குழந்தை நீதி கதைகள்: உண்மையை காட்டும் கண்ணாடி.. இப்படி ஒரு ட்விஸ்ட்டா?
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ்.. எப்படி இருக்கீங்க, வீகென்ட் வந்தாச்சு ஹோம் ஒர்க் இருக்குதா, அப்போ ரிலாக்ஸ் பண்ண நினைத்தீர்கள் என்றால், உங்களோட நேரத்தை இந்த கதை படிக்க கொஞ்சம் ஒதுக்குங்க. உங்க வீட்டில் ஒரு மாய கண்ணாடி இருந்தா என்ன பண்ணுவீங்க , அப்படியே வாங்க கதைக்குள்ள போலாம்.
இளவரசனிடம் ஒரு விசுவாசமான வேலைக்காரன் இருந்தான். அவன் இளவரசனுக்கு மிகவும் பாதுகாப்பாளனாக தன்னை காட்டி கொண்டான். அதில் அவனுக்கு ஒரு செருக்கும் இருந்தது. இளவரசனின் அறையில் ஒரு கண்ணாடி இருந்தது. அது எப்போது சென்றாலும் ஒரு சிகப்பு நிற துணியால் மூடியே இருக்கும். வேலைக்காரனும் ஏன் இதை மூடி வைத்துள்ளார்கள் என்று யோசித்தாலும் அதை அவன் ஒருநாளும் திறந்து பார்த்ததில்லை.

ஒருநாள் இளவரசர் அந்த கண்ணாடி முன்னால் நிற்பதை பார்த்தான் அந்த வேலைக்காரன். மீண்டும் அது சிகப்பு நிற துணியால் மூட பட்டிருந்தது. அப்போது அவன் அதன் அருகில் செல்லவும் அந்த துணி சட்டென விலகியது. விலகவும் அவன் முகம் தெரியவில்லை அந்த கண்ணாடியில், மாறாக ஒரு காட்டில் ஒருவன் பார்த்தப்பதற்கே வித்தியாசமாக இருக்க அவன் இளவரசனை வேகமாக தள்ளிவிடுவது போல காட்டியது கண்ணாடி. வேலைக்காரன் அதிர்ச்சியில் உறைந்தான்.
கண்ணாடியில் பார்த்தவன் திருடனாக இருக்குமோ? என் இளவரசரை தள்ளி விட்டான். காட்டுக்குள் யார் அதிகம் இருப்பார்கள் காட்டுவாசிகளா அப்படி இருந்தால் அப்போ இளவரசரை பலி கொடுப்பார்களே? ஒருவேளை கொள்ளைக்காரர்களாக இருக்குமோ என அவன் பயங்கர குழப்பத்தில் ஆழ்ந்தான். பார்க்கும் எல்லாவற்றிலும் ஒரு கண் வைத்து கொண்டே இருந்தான். இளவரசருக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை மட்டும் நன்றாக புரிந்து கொண்டான்.
கொஞ்ச நாளாக இளவரசரை தனியாக விடாமல் கூடவே ஒட்டி சென்றான். எல்லா இடங்களிலும் அவருக்கு ஒரு பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அந்த கண்ணாடி காட்டியது போலவே எதுவும் நடந்து விடாமல் இருக்க, இளவரசர் காட்டுக்கு செல்ல வேண்டிய நாள் வந்ததும். அவர்களுடன் தானும் வருவேன் என சென்றான் வேலைக்காரன்.
இளவரசனும், வேலைக்காரனும் சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்படி செல்லும்போது திடீரென தூரத்தில் ஒருவன் ஓடி வருவதை பார்த்தான். அவனுக்கு கண்ணாடி என்ன காண்பித்ததோ அது நடக்க போவதாக உணர்ந்து இளவரசே! என சத்தமாக கூச்சலிட்டான்.

இளவரசர் அதை பார்த்து நிதானம் ஆவதற்குள், அவன் இளவரசரை கீழே தள்ளிவிட்டான். இளவரசர் நடப்பது என்னவென புரிவதற்குள், அருகில் இருந்த மரங்கள் முறிந்து உடன் வந்தவர்கள் மேல் விழுந்தது. இளவரசர் மட்டும் எந்த அடியும் படாமல் தப்பித்தார். இதை பார்த்த வேலைக்காரன் அவன் திருடன், கொள்ளைக்காரன் என்று எண்ணி இருந்தோமே, அப்படி என்றால் இவன் இளவரசனை காப்பாற்றத்தான் வந்தனா? நாம் தான் தவறாக எண்ணினோமா என குழம்பி போனான். ஒரு வினாடியில் இளவரசரின் உயிரை காப்பாற்றியது அவன்தானே எனவும் யோசித்தான்.
இளவரசரிடம் அந்த மாய கண்ணாடி தனக்கு இதை காட்டியது என்று எடுத்துரைத்தான். அதற்கு இளவரசர் பார்க்கும் எல்லாவற்றையும் ஒரே கோணத்தில் பார்த்தால் இப்படி நடப்பது சாத்தியம் தான். ஆகையால் நீ, பார்த்தது தவறு இல்லை, பார்க்கும் அனைவரையும் தவறாக எண்ணாதே என்று கூறினார்.
இப்போதுதான் அவனுக்கு புரிந்தது, இளவரசரை தான் மட்டும் இல்லை தன்னை போல இருக்கும் குடி மக்களும் பாதுகாப்பார்கள். அவனின் மமதையும் அழிந்தது. கண்ணாடி முன்னால் தோன்றியதை தான் தவறாக எண்ணி விட்டேன் என வருத்தப்பட்டான்.












Click it and Unblock the Notifications