குழந்தை நீதி கதைகள்: அது இளவரசர் தான.. மாட்டிகிட்டோமா! வித்தை கற்ற மூவரின் நிலை என்ன?
சென்னை: Kids story in Tamil: ஹலோ சுட்டீஸ், எப்படி இருக்கீங்க. வீகென்ட் வரப்போகுது, உங்களுக்கு கிரௌண்ட்ல போய் விளையாட பிடிக்குமா? சில பசங்களோட பெற்றோர்கள் அவங்களை வெளியில் விளையாட அனுமதிக்க கூட மாட்டாங்க இல்லையா. இப்போது இருக்கும் சூழ்நிலையும் அதற்கு ஒரு காரணம் தான். இங்க நம்ம இளவரசர் வெளியில் போய் என்ன பண்ணிட்டு வாராருன்னு பாருங்க.
அந்த அழகான ராஜ்யத்தில் அரசர் சிறப்பாகவே ஆட்சி புரிந்து வந்தார். அவரது மகனான லூயிஸ் மிகவும் இயல்பானவன். மக்களின் குறைகளை தெரிந்து அதற்கான வழிகளை ஆலோசிப்பதை வழக்கமாக வைத்திருந்தான். அவன் எப்போது அரண்மனையை விட்டு வெளியில் வந்தாலும் வித விதமான வேடங்களில் தான் செல்வான்.

எப்பொழுதும் போல அன்று நகரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மூன்று பேர் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருப்பதை கவனித்தான் லூயிஸ். அவர்கள் என்ன பேசி கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனித்தான். ஒருவன் எனக்கு இருக்கும் திறமைக்கு அரசர் என்னை அவர் அரியணை பக்கத்திலே அமர்த்துவார் என்றான். மற்ற இருவரும் அதே சொல்ல, லூயிஸ் அப்படி என்ன திறமை என்று கேட்டான். அதற்கு அவர்கள் அதை உன்னிடம் சொன்னால் என்ன கிடைக்கும் என்றார்கள். அதற்கு லூயிஸ் நான் அரசவையில் பணியாற்றுகிறேன் அதனால் என்னால் உங்களை அரசரிடம் அழைத்து செல்ல முடியும் என்றான்.
சரி, சொல்கிறேன் என்றான் ஒருவன். அது எனக்கு தரையில் காலை வைத்து தட்டினால் அதற்கு அடியில் என்ன இருக்கிறது என்று தெரியும் என்றான். இன்னொருவன், என்னால மறைந்திருக்கும் பொருட்களை சரியான வழியில் செல்ல வழிகாட்ட முடியும் என்றான். மற்றொருவன், என்னால் ஒருவரை பார்த்தால் அவர்கள் எந்த வேடத்தில் இருந்தாலும் எளிதில் அடையாளம் காட்ட முடியும் என்றான். மூவரும் இப்போ சொல் யார் அரசர் அருகில் அமர தகுதியானவர்கள் என்றார்கள். அதற்கு லூயிஸ் எனக்கும் ஒரு திறமை இருக்கிறது என்றான்.
அப்படியா என மூவரும் ஆச்சரியமாக கேட்க, லூயிஸ் ஆமாம், என்னால் ஒரு பிரச்சனைக்கு சரியான தீர்வை கொடுக்க முடியும். ஆகையால் உங்களை அரசரிடம் அழைத்து செல்வதற்கு முன் உங்கள் திறமை நான் பார்க்க வேண்டும் என்றான் லூயிஸ்.
அவர்களும் சரி போகலாம் என்று சொல்ல, சிறிது தூரம் நடந்ததும் ஒருவன் இதற்கடியில் சுரங்கப்பாதை இருக்கிறது என்று சொல்ல , மற்ற மூவரும் தோண்ட ஆரம்பித்தார்கள். சொன்னது போலவே அது ஒரு சுரங்கபாதை. லூயிஸ் அந்த வழியை பார்த்ததும் அது அரண்மனைக்கு செல்லும் வழி என்பதை புரிந்து கொண்டான். 4 பெரும் அந்த சுரங்கப்பாதையில் நடக்க சிறிது தூரத்திற்கு சென்றது இன்னொருவன், இதன் இடது திசையில் புதையல் இருக்கிறது, நிறைய தங்ககள் இருக்கின்றது என்றது. லூயிஸ் நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டே நடந்தான்.

ஏனெனில், அங்கு கஜானா இருப்பது இளவரசர் லூயிஸ்க்கு தெரியும். சிறிது தூரத்தில் காவலர்கள் நிற்பதை அறிந்த லூயிஸ் இருங்க வந்துவிடுகிறேன் என்று சொல்ல, ஒரு ஓரமாக நின்று அவரது உடைகளை களைந்து விட்டு காவலர்கள் அருகில் சென்றான். அவர்களிடம் 3 பேர் கஜானாவை கொள்ளையடிக்க சுரங்கப்பாதை வழியாக வருகிறார்கள். அவர்களை பிடித்து சிறையில் அடையுங்கள். நாளை முதல் வேலையாக அவர்களை அரசர் முன் நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான். காவலர்கள் அவர்களை பிடித்து சிறையில் அடைக்க, லூயிஸ் சிரித்து கொண்டே தனது அறைக்கு சென்றான்.
மறுநாள் அரசவையில் அரசர் அமர, லூயிஸ் அவர் அருகில் அமர்ந்திருந்தான். காவலர்கள் அந்த மூவரையும் அழைத்து வர, அரசர் கஜானாவை திருட நினைத்தீர்களா? என்று கேட்டார். மூவரும் பதட்டமாக இல்லை இல்லை என்று சொல்ல, லூயிஸ் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தான். அப்போது அவனை பார்த்த மற்றொருவன், இவன் நம்முடன் நேற்று இருந்தானே, இவன் இளவரசரா என யோசிக்க அதை மற்ற நண்பர்களிடமும் முணுமுணுத்தான்.
மூவரும் இளவரசரிடமா மாட்டினோம், நமது கதை முடிந்தது என பேசிக்கொள்ள அரசர் என்ன சொல்கிறீர்கள் கொள்ளையடிக்க முயற்சித்தது உண்மையா என்றார். அவர்கள் முழிக்க லூயிஸ், இவர்களை எனக்கு தெரியும். மூவருக்கும் சிறந்த திறமைகள் இருக்கிறது அதை சோதிப்பதற்கு தான் நான் அவ்வாறு செய்தேன் என்றார். இவர்களை நமது அரசவையில் வைக்கலாம் என்றும் சொன்னான். அரசரும் அதற்கு சரி என உத்தரவிட்டார். இபோது அந்த மூவரும் எதிர்பார்த்தது போலவே அரசவையில் அமர்ந்தார்கள். இளவரசரின் இந்த பக்குவத்தையும் திறமையும் பலரும் பாராட்டினார்கள்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications