குழந்தை நீதி கதைகள்: ஒத்த வார்த்தை பேசாத இளவரசி.. பரிசு அறிவித்த அரசர்..
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டீங்களா? புது நண்பர்கள் யாருக்காவது கிடைத்தார்களா, உங்களுடன் பேச தயங்கினார்களா அப்படி என்றால் விரைவில் அது சரியாகி உங்களுடன் நல்ல நண்பர்களாக மாறுவார்கள். நம்ம கதையை படிக்க போலாமா..
ராஜ்ஜியம் ஒன்றில் அரசருக்கு மனைவியும் ஒரு மகளும் இருந்தார்கள். இளவரசி சிறுவயதில் சேட்டைகள் செய்து சுட்டியாக இருந்தவள், திடீரென ஒரு விபத்தில் பேசாமல் அமைதியாக ஆனாள். அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்தது அரசருக்கும், ராணிக்கும் மிகுந்த வேதனையாக இருந்தது.

மகளை பேச வைக்க ராணி பல முயற்சிகள் செய்து பார்த்தும் எதுவும் பலனளிக்கவில்லை. இப்படியே போனால் மகளுக்கு பேச்சு வராமல் போய்விடும் என கவலைபட்டார். அரசரிடம் இதை பற்றி கலந்து ஆலோசித்தார். அரசர் தனது மந்திரி சபையில் அமைச்சர்களுடன் பேசி இதற்கான தீர்வை கேட்டார். அமைச்சர்கள் ஆளுக்கொரு யோசனை கொடுத்தார்கள். ஒருவர் மட்டும், நமது மக்களுக்கு இந்த வாய்ப்பை கொடுக்கலாம் என்றார்.
நமது நாட்டின் பிரஜைகள் யாராவது இளவரசியை பேச வைத்து விட்டால், அவர்களுக்கு சன்மானம் கொடுக்கலாம் என்றார். அரசரரும் அதை எற்றுக் கொண்டு தனது மகளை பேச வைப்பவர்களுக்கு பொன் மூட்டை கொடுக்கப்படும் என்றார். மக்கள் தினமும் வரிசையாக வந்து இளவரசியை பேச வைக்க முயற்சி செய்தார்கள்.
எதுவும் ஒத்துவரவில்லை, அரசரும் இது குறித்து கவலையாக இருந்தார். அப்போது வயதான பெண்மணி ஒருவர் வாயிற் காவலாளியிடம் சண்டை போட்டு கொண்டிருந்தார். இது அரசரின் காதுக்கு வர, என்ன பிரச்சனை என அவரே நேரில் சென்று பார்த்தார். அந்த வயதான பெண்மணி கையில் ஒரு கோழி இருந்தது. அரசர் என்னம்மா என்ன பிரச்சனை என்று வினவினார்.
இளவரசியை பேச வைத்து, சன்மானம் வாங்கி செல்ல வந்தேன் என்றார் அந்த பெண்மணி. அம்மா, உங்களை விட இளமையானவர்கள் பலரும் வந்து அவரை பேச வைக்க முயற்சி செய்தார்கள், ஆனால் அவர்களாலேயே முடியாத போது நீ எப்படி இதை செய்வாய் என்றார் அரசர். வயதான பெண்மணியோ என்னால் முடியும் என்றார். அரசரும் அவரது விடா முயற்சிக்காக சரி உள்ளே வாருங்கள் என அனுமதி அளித்தார். அவர் கொண்டு வந்த கோழியுடன் அரணமனைக்குள் நுழைந்தார்.

இளவரசியை காண செல்லும் முன் அந்த கோழியை தூக்கி தனது தலையில் வைத்தார். இளவரசியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார் அந்த பெண்மணி. அவர் கேட்ட எந்த கேள்விக்கும் இளவரசி வாயை திறக்கவில்லை. ஆனாலும் விடாத அந்த பெண்மணி இளவரசியின் முன்னால் அங்கும் இங்கும் நடந்தார். இளவரசியோ அந்த கோழியையே வெறிக்க பார்த்தார்.
சிறிது நேரத்தில் கோழி சத்தம் எழுப்பி முட்டை ஒன்றை போட்டது. அது கீழே சத்தமாக விழுந்தது. அதையே கவனித்து கொண்டிருந்த இளவரசி அந்த பெண்மணி கேட்ட எந்த கேள்வியிலும் கவனம் செலுத்தவில்லை. இதை ஆச்சரியமாக அரசர் கவனித்து கொண்டிருந்தார்.
இவ்வளவு நடந்தும் வயதான பெண்மணி எதையும் பொருட்படுத்தாமல் இளவரசியிடம் கேள்விகளை தொடுத்துக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இளவரசி, உங்கள் தலையில் கோழி இருக்கிறது அது உங்களுக்கு தெரியுதா இல்லையா? முதலில் அதை கவனியுங்கள் என்று சத்தமாக கத்தினார். அரசர் மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார்.
பேசவே பேசமாட்டாள் என எண்ணிய தன் மகள் சத்தமாக பேசியதை பார்த்து சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். அந்த வயதான பெண்மணிக்கு அறிவித்ததை விட அதிகமாக பொன் மூட்டைகளை கொடுத்தார். உங்கள் உருவத்தை வைத்து உங்களை குறைவாக மதிப்பிட்டு விட்டேன் என்னை மன்னியுங்கள் என்றார். வயதான பெண்மணி பரிசுகளை பெற்று கொண்டு மகிழ்ச்சியாக சென்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications