எல்லோரும் ஏன் Chin Tapak Dam Dam சொல்றாங்க ப்ரண்ட்ஸ்.. அர்த்தம் என்ன தெரியுமா?
சென்னை: இன்றைய இணைய உலகில் புதிய ட்ரெண்ட்கள் தினமும் உருவாகி வருகின்றன. அந்த வகையில், "சின் தபாக் டம் டம்" (Chin Tapak Dam Dam) என்ற சொற்றொடர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சொற்றொடர், Chhota Bheem/சோட்டா பீம் என்ற குழந்தைகள் கார்ட்டூன் தொடரிலிருந்து எடுக்கப்பட்டது. ஆனால் இன்று இதை உச்சரிக்காத பிரபலங்களே இல்லை.
சோட்டா பீம் கார்ட்டூன் தொடரில் தாகியா என்ற கதாபாத்திரம் தனது மந்திர சக்திகளைப் பயன்படுத்த முயற்சிக்கும் போது இந்த சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். இந்த காட்சியை ஒரு ரசிகர் மீண்டும் பகிர்ந்ததன் மூலம் இந்த சொற்றொடர் தற்போது வைரலாகியுள்ளது.

பிரபலங்களும் இணைந்தனர்: இந்த ட்ரெண்டில் பல பிரபலங்களும் இணைந்துள்ளனர். ஸ்ரேயா கபூர், ஐஸ்வர்யா சர்மா போன்ற நடிகைகள் இந்த சொற்றொடரைப் பயன்படுத்தி ரீல்ஸ் உருவாக்கியுள்ளனர். இந்த சொற்றொடர் மீது மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டியதால், பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் இந்த மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
சோட்டா பீம் கார்ட்டூன்: சோட்டா பீம் கார்ட்டூன் தொடர், சிறுவயதில் பலரையும் கவர்ந்த ஒரு தொடர். தனது சொந்த ஊரை பாதுகாக்கும் துணிச்சலான சிறுவனின் கதை இது. இந்த கார்ட்டூன் தொடர் தற்போது மீண்டும் இந்த டயலாக்காலும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சோட்டா பீம் கார்ட்டூன் தொடரை அடிப்படையாகக் கொண்ட படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

"சின் தபாக் டம் டம்" என்ற சொற்றொடர், கார்ட்டூன் தொடரிலிருந்து வந்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது, நினைவுகளுக்கு அழிவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இப்படித்தான் கரண் கதாப்பாத்திரம் பேசும் சுரூவ் திடீரென பேமஸ் ஆனது. எனவே எது எப்போது புகழடையும் என்பதை யாராலும் யோசித்துவிட முடியாது மக்களே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications