குழந்தை நீதி கதைகள்: பொறுமையா இருந்தா.. தங்கம் கிடைக்குமா? எப்படின்னு பாத்தீங்களா..!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க. ரொம்ப வெயிலா இருக்கு எல்லாரும் வீட்லயே பத்திரமா இருங்க. நீங்க இருக்கிற இடத்துல மட்டும் இல்ல. பரவலா நெறைய இடத்துல வெயிலோடு தாக்கம் அதிகமா இருக்கு. நான் சொல்ல போற கதைல இருக்க கிராமத்திலேயும் ரொம்ப வெயிலினால் பஞ்சம் வந்திருச்சு. அதப்பத்தி தெளிவா சொல்றேன். அதுமட்டும் இல்ல நீங்க பொறுமை இல்லாம அடம்பிடிக்கிற குழந்தையா இருந்த இந்த கதை உங்களுக்கு தான். வாங்க கதைக்கு போகலாம்.
பஞ்சின் ஒரு அழகான கிராமம். அங்க குறைவான மக்கள் மட்டும் வாழ்ந்து வந்தாங்க. விவசாயம் தான் அவங்களோட தொழில். அந்த கிராமத்தோட தலைவர் அவங்களா சிறப்பாக வழி நடத்திட்டு போனாரு. கோடைகாலம் வந்து இரண்டு மாதங்கள் ஆகுது. கிராமத்துல மோசமான தண்ணீர் பிரச்சனை. யாரும் விவசாயம் பண்ண முடியமா போயிருச்சு. அந்த கிராமத்துக்கு வரவேண்டிய தண்ணீர பக்கத்து கிராமங்கள் வறட்சி காரமான அணைகட்டி எடுத்துகிட்டாங்க. அதனால இந்த கிராமத்துல பஞ்சம் வர ஆரம்பிச்சிருச்சு. கிராமத்தோட தலைவர் அரசாங்கத்துக்கு மனுபோட்டு பதிலுக்காக காத்துட்டு இருந்தாங்க. நாட்கள் இப்டியே போகுது. கிராம மக்கள் ஒருநாள் தலைவரை ஒன்றாக சந்திச்சு தங்களோட கோரிக்கையை எடுத்து வெக்கறாங்க.

"ஐயா, நம்ம கிராமம் எப்போவும் இல்லாத வறட்சில இருக்கு. இந்த வறட்சி சீக்கரம் சரி ஆயிரும்னு நம்பறோம் . ஆனா அதுவரைக்கும் ஊருல இருக்க எங்க பிள்ளைங்க பசியினால துடிச்சு இறந்துபோற நிலைமை வரப்போகுது. அது தான் எங்களோட பெரிய கவலை." னு ஒருத்தர் சொல்லறாரு . "நம்ம அரிசி கிடங்குல அரிசியோட அளவு கொறஞ்சுகிட்டு இருக்கு. இன்னும் ஒரு வாரகாலம் தான் இருக்கும்னு" இன்னொருவர் சொல்லறாரு. கவலைல இருக்கும் தலைவர். பிரச்சனைக்கு சீக்கரம் தீர்வு தருவதாக மக்களுக்கு வாக்கு தராரு. பக்கத்து ஊர்ல இருந்து ரொட்டிகளை பொற்காசு குடுத்து வாங்கறாரு. தன்னோட பணியாளர்கள்கிட்ட சொல்லி நாளையில் இருந்து கிராமத்துல இருக்கற குழந்தைகளுக்கு ரொட்டிகளை பொட்டலம் போட்டு தர உத்தரவு போட்றாரு. பொட்டலங்கள் எல்லாம் சம அளவில் இருக்கணும்னு சொல்லறாரு.

தலைவர் சொன்னது போல, மறுநாளில் இருந்து கிராமத்துல இருக்க குழந்தைகளுக்கு ரொட்டிகள் வழங்கப்படுது. எல்லாரும் பெரிய பொட்டலத்துக்கு போட்டிபோட்டு வாங்குறாங்க. கௌஷிக் மட்டும் கடைசியாக சிறிய பொட்டலத்தோட மகிழ்ச்சியா வீட்டுக்கு போற. மறுநாளும் இதேமாதிரி நடக்குது. இந்த விஷயம் தலைவர் காதுக்கு போகுது. மறுநாள் கௌஷிக் வழக்கம் போல பொறுமையா இருந்து கடைசி பொட்டலத்தை வாங்கிட்டு போறான். பொட்டலத்தை அவங்க அம்மாகிட்ட குடுத்து பிய்க்கிறான் . அதுல இருந்து நெறைய தங்கக்காசுகள் கீழே விழுகுது. ஆச்சரியமாகிறான் கௌஷிக். அவங்க அம்மா சொன்ன காரணத்துல தலைவரோட வீட்டுக்கு போய் தங்கக்காசுகளை திரும்பத்தரான் . தலைவர் அவனோட நல்ல ஒழுக்கத்தை பாராட்டி அவங்க அம்மாக்கு பரிசு தராரு. கிராமத்தோட வறட்சி சீக்கரம் தீர்ந்து மறுபடியும் பழைய செழுமைக்கு போறாங்க.
குழந்தைகளே, பாத்திங்களா நாம எப்போவும் ஒரு பொருளுக்காக வீட்டுல அடம்பிடிச்சு அடிவாங்குவோம். அது கிடைக்காம கூட போகலாம். நீங்க அதுமாதிரி பண்ணாம, கௌஷிக் மாதிரி நல்லொழுக்கத்தோடும் பொறுமையோடும் இருந்த உங்களுக்கும் எல்லாம் கிடைக்கும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications