குழந்தை நீதி கதைகள்: கேலி செய்ய நினைத்து முட்டாளான இளவரசன்..!
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. வீக்என்ட் வந்தாச்சு, லீவில் நண்பர்களுடன் விளையாட செல்வீர்கள் அல்லவா, அதே போல இங்க ஒரு குட்டி இளவரசர் என்ன பண்ணாரு பாருங்க.. வாங்க கதைக்குள்ள போகலாம்.
சுட்டியான இளவரசர் ஒருவர் அந்த ராஜ்ஜியத்தில் இருந்தார். அவருக்கு மத்தவர்களை கேலி செய்து அதை ஜோக் என சொல்லி சிரிப்பது வழக்கம். இவரது சுட்டித்தனம் அரண்மனையில் பலரையும் கடுப்புக்குள் உள்ளாக்கி இருக்கிறது.

ஒருநாள் அரசவைக்கு வந்த இளவரசர் யாருக்கும் தெரியாமல் காவலில் நின்றிந்த சிப்பாய்களின் கால்களை அருகில் இருந்த தூணில் கட்டி வைத்து ஒளிந்து கொண்டான். அரசர் அரசவைக்குள் நுழைய அவருக்கு மரியாதை செலுத்த காலை தூக்க சிப்பாய்கள் தடுமாறி கீழே விழுந்தார்கள். இதனால் மற்றவர்கள் சிரித்தாலும் அந்த சிப்பாய்களுக்கு அது அவமரியாதையாக இருந்தது.
அடுத்தநாள் அரண்மனையின் சமையல் அறையில் நுழைந்த இளவரசன் கதவின் மேல் ஒரு வாளி நிறைய தண்ணீரை எடுத்து வைக்க, அது தெரியாமல் சமையல்காரன் கதவை திறக்க மொத்தமாக மேலே இருந்த தண்ணீர் அவர் மேல் கொட்ட அவர் வழுக்கி விழுந்தார். இதை பார்த்த இளவரசன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.
இப்படி நாளுக்கு நாள் இளவரசனின் சேட்டை அதிகமானது. அப்படித்தானே அரசரை காண பக்கத்துக்கு நாட்டில் இருந்து அரசர் தனது மகளுடன் பயணம் மேற்கொண்டு வந்தார். அவர்கள் வந்த குதிரையை சேட்டை செய்து மூக்கில் மிளகுப்பொடியை தூவி அதை ஓட ஓட விரட்டினான். பக்கத்துக்கு நாட்டு அரசர், அரசவையில் அரசரின் அரியாசனத்தின் இன்னொரு நாற்காலியில் அமர அதற்கு அடியில் சத்தம் வரும் பொம்மையை வைத்துள்ளான் இளவரசன்.
அவ்வளவு தான், அரசர் அதன் மேல் உக்கார அது சத்தம் எழுப்ப அரசவையே அமைதி ஆனது. இதை விட முட்டாள்தனமாக யாரும் செய்யமாட்டார்கள் என அரசர், இளவரசனிடம் கடினமாக நடந்து கொண்டார். அதனால் சோகமான இளவரசன் அரண்மனையின் தோட்டத்தில் நடந்து சென்றான்.
அவன் முன்னால் அவனது செல்ல நாய்க்குட்டி ஓடி வந்தது. நாய் அருகில் வந்ததும் அதை கொஞ்ச அருகில் சென்றான் இளவரசன். அந்த நாய் அவனை பார்த்து தொடாதே முட்டாளே என்றது குலைத்து கொண்டே, இளவரசன் நீயா பேசுகிறாய் என அதிர்ச்சி ஆகி கேட்டான். அதற்கு நாய் பதில் ஆமாம், வேற யாரு பேசுவா? இனிமேல் மற்றவர்களை கேலி செய்தால் உன்னை கடித்து குதறி விடுவேன் என்றது. அதன் சத்தம் வித்தியாசமாக கூர் என எழுப்பி கொண்டே இருந்தது.
இளவரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நாய் பேசுமா? அதுவும் இவ்வளவு கோபமாக என பல நாளாக அந்த நாயின் வாயையே பார்த்து கொண்டிருந்தான். அந்த நாளுக்கு பிறகு ஒருநாள் கூட இளவரசனின் செல்ல நாய் பேசவில்லை. இதையே யோசித்து யோசித்து அமைதியான சிறுவனாக மாறினான் இளவரசன்.
அன்றைக்கு நடந்த நிகழ்வுக்கு பின்னால் ஒரு பெரிய ரகசியமே இருந்தது. அது என்னவென்றால் பக்கத்து நாட்டு அரசனுடன் வந்த அவரின் மகள் இளவரசனின் செயலை பார்த்து அவனுக்கு பாடம் புகட்ட முயன்றாள். அதனால் தான் அவனின் செல்ல நாய் அவன் முன்னால் வரும் வரை காத்திருந்து அது பேசுவது போலவே உறுமி கொண்டே பேசினாள்.
அதனால் தான் இளவரசனும் பயந்தான். மற்றவர்களை கேலி செய்து கொண்டிருந்த இளவரசனையே, முட்டாளாக்கினால் பக்கத்து நாட்டு இளவரசி. இந்த உண்மை கடைசி வரை அவனுக்கு தெரிய வரவே இல்லை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications