குழந்தை நீதி கதைகள்: குரங்கில் இருந்து மனிதன் வந்தானா?.. இதை படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க..
சென்னை: Kids story in Tamil: ஹாய் குழந்தைகளா எல்லோரும் எப்படி இருக்கீங்க.. குரங்கு என்று சொன்னால் உங்களில் யாருக்கு ரொம்ப பிடிக்கும். குரங்கு சேட்டை அப்படின்னா உங்க நண்பர்களில் யார் உங்கள் நினைவுக்கு வருவார்கள். சரி அப்படியே யோசிச்சிகிட்டே நம்ம மிகூர் என்ன பண்ணுச்சுனு படிக்கலாமா..அதாங்க குரங்கு சேட்டை..
ஒரு அழகான கடற்கரை. அங்க கப்பல் வந்து நிக்கிற துறைமுகம் பக்கத்துல இருக்கு. கொஞ்சம் இந்தப்பக்கம் பாத்தீங்கன்னா மீன் பிடிக்கிற மீனவர்களை நீங்க பாக்கலாம். அந்த எடத்துல சுத்தி நல்ல வளர்ந்து உயர்ந்த மரங்களும் நிறைய இருந்தது. அங்கதான் நம்ம மிகூர் தன்னோட கூட்டத்தோட வாழ்ந்து வந்துச்சு.

குரங்கு என்றாலே சேட்டைத்தான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும் இல்லையா. இங்க மத்த குரங்குகள விட நம்ம மிகூர் மட்டும் கொஞ்சம் அதிகமா ஆக்டிவா இருக்க கூடிய குரங்கு. அங்க வாழ்ற மனிதர்கள் என்ன பண்றங்களோ அத போல பண்ணிகிட்டே இருக்கும். மிகூர் பண்ற எல்லா சேட்டைகளையும் அங்க வர சுற்றுலா பயணிகள் ரொம்ப ரசிப்பாங்க. அதுக்கு பிடிச்சதை வாங்கி குடுப்பாங்க. மற்ற குரங்குகள் சொல்லும் நீ இப்படி வித்தை காமிச்சிட்டே ஒருநாள் எங்கேயாச்சு மாட்டிக்க போற கவனமா இரு என்று. மிகூர் அதை ஒருநாளும் தன் காதில் போட்டுக்கொண்டதில்லை.
மனிதர்கள் செய்வதை எல்லாம் தன்னால் செய்ய முடியும் நான் ஒன்றும் குரங்கு இல்லை என்ற எண்ணம் அதன் மனதில் எழ ஆரம்பித்தது. ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கும் பொது மற்ற குரங்குகளும் மிகூரை பாராட்டின. அப்புறம் என்னங்க தலைவருக்கு தலை , கால் புரியல . அவ்ளோதான் நான் மனிதன் ஆகிவிட்டேன்னு மற்ற குரங்கிடம் கூற ஆரம்பித்தது.
ஒருநாள் அந்த கடலின் ஓரத்தில் ஒருவர் மீன் வலையை வீசி மீன்களை பிடித்து கொண்டிருந்தார். நம்ம மிகூருக்கு தானும் அதுபோல செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. தினமும் அந்த இடத்திற்கு சென்று அவர் பண்ணுவதை வேடிக்கை பார்த்து கொண்டே இருக்கும்.
அடுத்த டார்கெட் மீன் பிடிக்கிறதுதான்னு முடிவு பண்ணியாச்சு. அதை செயல்படுத்தனும் இல்லையா, மீன் பிடிக்கிற இடத்திற்கு சென்றது மிகூர். அங்க சில மீனவர்கள் மீன் பிடிச்சிட்டு இருந்தாங்க. அவங்க போகிற வரைக்கும் காத்திருந்த மிகூர் தனது நபர்களை அங்கிருந்த மரங்களின் மேல் அமர சொன்னது. எல்லோரும் இங்கயே இருங்க நான் அந்த மனிதனை போல வலையை வீசி மீன் பிடிக்க போறேன் என்றது. சில குரங்குகள் முப்பது வேண்டாம் என்றன. சில குரங்குகளோ பார்வையாளர்களை போல உற்சாகமாக கை தட்ட ஆரம்பித்தன.
மீனவர்கள் அங்கிருந்து விலகியதும் , ஒரு பக்கம் வலையை காய வைத்திருந்த இடத்திற்கு சென்றது மிகூர். அந்த வலையின் ஒரு முனையில் சென்று அதை இழுத்தது. அதனால் அதை இழுக்க முடியவில்லை. இதை பார்த்த சில குரங்குகள் முடியாது விட்டு விடு என்றன. விடாமல் இன்னொரு பக்கமும் மிகூர் இழுத்தது. ஒருவழியாக கடலின் ஓரத்தில் வலையை இழுத்து கொண்டு தூக்கி போட்டது. இருந்தாலும் இது இத்தனை கனமாக இருக்கும் என்று நினைக்கவில்லை என எண்ணியது.
ஒருவழியாக வலையை வீசியாச்சு ஆனால் இந்த மனிதர்கள் வீசுவதுபோல் போகவில்லையே வலையின் இன்னொரு பக்கம் சென்று அதை விரிப்பதற்காக இழுத்தது. ஆனால் அங்குதான் பிரச்சனையே மிகூர் கடலின் ஆழம் புரியாமல் இதை செய்து கொண்டிருந்தது. முடிந்தவரை வலையை விரிக்க முயற்சி செய்தது. ஆனால் வாலின் நடுவில் நன்றாக சிக்கி கொண்டது. செய்வது அறியாது நீருக்குள் மூழ்கும் நிலை வந்தது. மிகூர் கத்த ஆரம்பித்தது. இதை பார்த்து கொண்டிருந்த குரங்கு கூட்டம் உடனடியாக ஓடி வந்து வலையில் சிக்கிய மிகூரை காப்பாற்றின.
உயிர் பிழைத்ததை எண்ணி பெருமூச்சு விட்ட மிகூர், அதன் பிறகு தான் மனிதன் இல்லை என்று உணர்ந்து என்ன செய்யுமோ அதை மட்டும் செய்து வாழ்ந்தது.
ஆகையால் குட்டிஸ் நீங்கள் யார் என்பதை புரிந்து உங்கள் திறமைகைளை சரியான வழியில் எடுத்து செல்லுங்கள். உங்கள் கூட்டத்தில் நீங்கள் கண்டிப்பாக சிறப்பான ஆளாக வருவீர்கள்.












Click it and Unblock the Notifications