கண்ணா ‘ஓட்டு’ போட ஆசையா... திமுக, அதிமுகவிற்குப் போட்டியாக மீம்ஸ் பிரச்சாரத்தில் குதித்த "ஈசி"
சென்னை: நண்டு சாப்பிடும் ஊருக்குப் போனால், நடுத்துண்டு எனக்கு எனக் கேட்பவனே புத்திசாலி என தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன்படி தற்போதைய டிரண்டிற்கு ஏற்ப தேர்தல் பிரச்சாரங்கள் மீம்ஸ் ரூபத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
வழக்கமாக அரசியல் கட்சிகளை, அவர்களது நடவடிக்கைகளை, சமூக அவலங்களை நெட்டிசன்கள் மீம்ஸ் தயாரித்து கலாய்த்து வந்தனர். அதற்கு மக்களிடையே இருக்கும் தாக்கத்தைப் புரிந்து கொண்ட கட்சிகள், தற்போது மீம்ஸ்களைத் தங்களது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக்கி விட்டன.
அந்தவகையில் கடந்த சில தினங்களாக அதிமுக அரசை விமர்சித்து ஊடகங்களில் திமுக விளம்பரம் செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவும் மீம்ஸ் தயாரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறது.

நாங்களும் போடுவோம்ல...
இப்படியாக கட்சிகள் தான் மீம்ஸ் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்றால், தேர்தல் ஆணையமும் தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளது. தேர்தலின் முக்கியத்துவம், வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவின் அவசியம் என அனைத்தையும் மீம்ஸ்களாக வெளியிட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது தேர்தல் ஆணையம்.

விழிப்புணர்வு பிரச்சாரம்...
100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு மீம்ஸ் மற்றும் பஞ்ச் வாசகங்கள் மூலம் இந்த கவன ஈர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது தேர்தல் ஆணையம். இவை #TN100percent என்ற ஹேஷ்டெக்கில் டிரெண்டாகி வருகின்றன.

வரவேற்பு...
தேர்தல் ஆணையத்தின் இந்த புதுமையான பிரச்சார பாணிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. பிரபல படத்தலைப்புகள், வசனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த மீம்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

கமான்... ஸ்டார்ட்
இந்த மீம்ஸ்களை தேர்தல் ஆணையம் மட்டும் தயாரிக்காமல், விருப்பமுள்ள திறமைசாலிகளும் தயாரிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நெட்டிசன்கள் தங்கள் கற்பனைக்குதிரையை தட்டி, மீம்ஸ்களில் பறந்து வருகின்றனர்.

என் பேரு பாட்ஷா...
ரஜினியின் பிரபல பாட்ஷா பட டயலாக்கை வைத்து இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா...
டிவி விளம்பரத்தில் அறிமுகமாகி, பின் சினிமாவில் மேலும் பிரபலமான டயலாக் இது. யாராவது இரண்டாவது லட்டு (ஓட்டு) சாப்பிட ஆசைப்பட்டால் சிறை கன்பார்ம்.

1950ஐ அழையுங்கள்...
இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் நீக்க உதவுங்கள் என்பதற்கான வித்தியாசமான விளம்பரம் இது.

வேலையில்லா பட்டதாரி...
எவ்வளவு படித்து, கைநிறைய சம்பாரித்தாலும், ஓட்டுப் போட வேண்டியது நம் தலையாய கடமை. இதனால் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை செக் செய்து பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்குத் தான் இத்தகைய விளம்பரங்கள்.

சிறப்பு ஏற்பாடுகள்...
இம்முறை சட்டசபைத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம். இதனால் யாரும் வாக்களிக்க வராமல் இருந்துவிட வேண்டாம் எனக் கூறுகிறது இந்த விளம்பரம்.

செக் பண்ணிக்கோங்க...
மைக்கேல், மதன், காமராஜன் இவர்கள் பேர் எல்லாம் வாக்காளர் பட்டியலில் உள்ளதாம். உங்கள் பேரும் அதில் இருக்கிறதா எனச் செக் செய்து கொள்ளுங்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.

என்ன கொடுமை சரவணன் இது...
என்னது வாக்காளர் பட்டியலில் என் பேர் இல்லையா...? என்ன கொடுமை சரவணனன் இது என சந்திரமுகி பிரபு ஸ்டைலில் இந்த விளம்பரம்.

பார்த்திருக்கியா.. பார்த்திருக்கியா
சிங்கம் படம் ரிலீசான சமயத்தை விட கடந்த சில நாட்களாக இந்த டயலாக் மிகவும் வைரலாக பரவி வருகிறது. தேர்தல் ஆணையமும் இதை விட்டு வைக்கவில்லை.

ரஜினியின் பஞ்ச்...
எப்போதும் இந்த டயலாக்கைக் கூறித்தான், ரஜினி எப்படியும் அரசியலில் குதிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர். அதையே விளம்பரம் ஆக்கிவிட்டது தேர்தல் ஆணையம்.

நடுவுல கொஞ்சம் பேரக் காணோம்...
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? அதை சரிபார்ப்பது எப்படி? வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? என்று பல்வேறு கேள்விகள் குறித்து இவ்வாறு வித்தியாசமான பதிவுகளை வெளியிட்டு வருகிறது தேர்தல் ஆணையம்.

18 வயதினிலே...
எந்த வயதில் உள்ளவர்கள் வாக்களிக்கலாம்? என்ற சந்தேகத்திற்குப் பதிலாக 18 வயதாகி விட்டாலே உங்களது கடமை வாக்களிப்பது என்கிறது இந்த விளம்பரம்.

வயசாகிடுச்சு பாஸ்...
இப்படியாக இன்னும் நிறைய விளம்பரங்கள் இணையத்தில் உலா வருகின்றன. கார்ட்டூன் பார்ப்பதை, வீடியோகேம் விளையாடுவதை நிறுத்தி நீண்ட காலம் ஆகிவிட்டதா, அப்படியானால் உங்களுக்கு வாக்களிக்கும் வயது வந்துவிட்டது என்பது மாதிரியான விளம்பரங்கள் அவை.

டிவிட்டர் பக்கத்தில்...
இன்னும் இதேபோன்ற சுவாரஸ்யமான மீம்ஸ்களைகளை, பதிவுகளை தமிழக தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் சென்றால் பார்க்கலாம்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications