குழந்தை நீதி கதைகள்: இப்படி ஒரு வாழ்க்கையா? அலுத்து கொண்ட முயல்கள்!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. பள்ளிக்கு போக யாருக்கெல்லாம் பிடிக்கும். இல்லை இல்லை ஒரே பரீட்சை, வீட்டு பாடம் என யாருக்கெல்லாம் வெறுப்பாக இருக்கும். அப்படி வெறுப்பா இருந்தா கொஞ்சம் இந்த கதையை படிச்சிட்டு ஜாலியா படிக்க ஆரம்பிங்க. இப்போ கதைக்குள்ள போலாமா..
தலை தெறிக்க ஒரு முயல் காட்டுக்குள் ஓடி வர, பின்னால் ஏதோ ஒரு மிருகம் விரட்டுவது போல மரம், செடி, கொடிகள் ஆட முயல் ஒரு இடத்தில் நின்று அதன் கூட்டத்தை அழைக்கிறது. உயிரை கைல பிடிச்சிட்டு ஓடி வந்திருக்கேன். என்னால் இப்படி பயந்தெல்லாம் வாழ முடியாது என கத்துகிறது.

முயல் இப்படி கத்தி கூச்சலிடுவதை கேட்ட மொத்த முயல் கூட்டமும் பதறி போய் வெளியில் வந்தன. ஓடி வந்த முயல் கூச்சல் இட்டு கொண்டிருக்கும்போதே இன்னொரு முயலும் தலை தெறிக்க ஓடி வர அதன் கழுத்து மற்றும் கால்களில் ரத்தம் கொட்டியது. அதற்கு மருந்து கொண்டு வந்து கொடுப்பதற்குள் அது இறந்தும் போனது. இதை பார்த்து கொண்டிருந்த தலைவன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ன செய்யலாம் என தனது கூட்டத்தை பார்த்து கேட்டது.
ஆளுக்கொரு யோசனை சொல்ல, எதுவும் தலைவருக்கு சரியாக தோன்றவில்லை. முதலில் ஓடி வந்த முயல் இதெல்லாம் சரியாக வராது. நாம் இருந்தால் தானே இவர்கள் நம்மை கொல்ல துடிப்பார்கள். நாமும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓட வேண்டாம் என சொல்ல மத்த முயல்களும் ஆமாம் நாம் என் வாழ வேண்டும், மற்றவர்களுக்கு இரையாக வேண்டும். தினம் தினம் உயிருக்காக போராட வேண்டும் இதற்கு நாம் அனைவரும் இறப்பதே சிறந்த வழி என ஒன்றாக முடிவெடுக்க, தலைவரும் சரி என ஏற்று கொள்கிறார்.
சரி அப்போ நாளை காலை எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அருகில் இருக்கும் குளத்தில் விழுந்து இறக்கலாம் என முடிவு செய்து, ஒரு கூட்டமே கிளம்பியது. குளத்தை நோக்கி வேகமாக படையெடுக்க செடி கொடிகள் அசைய, அந்த இடமே பயங்கர சத்தத்துடன் அதிர ஆரம்பித்து.
குளத்தின் அருகில் கூட்டமாக பேசி கொண்டிருந்த தவளைகள் ஏதோ பயங்கரமான விலங்கு கூட்டம் வருகிறது போல என பயந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, முயல் கூட்டத்தின் இந்த செயல் அங்கிருந்து சின்ன சின்ன உயிரினங்கள் அனைத்தையும் பயந்து தலை தெறிக்க ஓட வைத்தது. கூட்டமாக பேசி கொண்டிருந்த தவளைகள் குளத்தில் வேகமாக குதிக்க ஆரம்பித்தன. இதனால் குளத்தில் இருந்த மீன்கள் வேகமாக ஆழமான இடத்திற்கு சென்றன.

இதை பார்த்த முயல் கூட்டத்தின் தலைவன் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகினான். தனது கூட்டத்தை ஒரு நொடி நிற்க சொன்னான். குளத்தின் அருகில் இருந்த சிறு உயிரினங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தாங்கள் ஓடியதை போலவே இருந்ததை உணர்ந்தது.
தனது கூட்டத்திடம், நாம் எந்த உயிருக்கும் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. ஆனாலும் அவை நம்மை பார்த்து பயப்பட ஆரம்பித்தன. ஆக இதுதான் வாழ்க்கை. இதை வாழ நாம் அன்றாடம் ஓடியாக வேண்டும். நாம் மட்டுமில்லை இங்கு வாழும் அனைவருமே ஓடியாக வேண்டும். அப்படியென்றால் இருக்கும் இந்த நொடியை நாம் அனுபவித்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று தலைவர் கூறியதும் முயல்களுக்கு தாங்கள் தவறான முடிவை எடுத்தது புரிந்தது. அது போல இறப்பு எதற்கும் தீர்வு கிடையாது என்பதையும் புரிந்து கொண்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications