முழுசா சந்திரமுகியாக மாறியிருக்கிற சென்னையை பாருங்க.. இன்று தான் ஆரம்பமே
சென்னை: கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சென்னை முழுசாக இன்று தான் சந்திரமுகியாக மாறி உள்ளது. இத்தனை நாள் பார்த்த சென்னைக்கும் இன்றும் பார்க்கும் சென்னைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்துவிட்டது. சென்னையில் செங்கல்பட்டு தொடங்கி ஆவடி வரையிலும், பூந்தமல்லிதொடங்கி மெரினா வரையிலும் மழை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டது. சென்னையில் இன்று தான் மழை ஆரம்பித்துள்ளது.

தென்சென்னையில் புயல் தீவிரமடைந்துள்ளது. கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை நிலவரம் குறித்து ட்விட்டரில் பதிவிடுவோர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் காலையிலேயே மழை பெய்த காரணத்தால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவதிக்கு உள்ளாகினர். பல குழந்தைகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு போக முடியவில்லை. இதேபோல் அலுவலகம் செல்வோர் போக முடியாத அளவிற்கு மழை பெய்து வருவதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் மடிப்பாக்கம், துரைப்பாக்கம், விமான நிலையம், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அம்பத்தூர், பாடி, முகப்பேர், வில்லிவாக்கம், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு என சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மழை அதிகமாக பெய்துவரும் காரணத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. அதேநேரம் சில சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம்.

சென்னை நங்கநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி எடுத்த நடவடிக்கை காரணமாக , அங்கு மழை நீர் தேங்கவில்லை. சென்னையின் பல்வேறு சாலைகளிலும் தண்ணீர் பெரியஅளவில் தேங்கவில்லை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் வெள்ள நீர் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் வெளியேற சில இடங்களில் வழி இல்லாத நிலையும் உள்ளது. அதை பற்றி மீம்ஸ்களும் பரவி வருகின்றன.


மழை குறித்து சென்னை மாநகராட்சி புகார் எண்: இதனிடையே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் புகார் அளிக்க சிறப்பு தொலைபேசி எண்களை மேயர் பிரியா அறிவித்துள்ளார். இதன்படி, 1913, 04425619204,04425619206, 04425619207 ஆகிய எண்களுக்கு அழைத்து மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications