நெட் ஸ்லோ ஆனாலே அலர்றீங்களே.. நாங்க எதையெல்லாம் சமாளிச்சவங்க தெரியுமா? 90ஸ் கிட்ஸ்னாலே கெத்துதான்!
90ஸ் கிட்ஸ் பற்றி சமூகவலைதளங்களில் நகைச்சுவையான மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுகின்றன.
சென்னை: ஞாயிற்றுக்கிழமைகள் என்றாலே வழக்கமாக சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் தான் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்திருக்கும். இந்த முறை சற்று வித்தியாசமாக 90ஸ் கிட்ஸ்களைப் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களை தொகுத்துப் பார்க்கலாம்.
தொழில்நுட்பம் வளர்ந்தும், வளராமலும் இருந்த காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தான் 90ஸ் கிட்ஸ். அப்போது செல்போன்கள் என்ன, டிவிக்களே நிறைய வீடுகளில் இருந்திருக்கவில்லை. அதனாலேயே தங்களது குழந்தைப் பருவத்தில் குதூகலித்தவர்கள். அதனாலேயே பலருக்கு 90ஸ் கிட்ஸ் என்று சொல்லிக் கொள்வதில் தனி கெத்துதான்.
90ஸ் கிட்ஸ் என என்னதான் காலரைத் தூக்கிக் கொண்டாலும், எப்போதுமே மீமர்களுக்கு அவர்கள் அள்ள அள்ளக் குறையான கன்டெண்ட் மெட்டீரியல்தான். அப்போது குழந்தையாக இருந்தார்கள் சரி, அதற்காக எப்போதுமே குழந்தையாக இருந்தால் எப்படி? என அவ்வப்போது 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து அடிக்கடி சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி விடுகிறது.
அப்படியாக 90ஸ் கிட்ஸ்கள் பற்றி சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications