண்மையான பாசத்தால் மட்டுமே நீ பழைய நிலைக்கு திரும்புவாய் என்று சாபம் விட்டது. அடுத்த கணமே அவன் தோட்டத்தில் சிலையாய் மாறினான். மார்கஸ் அந்த கழுகை தேடி அலைந்தால் அவளால் அந்த கழுகை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவள் தேடி அலைந்ததால் அந்த உண்மையான பாசத்திற்காக அவன் மீண்டும் உயிர் பெற்றான். இந்த முறை மார்கஸின் உண்மையான பாசத்தை புரிந்து கொண்ட அவன் ஒழுங்காக வேலைக்கு சென்று தன் தாயை கவனித்து கொண்டான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications