பாருங்களேன்.. "அதையே" மறந்துட்டோம்.. மைதானத்தில் மெகா ட்விஸ்ட் தந்த கோலி.. குவியும் மீம்ஸ்கள்!
சென்னை: ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று போட்டியில் விராட் கோலி ஆடிய விதத்தை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
ஆசிய கோப்பை 2022 தொடரில் இந்திய அணி பைனல்ஸ் செல்ல முடியாமல் வெளியேறி இருக்கிறது. இந்திய அணி இந்த தொடரில் தோல்வி அடைந்தாலும், ரசிகர்கள் பலரும் அதை மறந்துவிட்டு கோலியின் 71வது சதத்தை கொண்டாடி வருகிறார்கள்.
கோலி சரியாக 1020 நாட்களுக்கு பிறகு நேற்று 71வது சதத்தை அடித்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய அவர் 6 சிக்ஸர், 12 பவுண்டரி என்று 61 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தார்.
இதுவே டி 20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் எடுக்கும் அதிகம் ரன்கள் ஆகும்.

கோலி
நேற்று போட்டியில் விராட் கோலி ஆடிய விதத்தை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். விராட் கோலி நேற்று தொடக்கத்தில் இருந்தே வேகமாக ஆடினார். ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியதால் இந்திய அணிக்கு எந்த பதற்றமும் இல்லை. இதனால் இந்திய அணி வீரர்கள் டென்சன் இன்றி ஆடினார்கள். கோலியும் எந்த டென்ஷனும் இன்றி கூலாக ஆடினார். அவரிடம் பழைய உதேவகம் ஆக்ரோஷம் இருந்தது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மீம்ஸ்
நேற்று போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. கேப்டனாக நேற்று ராகுல் ஆடினார். கேப்டன்சி வந்த பின் ராகுலும் பார்மிற்கு வந்தார். இத்தனை நாட்கள் ரோஹித் கேப்டன்சி கீழே கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்கப்பட்டது. ஒருநாள் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று ராகுல் கேப்டன்சியில், டி 20 போட்டியில் கோலி சதம் அடித்துள்ளார். இதை வைத்தும் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

சதம்
நேற்று கோலி சதம் போட்டதை பலர் எமோஷனலாக கொண்டாடினார்கள். பலர் மிகவும் எமோஷனலாக காணப்பட்டனர். ஏனென்றால் அவரின் சதத்திற்காக ரசிகர்கள் சுமார் 1020 நாட்களாக காத்து இருந்தனர். அந்த சதம் இறுதியாக வந்துவிட்டது. இதனால் பலர் தங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயமாக இதை கொண்டாடினார்கள். இதை வைத்தும் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

எப்படி ஆடினார்?
நேற்று கோலி சதம் போட்டதும் அங்கே இருந்த ரசிகர்கள் அவரை பார்த்து குனிந்து வணங்கினார்கள். அவரை கிரிக்கெட் உலகில் கிங் என்று அழைப்பதால் இப்படி வணங்கினார்கள். அப்போது அங்கே இருந்த சீக்கியர் ஒருவரும் இப்படி வணங்கினார். இந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இதை வைத்தும் நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

டிரெண்டிங்
இந்திய அணியில் கோலி 71வது சதம் அடிக்க முடியாமல் போனதற்கு பாண்டிங் செய்வினைதான் காரணம் என்று பலர் கிண்டலாக கூறி வந்தனர். ஏனென்றால் அவரின் 71 சதம் என்ற சாதனையை கோலி சமன் செய்துவிடுவார். இதனால் பாண்டிங் செய்வினை செய்துவிட்டதாக பலரும் கிண்டலாக கூறி வந்தனர். அதேபோல் ஒரே ஒரு 100 தான்.. Asia cupல் தோல்வி அடைந்ததை மொத்தமா மறந்துட்டானுக என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications