மேட்ச் பிக்சிங்கா? அம்பயரையே சீனிவாசன் தான் செட் பண்ணுவாரு! போட்டுடைத்த லலித் மோடி.. சிஎஸ்கே ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 ஐபிஎஸ் சீசனுக்காக இந்தியா மட்டுமல்லாது உலகமே ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரான சீனிவாசன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் ஐபிஎல் முன்னாள் தலைவரான லலித் மோடி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளில் அம்பையர்கள் செட்டிங் செய்யப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் அவர்.

உலக அளவில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாக பிசிசிஐ இருக்கிறது. குறிப்பாக ஐபிஎல் வந்த பிறகு உலகின் பல அணி வீரர்களும் ஐபிஎல்-ல் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். குறைந்த கால இடைவெளியில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொட்டுவதால் ஐபிஎல்-ல் விளையாடுவது கௌரவம் மட்டுமல்லாது ஒரு கனவாகவே பார்க்கப்படுகிறது.

lalit modi srinivasan ipl

மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் திறமையை வைத்து மற்ற ஐசிசி போட்டிகளில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல்-லை தொடங்கி அதன் தலைவராக இருந்தவர் லலித் மோடி.

ஆரம்பத்தில் வெற்றிகரமாக ஐபிஎல்-லை உருவாக்கியதில் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சுமார் 400 கோடிக்கு மேல் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர் கிரிக்கெட் போர்டில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில் 2010ஆன் ஆண்டில் லண்டனில் தஞ்சம் புகுந்தார். அதே நேரத்தில் தான் தப்பிச் செல்லவில்லை தாவூத் இப்ராஹிமின் மிரட்டல் காரணமாகவே இந்தியாவை விட்டு வெளியேறியதாக லலித் மோடி கூறியிருந்தார்.

இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் லலித் மோடி. அதில்," சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராகவும் இருந்தார். அப்போது பல மோசடிகளை அவர் அரங்கேற்றினார். சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளுக்கு சென்னையை சேர்ந்த அம்பையர்கள் தான் நியமிக்கப்பட்டனர்.

வேறு அம்பையர்கள் நியமனம் செய்யப்பட்டால் உடனடியாக அவர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கெல்லாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் பிசிசிஐ செயலாளராக இருந்த சீனிவாசன் தான் காரணம். ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிளிண்டஃப் விளையாட வேண்டும் என சீனிவாசன் ஆர்வமாக இருந்தார். அதனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கக் கூடாது என முன்னதாகவே கூறியிருந்தார். மேலும் வேறு வழியில்லாமல் நாங்களும் வேறு யாரும் அவரை ஏலத்தில் வேண்டாம் என கேட்டுக் கொண்டோம். ஒருவேளை ப்ளிண்டஃப் சென்னை அணிக்கு வராமல் இருந்திருந்தால் ஐபிஎல் போட்டிகளை நடத்தவே சீனிவாசன் அனுமதித்திருக்க மாட்டார்.

சென்னை விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் அம்பையர் மாற்றப்பட்ட போது மறைமுகமாக மேட்ச் பிக்சிங் நடந்தது. நான் இதை சொன்னதால் எனக்கு எதிராக சீனிவாசன் திரும்பினார்" என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் லலித் மோடி.

2025 ஐபிஎல் போட்டிகள் தான் மகேந்திர சிங் தோனியின் கடைசி போட்டியாக பார்க்கப்படுகிறது. அவரை வெற்றி கோப்பையுடன் வழியனுப்ப வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்களு,ம் சிஎஸ்கே அணி நிர்வாகமும் ஆர்வத்தோடு காத்திருக்கும் நிலையில் லலித் மோடியின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே மேக்ஸ் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிஎஸ்கே சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லலித் மோடியின் குற்றச்சாட்டுகளை வைத்து சிஎஸ்கே ரசிகர்களை விமர்சித்து வருகின்றனர் பிற அணிகளின் ரசிகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+