குழந்தை நீதி கதைகள்: 'ஒரே அடியில் ஏழு' ராட்சசனை வீழ்த்திய டைலர்.. எப்படின்னு தெரியுமா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டீஸ், எப்படி இருக்கீங்க. இன்னைக்கு என்ன ஸ்டோரி தெரியுமா? ஆமாம் விசித்திர கதைகள் தான். யாருக்கெல்லாம் இந்த மாதிரி வித்தியாசமான கதைகள் பிடிக்கும். சரி கதை படித்து முடிச்சதும் ஓன் இந்தியால உங்க புகைப்படம் இடம்பெறுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கு என்பதை மறக்காம தெரிஞ்சிகிட்டிங்களா, அப்போ வெயிட் பண்ணாம இப்போவே அனுப்புங்க.. சரி இப்போ நம்ம கதைக்குள்ள போகலாம்.
அந்த ராஜ்ஜியத்தில் ஒரு டைலர் ஒருவன் இருந்தான். ஏதோ சுமாராக துணிகளை தைத்து கொடுத்து கொண்டு ஒரு வாழ்க்கையை வாழ்ந்தான். கிடைத்த உணவுகளை சாப்பிட்டு கொண்டு ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த அவன் அன்றைக்கு வெளியில் இருந்து ஒய்வு எடுக்க முடிவு செய்தான். அப்போது அவன் சாப்பிட முடிவு செய்து பிரட் துண்டுகளை பார்த்தான். அதில் சில ஈக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அதை அடித்து போட்டு பிரட் சாப்பிட்டான்.

அடித்து போட்ட ஈக்களை எண்ணினான். அது மொத்தம் 7 இருப்பதை எண்ணினான். ஒரு துணியில் ஒரே அடியில் ஏழு என தைத்து அதை இடுப்பில் கட்டிக்கொண்டு நடந்து சென்றான். அப்படி போகுமுன் சில வெண்ணெய் துண்டுகளை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்து கொண்டு நடந்தான். சிறிது தூரம் நடந்ததும் ஒரு பறவையை பிடித்து தனது இன்னொரு பாக்கெட்டில் போட்டான். கொஞ்ச தூரம் அப்படியே நடந்து சென்றான்.
காட்டு வழியாக நடக்கும்போது அங்கு ஒரு பெரிய ஜெயண்ட் இருப்பதை பார்த்தான். அதன் அருகில் இவன் ஒரு துரும்பு போல இருந்தான். ஆனாலும் டைலர் பயப்படாமல் அந்த பெரிய ஜெயண்டை பார்த்து திமிராக ஹெலோ என்று கூப்பிட்டான். என்னடா பொடியா? என்றது அந்த பெரிய ஜெயண்ட். டைலர் அவன் இடுப்பில் கட்டியிருந்த துணியை காட்டினான். அதில் ஒரே அடியில் ஏழு என எழுதியிருந்தது. அதை பார்த்த ஜெயிண்ட் கர்ஜினையோடு, ஒரு பாறையை எடுத்து கையில் நசுக்கி அதில் இருந்து தண்ணீர் வெளியேறுமாறு செய்தான்.
எங்க இதை பண்ண முடியுமா என ஜெயண்ட் கேட்க, இதை பார்த்த டைலர் அவன் பாக்கெட்டில் இருந்த வெண்ணெய் துண்டுகளை எடுத்து கைகளால் நன்றாக பிழிந்து எடுத்தான். அதில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதை பார்த்து ஏமாந்த ஜெயண்ட், இதை பண்ணுடா பொடி பயலே என இன்னொரு பாறையை எடுத்து வேகமாக தூக்கி எறிந்தான். உன்னால இந்த மாதிரி தூக்கி போட முடியுமா என்றது அந்த ஜெயண்ட். உடனடியாக அவன் பாக்கெட்டில் இருந்த பறவையை வெளியில் எடுத்தான். அதை பறக்க விட்டான்.
அது விட்டால் போதும் என தப்பித்து பறந்து சென்றது. அதை கண் பார்க்கும் திசை முழுவதும் காணவில்லை. இதை பார்த்து ஏமாந்த அந்த ஜெயண்ட் இவன் பலசாலி என ஏமாந்து காட்டுக்குள் மறைந்தான். இந்த செய்தி காட்டு தீ போல பரவியது. அரசரின் காதுகளை இந்த செய்தி எட்ட அந்த டைலரை வர வைக்கிறார்.
உன்னைப்பற்றி கேள்விப்பட்டேன். நமது அரண்மனையின் பின்னால் 2 பெரிய ஜெயண்ட் இருக்கிறார்கள். அவர்களை வெளியில் அனுப்ப உன் உதவி வேண்டும். அப்படி செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என டைலர் கேட்க என் மகளை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார்.

உற்சாகத்தில் அந்த ஜெயண்ட்கள் இருக்கும் இடத்திற்கு சென்றான். அருகில் இருந்த மரத்தில் ஏறி பார்த்தான். இரண்டும் நன்றாக உறங்கி கொண்டிருந்தது. ஒரு சிறிய கல்லை எடுத்து ஒரு ஜெயண்ட் மேல் போட்டான். அது தூக்கத்தில் முழித்து, ஏன் என்னை கல்லை வீசி எழுப்பினாய் என்று கேட்க, நானா இல்லையே என்று சொல்ல இரண்டும் மீண்டும் தூங்கின. இந்த முறை மற்றொரு ஜெயண்ட் மேல் வீசினான் டைலர். உடனே கோபம் வந்த ஜெயண்ட் நான்தான் உன்மீது கல்லை போடவில்லை என்று சொன்னேனே என்று ஒரு அடி விட்டது. என்னையே அடிச்சிட்டியா என மற்றொரு ஜெயண்ட் அடிக்க இரண்டும் அடித்துக்கொண்டு இறந்தது.
ஜெயண்ட்களை அடித்து கொன்ற மாவீரனாக டைலரை அனைவரும் பார்த்தார்கள். இளவரசியை மணமுடித்து ராஜ்யத்தில் ஒரு பகுதியை டைலருக்கு கொடுத்தார் அரசர். டைலர் சந்தோசமாக வாழ தொடங்கினான்.












Click it and Unblock the Notifications