குழந்தை நீதி கதைகள்: முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.. ஒரு குட்டி ஸ்டோரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ், எப்படி இருக்கீங்க.. எல்லோரும் உங்களோட பரிச்சைகளுக்காக கண்டிப்பா தயாராகிக்கிட்டு இருப்பீங்க. அப்டியே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணறதுக்கு இந்த கதையை படிங்க. ரெண்டு நண்பர்கள், உருவத்திலும், உயரத்திலும் ஒரே மாதிரி இருக்கக் கூடிய ஜிம் மற்றும் ஜாம் கதையைதான் நீங்க படிக்கச் போறீங்க.

ஜிம், ஜாம் ரெண்டு பெரும் ஸ்கூல் படிக்கும்போது இருந்தே நல்ல நண்பர்கள். படிப்பிலும் இருவரும் ஒன்றுபோலவே கெட்டிக்காரர்கள். படிப்பை முடித்து அவர்களுக்கு ரொம்பவும் பிடித்த ஆசிரியர் பக்கத்து கிராமத்தில் ஒருவருடம் ஒரு வேலை இருக்கிறது. அது ஒரு பியூன் வேலைதான், ஆனால் அதிலிருந்து கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும் என்றார்.

Short story for kids in Tamil : The two boys

ரெண்டு பேருமா?, ஒரு வேலைதான் என்றால் எப்படி போக முடியும் ஒருவர்தான் போக முடியும் என்றான் ஜிம். ஆசிரியர் சொன்னார் ஆமாம், ஆனால் நீங்கள் இருவருமே அதற்கு தகுதியானவர்கள். ஆகையால் ஜிம் 9 மணிக்கும் ஜாம் 11 மணிக்கும் அங்கு சென்று பாருங்கள் என்றார். மறுநாள் இருவரும் போகலாம் என முடிவு செய்தார்கள்.

நாளை செல்வதற்காக இருவருமே அவர்களது உடைகளை நேர்த்தியாக தேர்வு செய்தார்கள். ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார்கள். ஆனால் அன்றிரவே அவர்கள் எதிர்பார்க்காத வண்ணம் இடியுடன் கூடிய மழை பெய்தது. அந்த ஊர் மலை பகுதிக்கு அருகில் என்பதால் கற்கள் உருண்டு பாதை முடங்கும் அளவுக்கு மலை பெய்தது. மேலும் ஊரெங்கும் தண்ணியாக வெள்ளம் பெருக்கெடுத்தது.

இருவரும் விடியும்வரை பொறுத்து பார்க்கலாம் என முடிவு செய்தார்கள். விடியற்காலம் வரை பெய்து கொண்டிருந்த மழை குறைய ஆரம்பித்தது. ஜிம் வேலைக்கு செல்ல தயாரானான். வழியெங்கும் வெள்ளம் இருக்க அவன் முடிந்தவரை ஷூ நனையாமல் நடந்தான். அதற்குமேல் கற்கள், வெள்ளம் என கரடு முரடாக பாதை இருந்தது. இது பியூன் வேலைதானே, வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என அங்கு செல்லாமலேயே திரும்பி வந்தான். 9 மணியும் தாண்டியது.

ஜாம் அவனுக்கான நேரம் வரவே வீட்டில் இருந்து வெளியே வந்தான். வானம் தெளிவாக இருந்ததை பார்த்து மகிழ்ந்தான். அப்படியே நடக்க ஆரம்பித்தான் கற்களும், தண்ணீரும் அவன் பாதையை அடைக்க அந்த கற்களை நகட்டி அந்த வெள்ளம் இருக்கும் இடங்களில் போட்டான். அதன் மேல் கால் வைத்து முன்னேறி நடந்தான். அதனால் அவனது ஷூக்குள் நீர் புகவில்லை.

அவனும் குறித்த நேரத்தில் அந்த அலுவலகத்தை அடைந்தான். கண்டிப்பாக அவனுக்குத்தான் அந்த வேலை கிடைத்தது. முதல் விஷயம் ஜிம் அந்த வேலைக்காக முயற்சி எடுக்கவில்லை. ஜாம் முயன்று முன்னே சென்றான் போட்டி இல்லாமல் தேர்வானான். அப்படியே படிப்படியாக முன்னேறி அந்த கிராமத்தின் தலைவராக உயர்ந்தான்.

Short story for kids in Tamil : The two boys

ஜாம், தவறவிட்டது வாய்ப்பை மட்டுமில்லை. எந்த வேலையை பெரிதாக எண்ணாமல் தட்டி கழித்தானோ, இப்போது அதுபோல கூப்பிடும் வேலைகளுக்கு சென்று வருமானம் ஈட்டி வருகிறான். ஒருநாள் ஜிம் ஜாம் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட, இருவரும் பேசிக்கொள்கிறார்கள், நான் வாய்ப்பை தவறவிட்டேன் என ஜிம் சொல்ல, அப்படியில்லை உன் முயற்சியை விட்டுவிட்டாய், நான் அந்த தடைகளையும் தாண்டி எப்படி முன்னேறலாம் என எண்ணினேன் என்றான் ஜாம். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு நகர்ந்தார்கள்.

ஆகையால், குழந்தைகளே நீங்கள் உங்களுக்கு எதிராக இருக்கும் தடைகளை எப்படி படிக்கல்லாக மாற்ற வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+