வெயில் அடிச்சாலும் வேர்க்கும்.. மழை பெய்ஞ்சாலும் வேர்க்கும்.. மண்டகோளாறு புடிச்ச ஊரு!
சென்னை: வெயிலால் தகித்துக் கொண்டிருந்த தமிழகத்தில், நேற்று மாலை முதல் மழை ஆங்காங்கே கொட்டி வருவது, பூமியைக் குளிர்வித்திருக்கிறதோ இல்லையோ மக்கள் மனதைக் குளிர வைத்திருக்கிறது. 'அடடா மழைடா.. அடை மழைடா..' என இந்த மழையை மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, நெட்டிசன்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் காலநிலையையே சென்னையை வைத்துத்தான் நிர்ணயிப்பார்கள். சென்னையில் வெயில் அடித்தாலும் அது செய்திதான், மழை கொட்டினாலும் அது செய்திதான். உடனே ஒரு ஹேஷ்டேக்கைப் போட்டு சமூகவலைதளங்களில் டிரெண்ட்டிங் ஆக்கி விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான் நேற்று மாலை முதல் சென்னையில் விட்டு விட்டு, கொட்டி வரும் மழையையும் #chennairains என ஹேஷ்டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த மழையால் பூமி குளிர்ந்திருக்கிறதா இல்லை சூட்டை இன்னமும் கிளப்பி விட்டிருக்கிறதா என்பதையெல்லாம் ஓரம் தள்ளி வைத்து விட்டு, வழக்கம்போல் கலகல மழை மீம்ஸ்களால் சமூகவலைதளங்களை குளிர வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழை வந்தாலே மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை எதிர்பார்ப்பு வந்து விடும் என்பதில் ஆரம்பித்து, சென்னைதான் இப்படிக் குளிர்ந்து கிடக்கிறது, மற்ற பல மாவட்டங்களில் மழை சிறு தூறலோடும், பில்டப்போடும் ஏமாற்றி விட்டது என்பது வரை, மழை பற்றிய அனைத்து செய்திகளையும் ரவுண்ட் அப் செய்து மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications