மெர்சல் பாக்கலையா? பஞ்சாபில் ஆளப்போறான் தமிழன்... அஸ்வினுக்காக தெறிக்கும் டூவீட்ஸ்!
கிரிக்கெட் வீரர் அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்திருப்பதற்கு சிஎஸ்கே அணி ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும் மெர்சல் படம் போல பஞ்சாபிலும் ஆளப்போறான் தமிழன் என்று ரசிகர்கள் அஸ்வினுக்கு வாழ்த்து
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இதுவரை விளையாடி வந்த அஸ்வின் ரவிச்சந்திரனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. இது சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது, எனினும் மெர்சல் படம் போல பஞ்சாபில் ஆளப்போறான் தமிழன் என்று ரசிகர்கள் அஸ்வினுக்கு வாழ்த்து டுவீட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் நடந்து வருகிறது. சூதாட்ட புகாரால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் பங்கேற்பதால் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர்.
இன்று நடைபெறும் ஏலத்தில் அஸ்வின் ரவிச்சந்திரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினை ரூ. 7.60 கோடி ஏலத்திற்கு எடுத்துள்ளது. சென்னை வீரர், சிஎஸ்கே அணியின் ஸ்பின் பவுலர் என்ற சிறப்புகளை பெற்ற அஸ்வின் சிஎஸ்கே அணியில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய ஏலம் குறித்து டுவிட்டியிருந்த அஸ்வின், பஞ்சாப் அணிக்கு தேர்வானதில் மகிழ்ச்சி. கேஸினோ ஆட்டம் போல ஏலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கும். சிஎஸ்கேவுடனான அருமையான நினைவுகளுக்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார். அஸ்வினின் இந்த டுவீட்டுக்கு பலரும் மிஸ் யூ டுவீட் போட்டிருக்கிறார்கள்.
|
அஸ்வினுக்கு வாழ்த்து
பஞ்சாப்பும் தமிழ்நாடு தான்.. மெர்சல் பாத்தீங்களா இல்லையா, ஆளப்போறான் தமிழன் என்று டுவீட்டியுள்ளார் இவர்.
|
சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தம்
அஸ்வின் சிஎஸ்கே அணியில் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்து டுவீட்டியுள்ளார் இவர். என்றாலும் மனநிறைவோடு நல்லா இரு மேன் என்று வாழ்த்தியுள்ளார்.
— Gopal (@GopalBlaster) January 27, 2018 |
அஸ்வினுக்காக 'மெர்சல்' வீடியோ
கிங்ஸ் லெவன் அணக்கு அஸ்வினை சிஎஸ்கே அணி கொடுத்துவிட்டதை குறிப்பிடும் வீடியோவும் சமக வலைதளத்தில் களைகட்டுகிறது. அதே மெர்சல் காட்சிகளை வைத்து தான் இந்த அசத்தல் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.
|
சிஎஸ்கே மேட்ச்சு சிக் லீவ்
சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற ஜெர்சியில் இனி அஸ்வினை பார்க்க முடியாதா என்று பலரும் ஷாக் டுவீட் போட்டு வருகின்றனர். புதிய அணிக்கு போனது மகிழ்ச்சி தான் என்றாலும் சிஎஸ்கேக்கு எதிரான மேட்ச்னா சிக் லீவ் போட்டுடு தல என்று டுவீட்டியுள்ளார் இவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications