குழந்தை நீதி கதைகள்: ஒரே கல்லு.. பெத்த லாபம்.. திட்டம் தீட்டியவர்கள், கடைசியில் நடந்த ட்விஸ்ட்
சென்னை: Kids story in Tamil: குட்டிஸ், எப்படி இருக்கீங்க. உங்க ஊர்ல மழை இருக்க? யாருக்கெல்லாம் ஸ்கூல் லீவு விட்டுருக்காங்க? சரி நம்ம கதைல கூட இன்னைக்கு மழையால் கிடைச்ச ஒரு பாறையை பற்றி தான். சரி வாங்க கதையை படிச்சு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கலாம்.
என்னறைக்குமே இல்லாத அளவுக்கு அந்த கிராமத்தில் மழை அதிகமாக பெய்தது. மக்களால் தங்களது வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு மழை. ஊரே வெள்ளக்காடாக மாறியது. மக்கள் இந்த மழை எப்போது நிற்கும் என கடவுளை நோக்கி வேண்டுதல்கள் வைக்க ஆரம்பித்தார்கள். ஒருவழியாக சில நாட்களில் மழை விட்டதும், ஊருக்குள் புகுந்த வெள்ள நீர் வற்ற தொடங்கியது.

பாலு அன்று வீட்டை விட்டு வெளியில் நடந்து கொண்டிருந்தான். அப்போது அவர்கள் ஊரில் உள்ள ஆற்றின் அருகில் திடீரென ஒரு பாறையை பார்த்தான். இதுவரை அவன் கண்களில் இப்படி ஒரு பாறை படவில்லை. அவன் கண்களுக்கு அந்த பாறை பார்ப்பதற்கு விநாயகர் சிலையை போல தெரிந்தது. மக்கள் வேண்டியது போல விநாயகர் தான் இந்த மழை வெள்ளத்தை நிறுத்தியுள்ளார் என எண்ணினான். அவன் அதை சொல்லி சத்தமாக கத்தினான் அருகில் யாரும் இல்லை என்றாலும் அவனது சந்தோஷத்துக்கு எல்லை இல்லை. அந்த பாறையின் முன் மண்டியிட்டு தலை வணங்கினான். ஊரை நோக்கி விரைந்தான். பூஜை செய்ய வேண்டும் என யோசித்துக்கொண்டே நடந்தான்.
பாலு ஊரை நோக்கி செல்லும் அதே நேரத்தில் , செல்வம் அதே ஆற்றின் கரையை அடைந்தான். அவன் கண்களுக்கும் அந்த பாறை புதிதாக தோன்றியது. அவன் ஒரு சிற்பி என்பதால் அந்த பாறை வெகு நாட்களாக அவன் தேடி கொண்டிருந்த ஒன்றை போல உணர்ந்தான். உடனடியாக வீட்டிற்கு சென்று உளியை எடுத்து வரலாம் என முடிவு செய்து கிளம்பினான்.
சிறிது நேரத்தில் அந்த வழியாக ஒரு வியாபாரி ஒருவன் வந்தான். அவன் அந்த ஆற்றில் முகத்தை கழுவி விட்டு சிறிது இளைப்பாற முடிவு செய்தான். அருகில் இருந்த பாறையை பார்த்ததும் அவன் அதில் அமர்ந்து இளைப்பாறினான். அவனுக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. தனது நண்பர்களும் இந்த வழியாக பயணம் செய்ய சொல்லலாம். அவர்களுக்கு இளைப்பாற இந்த பாறை உதவியாக இருக்கும் என அவர்களுக்கு பறவையை தூது அனுப்பினான்.
அந்த வழியாக வந்த சிப்பாய் இந்த பாறை தனது சிப்பாய்கள் அணிவகுத்து வர கடுமையாக இருக்கும் இதை அப்புற படுத்த வேண்டும் என எண்ணினான். இவர்கள் அந்த பகுதியை சூழ அந்த ஊரில் துணி துவைப்பவர் வந்தார். அந்த பாறையை பார்த்ததும், நல்ல பெரிய பாறையாக இருக்கிறதே என தொட்டு பார்த்தான்.
அதற்குள் அங்கிருந்து முதலில் சென்ற பாலு, செல்வம் இருவரும் வந்தார்கள். பாலு நான் தான் விநாயகரை பார்த்தேன் அவரை வழிபட வேண்டும் என்றான். செல்வமும் இல்லை இந்த பாறையைத்தான் இத்தனை காலமாக தேடினேன் அதனால் இதை சிலையாக வடிக்க போகிறேன் என்றான். வியாபாரியோ, இந்த சுற்று வட்டாரத்தில் இளைப்பாற இடமே இல்லாத நிலையில் என் நண்பர்களுக்கும் நான் தூது அனுப்பிவிட்டேன் என்றான். சிப்பாய் அதை அப்புற படுத்துவதில் குறியாக இருந்தான்.

இவர்கள் இப்படி சத்தம் போட்டுக்கொண்டிருக்க, சற்றும் யோசிக்காத சலவை செய்யபவர், அவர் கொண்டு வந்த மூட்டையை பிரித்து துணிகளை ஆற்றில் நனைத்து அந்த பாறையில் வைத்து துவைக்க தொடங்கினான். சுற்றி இருந்த அனைவர்க்கும் அது அதிரிச்சியாக இருந்தது. அவர் என்னங்க, மழை வெள்ளம் வரத்துக்கு முன்னாடியே அந்த பாறை கல்லாக இங்கதான் இருந்தது. நான் அதுலதான் தினமும் துணிகளை சலவை செய்கிறேன். இப்போ புதைந்து இருந்த கல் பாறையாக வெளிப்பட்டுள்ளது என்றான்.
அவர்கள் அனைவரும் அமைதியாக அங்கிருந்து கிளம்பினார்கள். ஆகவே குழைந்தைகளே நாம் பார்க்கும் கண்களில் தான் வேறுபாடுகள் உள்ளன என்பதை தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications