இது என்னடா சோதனை.. பிச்சைக்காரன் படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் இப்டி ஏதாவது நடக்குதே!
சென்னை: காக்காய் உட்கார பனங்காய் விழுந்த கதையாக, பிச்சைக்காரன் 2 பட ரிலீஸ் சமயத்தில், 2000 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ திரும்பப் பெறுவதாக அறிவிக்க, பிறகென்ன அதற்கும் இதற்கும் முடிச்சுப் போட்டு மீம்ஸ்களைத் தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
கடந்த வாரம் திடீரென 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந் து திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ அறிவித்தது. சரியாக அந்த வாரம் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 படமும் ரிலீசாக, இதையும், அதையும் சேர்த்து புதிதாக ஒரு கதையைக் கிளப்பி விட்டு விட்டார்கள் நம் மீமர்கள்.

கடந்த 2016ம் ஆண்டு பிச்சைக்காரன் முதல் பாகம் வெளியான போதுதான், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. தற்போதும் அதே மாதிரி அப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசாகியுள்ள நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வர, விடுவார்களா நம் மீமர்கள். சும்மாவே வாயை மெல்பவர்கள், அவல் கிடைத்தால் விடுவார்களா?
இதோ, இரண்டையும் சேர்த்து வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிரத் தொடங்கிவிட்டனர். அவற்றில் நம் கண்ணில் பட்ட சில வேற லெவல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications