கேதர் ஜாதவாக மாறிய தோனி.. இந்த டீம் வச்சி எப்படிணே 5 கப்பு வாங்கின.. தெறி சிஎஸ்கே மீம்ஸ்!
சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பின் டெல்லி அணியிடம் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்த நிலையில், சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.
தலைநகரம் படத்தில் சுந்தர் சி வடிவேலுவிடம், பல்லு விளக்கலையா.. என்று கேட்பார்.. அதற்கு காலைலயா என்று பதில் கேள்விக்கு, சுமார் ஒரு 6 மாசமா என்று அதிர்ச்சி கொடுப்பார். அதனை அப்படியே மாற்றி சிஎஸ்கே ரசிகர்களாக சுந்தர் சி-யையும், வடிவேலுவாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, கடைசி எப்போ 180+ சேஸிங் பண்ண என்று கேள்வி கேட்க, அதற்கு சிஎஸ்கே அணி, "சும்மா ஒரு 6 வருஷம் இருக்கும்" என்று பதிலளிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

அருணாச்சலம் படத்தில் சீனியர் ரஜினிகாந்த், தனது மகனை பார்த்து, "வா.. அருணாச்சலம்.. நீ இங்க வருவனு எனக்கு தெரியும்" என்று சொல்லுவார். நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை பார்த்த ரசிகர்கள் பலரும் கேதர் ஜாதவின் ஆட்டத்தை நினைவுப்படுத்தினர். இதனால் சீனியர் ரஜினியை கேதர் ஜாதவாக மாற்றி, "வா அருணாச்சலம்.. நீ வருவனு எனக்கு தெரியும்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒரிஜினல் ஜேங்ஸ்டர் ரகம்டா..
யாரடி நீ மோகினி படத்தில் தனுஷை பார்த்து ரகுவரன், "பரவால விடு.. நீ இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்" என்று சொல்வார். இதில் வரும் தனுஷாக தோனியையும், ரகுவரனாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, "பரவால.. நீ இவ்வளவு தூரம் கொண்டு வந்ததே பெரிய விஷயம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மனசாட்சியோட பேசுங்கடா ரகம்.

கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் எல்லா ஏரியாலையும் பொண்ணுங்களை கிண்டல் செய்வான்டா இந்த பவரு.. என்று சொல்வார். அதனை அப்படியே மாற்றி, ஓபனிங், ஒன் டவுன், நம்பர் 4, ஃபினிஷர் என்று எல்லா இடத்துலயும் ரன் அடிப்பான்டா இந்த பவரு என்று கேஎல் ராகுலுடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.
அறை எண் 305ல் கடவுள் படத்தில் சுகுமார் இளவரசை பார்த்து, எப்படிணே.. எப்படி.. இவ்வளவு காசு சம்பாரிச்சிகிட்டு இந்த குப்பை மாதிரி இடத்துல தங்கி இருக்கீங்க என்று கேட்பார்.. அதுபோல் சுகுமாராக சிஎஸ்கே ரசிகர்களையும், இளவரசை தோனியாகவும் மாற்றி, "எப்படிணே.. எப்படி.. இந்த மாதிரி மொக்க டீம வச்சுகிட்டு 5 கப்பு வாங்கின" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அதான்யா எங்களுக்கும் டவுட்டு ரகம்.















Click it and Unblock the Notifications