Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TITANIC தெரியும்.. அது என்ன COWTANIC.. பிப்., 14 பசு அரவணைப்பு தினத்தால் இணையதளத்தை கலக்கும் மீம்!

பிப்ரவரி 14ம் தேதியை Cow Hug Day என கொண்டாட இந்திய விலங்குகள் நலவாரியம் அறிவித்த நிலையில் கிளம்பிய எதிர்ப்பால் அதனை இன்று திரும்ப பெற்றது. இருப்பினும் Cow Hug Day தொடர்பான மீம்கள் இணையதளத்தில் வேகமாகி பரவி வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அந்த நாளை பசு விரும்பிகள் ‛Cow Hug Day' என்ற பெயரில் பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என விலங்குகள் நலவாரியம் 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இது சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பான மீம்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதன் விபரம் வருமாறு:

ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதலர் தினத்தன்று பசு அரவணைப்பு தினம் (Cow Hug Day) கொண்டாட மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதாவது மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:

பிப்ரவரி 14ல் பசு அரவணைப்பு தினம்

பிப்ரவரி 14ல் பசு அரவணைப்பு தினம்

இந்திய கலாசாரம், கிராமப்புறங்களின் பொருளாதாராரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது. மேலும் நமது வாழ்க்கையை தாங்கும் வகையில் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவியாக இருக்கிறது. மனிதர்களுக்கு எல்லா செல்வங்களையும் அளிப்பதோடு, தாயை போல் ஊட்டமளிக்கும் பணியை ‛கோமாதா' எனும் பசு மேற்கொண்டு வருகிறது. மேற்கத்திய கலாசார தாக்கத்தால் வேதமரபுகள் சில அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய கலாசாரத்தால் நமது கலாசாரம், பாரம்பரியம் என்பது மறக்கடிக்கப்பட்டுள்ளது. பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு ஏற்படும். அதோடு நமக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே அனைவரும் பசுக்களின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நேர்மறையான ஆற்றல் பெற பிப்ரவரி 14ம் தேதியை பசு அரவணைப்பு தினமாக (Cow Hug Day) பசுவிரும்பிகள் கொண்டாட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

ஆதரவும், எதிர்ப்பும்

ஆதரவும், எதிர்ப்பும்

பசு அரவணைப்பு தினம் என்பது பசுக்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டது. பசுக்களால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்வதற்கான இன்னொரு வழியாக இது இருக்கும் என்பதால் தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என விலங்குகள் நலவாரியத்தின் சட்ட ஆலோசகரான பிக்ரம் சந்திரவன்ஷி தெரிவித்தார். இந்நிலையில் பசு அணைப்பு தினத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், இன்னொரு தரப்பினரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இணையதளங்களில் இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் இதுதொடர்பான மீம்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றனர். அந்த மீம்கள் பசு அரவணைப்பு தினத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருப்பதோடு, சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைக்கும் வகையிலும் உள்ளன. அதில் சில மீம்களை இங்கு பார்ப்போம்.

இதில் மட்டும் பிரச்சனையா?

இதில் மட்டும் பிரச்சனையா?

நாட்டில் ஜனவரி 21ம் தேதி நாய்க்குட்டி அரவணைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 10ல் நாய் அரவணைப்பு தினமும், ஜூன் 4ல் பூனை அரவணைப்பு தினமும், இந்த ஆண்டு செப்டம்பர் 10ல் வேட்டைநாய் அரவணைப்பு தினமும் கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டங்களை எல்லாம் பெரியதாக எடுத்து கொள்ளாதவர்கள் பசு அரவணைப்பு தினத்தை மட்டும் பிரச்சனையாக பார்க்கின்றனர்ன. இவர்களை நாம் என்ன சொல்ல? என பசு அரவணைப்பு தினத்துக்கு ஆதரவாக மீம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 செல்பி எடுக்க ரூ.50

செல்பி எடுக்க ரூ.50

பசு அரவணைப்பு தினம் பற்றிய செய்தி வெளியானவுடன் பலரும் பகிர்ந்த ஒரு மீம்மாக இது உள்ளது. அதாவது பசுவின் அருகே தெரியாத நபர்கள் சென்றால் அது காலால் உதைத்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. இதனை நினைவுப்படுத்தும் வகையிலும், தற்போதைய அறிவிப்பால் நிறையபேர் பிப்ரவரி 14ல் பசுவை அரவணைத்து போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட வாய்ப்புள்ளதால் பசு கட்டணம் வசூலித்தால் எப்படி இருக்கும்? என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த மீம் அமைந்துள்ளது. இதில் ஒரு பசு கையில் போர்டு ஒன்றை வைத்திருக்கிறது. அதில், ‛‛ஹக் செய்ய ரூ.50, ஹக் செய்து செல்பி எடுக்க ரூ.75, உதைப்பட பணம் எதுவும் தேவையில்லை'' என கூறும் வகையில் அந்த மீம் உள்ளது.

 COWTANIC தெரியுமா?

COWTANIC தெரியுமா?

இந்த மீம் டைட்டானிக் படத்தை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது. டைட்டானிக் படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் ஒரு காட்சியில் கப்பலின் முன்பு கைகளை விரித்தபடி கடலை ரசிப்பார்கள். அதீத காதலின் வெளிப்பாடாக இந்த காட்சி இடம்பெற்ற நிலையில் இந்த மீம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதில் கப்பலின் முன்பு பசுவுடன் ஒருவர் நிற்கிறார். அதில் எழுத்து மற்றுமு் இயக்கம் இந்திய விலங்குகள் நலவாழ்வு வாரியம், படத்தின் பெயர் COWTANIC, 2023 பிப்ரவரி 23ம் தேதி ரீலிஸ் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

கைவிட்ட மத்திய அரசு

கைவிட்ட மத்திய அரசு

இதற்கிடையே பசு அரவணைப்பு தினத்துக்கு கிளம்பிய எதிர்ப்பால் பிப்ரவரி 14ல் பசு அரவணைப்பு தினம் கொண்டாட பசு விரும்பிகளுக்கு அறிவுறுத்திய இந்திய விலங்குகள் நலவாரியம் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+