மே மாசம்னு நினைச்சு ஆகஸ்ட் மாசத்துல பொளந்து கட்டுது.. யாராவது நிறுத்த சொல்லுங்களேன்!
சென்னை: 'கடவுள் பாதி மிருகம் பாதி.. கலந்து செய்த கலவை நான்' என ஆளவந்தான் மாதிரி, வெயில் பாதி, மழை மீதி என கலந்து கட்டி அடித்து வருகிறது ஆகஸ்ட் மாதம். பிறகென்ன அதையே ஒரு கண்டெண்ட் ஆக்கி மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் என்பார்கள். ஆனால் இந்தாண்டு ஆகஸ்ட்டோ காற்றையும் காயச் செய்யும் அளவிற்கு வெயில் பட்டையைக் கிளப்பி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் மே மாதத்திற்கு இணையாக ஆகஸ்ட் மாதத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், 'யாராவது சூரியனுக்கு ஞாபகப் படுத்துங்களேன்.. இது மே மாசம் இல்லை.. ஆகஸ்ட் மாதம் என' என்று மீம்ஸ் போட்டு மக்கள் புலம்பி வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களில் இப்படி என்றால், சென்னையில் காலை முதல் மதியம் வரை வெயில், மாலையில் கொட்டித் தீர்க்கும் மழை என கலந்து கட்டி அடித்து வருகிறது. பகலில் வெயிலில் தலை காட்ட முடியவில்லை என்றால், மாலையில் மழையில் வெளியில் எங்கும் செல்ல முடிவதில்லை. எனவே வெயிலோடு, மழையையும் சேர்த்து கலந்து கட்டி மீம்ஸ்களாக்கி சமூகவலைதளப் பக்கங்களை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications