குழந்தை நீதி கதைகள்: பரிசை சரியாக பயன்படுத்தியது யாரு? தவறானவர்களால் என்ன நேர்ந்தது? பாகம்- 2
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க. வெள்ளிக்கிழமை வந்தாச்சு, யாரெல்லாம் விடுமுறைக்காக ஆவலா இருக்கீங்க. சரி விடுமுறைக்கு யாரெல்லாம் கடலுக்கு போயிருக்கிங்க. உங்க கிட்ட ஒரு கேள்வி கடல் ஏன் உப்பா இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? சரி அறிவியல் பூர்வ ஒரு விஷயம் இருந்தாலும் நம்ம கதைப்படி இதுனாலதான் உப்பா இருக்குனு நான் சொல்றேன். எப்படினு கதையை படிச்சு தெரிஞ்சிக்கோங்க.
ஷமி, அவனோட வீட்டில சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்தான். அவன் சித்தி ரவீனா எப்படியோ இதை கேள்வி பட்டு அவளோட கணவரான மேத்யூஸ் ஆ கூட்டிட்டு ஷமி இருக்குற இடத்துக்கு விரைந்தாள். சரி, சரி நம்ம முதல் பாகம் படிச்சாதான் இவங்களா யாரு? என்ன நடந்துச்சுனு முழுமையா உங்களுக்கு புரியும். தெரியாதவங்க அந்த கதையை படிச்சிட்டு வாங்க.

சரி அப்பாவை பார்த்த சந்தோஷத்தில் இருவரையும் வீட்டுக்கு அழைத்தான் ஷமி. விஷமத்ததுடன் வந்த ரவீனா அவனின் இந்த வளர்ச்சியை தெரிந்து கொள்ள மேத்யூஸை அனுப்பி வைத்தாள். மேத்யூஸ் ஷமியிடம், உனக்கு எப்படி இதெல்லாம் கிடைச்சது அப்படின்னு கேட்டார். அது வந்து அப்பா அன்னைக்கு சித்தி என்னை காட்டுக்குள் அனுப்பிவிட்டாங்க இல்லையா அப்போ சில சித்திர குள்ளார்கள் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் கொடுத்த இந்த விசிறியால் தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். மேலும், இந்த விசிறியிடம் நீங்கள் என்னால் சொன்னாலும் அதை அளவில்லாமல் கொடுக்கும். அதை என சொல்லி முடிப்பதற்குள் மேத்யூஸ் குறிக்கிட்ட்டான். சரி சரி நான் வருகிறேன் என ரவீனாவை நோக்கி கிளம்பினான்.
ஷமியும் அவர்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உறங்க சென்றான். மேத்யூஸ், இதைப்பற்றி ரவீனாவிடம் உடனடியாக தெரிவித்தான். இரவோடு இரவாக, சரியான நேரம் பார்த்து அந்த விசிறியை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். ரவீனா சொன்னாள், நாம் இங்கிருந்தால் மாட்டிப்போம் அதனால் வேறு எதாவது வெளிநாட்டிற்கு செல்லலாம் என்றாள். மேத்யூசும் அதை ஒத்துக்கொண்டான்.
அவர்கள் அருகில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு சென்றார்கள். அங்கிருந்த மாலுமியிடம் என் கணவர் ஒரு உப்பு வியாபாரி நாங்கள் வெளிநாட்டிற்கு சென்று எங்கள் வியாபாரத்தை தொடங்கலாம் என்று இருக்கிறோம் உங்களது கப்பலை எங்களை அழைத்து செல்வீர்களா என்று கேட்டாள் ரவீனா.
அவர்களும் கப்பலில் ஏறினார்கள். கப்பல் நாடு கடலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கப்பல் சமையல்காரன் கப்பலில் உப்பு தீர்ந்து போய் இருக்கிறது. நான் அதை மறந்துவிட்டேன் உங்களிடம் சொல்ல, இப்போ உப்பு இல்லாமல் சமைக்க முடியாது என்று சொன்னான். மாலுமிக்கு சட்டென அந்த உப்பு வியாபாரியின் நினைவு வர அவர்களை நோக்கி விரைந்தான்.
நிஜத்தில் அவர்கள் மூட்டையில் எந்த உப்பும் இல்லை. விசிறியை விரித்து உப்பை வரவைக்க வேண்டும் என்ற நிலை. ரவீனா உப்பை வர வை இல்லையென்றால் நாம் மாட்டிக்கொள்வேம் என்று சொல்ல, மேத்யூஸ் விசிறியை விரித்து உப்பை கேட்க , வானிலிருந்து உப்பு கொட்ட ஆரம்பித்தது. இப்போது உப்பு கொட்டுவதை நிறுத்த வேண்டும், ஆனால் அதை எவ்வாறு நிறுத்த வேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லை.

ரவீனாவும் மேத்யூசும் விழிபிதுங்கி நின்றார்கள். உப்பு கொட்டுவதும் நிற்கவில்லை. ஷமி விசிறியை பற்றி முழுதாக சொல்வதற்குள் மேத்யூஸ் அதை காது கொடுத்து கேட்காமல் வந்ததன் விளைவு, சாந்தி.. சாந்தி என்று மூன்று முறை சொன்னால் மட்டுமே உப்பு நிற்கும் என்று தெரியாமல் போனது. உப்பு நிரம்பி கப்பல் மூழ்கியது. அனைவரும் இறந்தார்கள். ஆனால் உப்பு கடலில் கொட்டுவது நிற்கவில்லை.
கிடைத்த பரிசை ஷமி சரியாக பயன்படுத்தியதால் அவனது வாழ்க்கை அருமையாக அமைந்தது. ஆனால் ரவீன்னாவின் சூழ்ச்சியால் தவறானவர்கள் கையில் கிடைத்ததால் கடல் உப்பாக மாறியது. பல காலங்கள் களைத்து இந்த செய்தியை உணர்ந்த சித்திர குள்ளர்கள் தங்கள் மந்திர சக்தியால் விசிறியை செயலிழக்க வைத்தார்கள். மொத்த கடலும் அதற்குள் உப்பு கடலாக மாறிவிட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications