Memes: 4 பால் ஆடும் தலைவனை, 13வது ஓவரில் பேட்டிங் ஆட வைத்த சிஎஸ்கே.. தெறிக்கும் சென்னை அணி மீம்ஸ்!
டெல்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றுள்ளது. இந்த தோல்வியால் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் நிறைவு செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே தோல்வியை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.
"பம்பரக்கண்ணாலே" படத்தில் பைக் ஒன்றில் வடிவேலு முகம் பார்த்த போது, திடீரென அங்கு வரும் தம்பி ராமையா "இந்தா கிளியர் பண்ணிருவோம்" என்று கண்ணாடியை உடைப்பார்.. இதில் வரும் வடிவேலுவாக ராஜஸ்தான் அணியையும், தம்பி ராமையாவாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, "ஜுரெல் மற்றும் ஹெட்மயர் ஃபினிஷிங் பண்ணவே மாட்றாங்க" என்று சொல்வதாகவும், அதற்கு சிஎஸ்கே அணி, "இதோ இன்னைக்கு ஃபினிஷ் பண்ண வச்சிருவோம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயோ.. முடியலடா சாமி ரகம்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் காரில் வழி கேட்கும் மிஷ்கினை டென்ஷாக்கியதால், "உன்னை கொல்லாமல் விட மாட்டேன்டா" என்று கத்தி மிரட்டிவிட்டு போவார்.. நேற்றைய ஆட்டத்தில் 10 ஓவர்களுக்குள்ளாகவே சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனை மிஷ்கினுடன் ஒப்பிட்டு, "10 பால் ஆடுகிற தலைவன், 10வது ஓவரே ஆட வச்சிடுவானுங்க போல" என்று சிஎஸ்கே ரசிகர்கள் புலம்புவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகனின் மனசாட்சி.

அயன் படத்தில் பிரபு, "கோடி ரூபாய் கொடுத்தாலும் சில விஷயம் பண்ண மாட்டேன்.. அதுல முதல் விஷயம் இது" என்று சொல்வார்.. அதில் வரும் பிரபுவாக மும்பை ரசிகர்களை மாற்றி, "எதிரிக்கு கூட சில விஷயம் நடக்கக்கூடாதுனு நினைப்பேன்.. அதுல ஒன்னு.. பவர்பிளேவில் அஸ்வின் - ஜடேஜா பேட்டிங் பார்க்கிறது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தோனி காதுக்கு கேட்கிற மாதிரி சொல்லுங்க பங்காளி ரகம்.

வெந்து தணிந்தது காடு படத்தின் இடைவேளை காட்சியில் 8 பேரை சுட்டுவிட்டு சிம்பு தனியாக நிற்க, அருகில் இருப்பவர், "எலே முத்து.. இனி நீதாம்ல ஆளு" என்று சொல்வார். நேற்றைய ஆட்டத்தில் 20 பந்துகளில் 43 ரன்களை விளாசிய ஆயுஷ் மாத்ரேவை சிம்புவாகவும், அருகில் இருப்பவரை சிஎஸ்கே ரசிகர்களாகவும் மாற்றி, "எலே மாத்ரே.. இனி நீதாம்ல ஆளு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ்.

ஆம்பள படத்தில் மனோபாலாவிடம் மாட்டிக் கொள்ளும் தீவிரவாதியை பார்த்து, "போயும் போயும்.. இந்த ஆளு பிடிக்கிற அளவிற்கு வீக்கா இருந்திருக்கிறியே டா" என்று சந்தானம் சொல்வார். அதில் வரும் தீவிரவாதியாக சிஎஸ்கே அணியையும், மனோபாலாவாக ராஜஸ்தான் அணியையும், சந்தானமாக சிஎஸ்கே ரசிகர்களையும் மாற்றி, "இவனே சேஸிங்னா சோக் செய்றவன்.. அவன் கிட்டயே சோக் பண்ணிருக்க பார்த்தியா" என்று கிண்டல் செய்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இன்னும் 4 வார்த்தைகள் கேளுங்க தம்பி ரகம்.

-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications