எவனாவது வன்மம் புடிச்சவன்.. அவன் கிளாஸ்ல இருக்க பிடிக்காதவங்க நம்பரை எழுதிட்டு போனா என்ன பண்றது?
சென்னை: கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டது என்ற குஷியில் பள்ளி மாணவர்கள் இருக்க, இன்னும் ஒரு மாதம் இவர்களை எப்படி வீட்டில் வைத்து சமாளிக்கப் போகிறோமோ என்ற கவலையை மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத பருவம் மாணவப் பருவம் தான். ஆனால் அந்தப் பருவத்தில் இருக்கும் போது அதன் அருமை எவருக்கும் புரிவதில்லை. எப்போது தேர்வுகள் முடியும், பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புத்தான் இருக்கும். வயதாகி வேலைக்கு சென்று பொறுப்புகள் கூடும் போதுதான், மாணவப் பருவத்தின் அருமை புரியும்.
அதனால்தான் சமூகவலைதளங்களில் அடிக்கடி, 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.. நம்மை நாம் அங்கே தேடலாம்..' என்ற ரேஞ்சில் பள்ளிப் பருவ மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படும். இப்போதும் அப்படித்தான் நிறைய மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் இவை சற்று வித்தியாசமானவை.

தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை ஆரம்பமாகி விட்டதால், இன்னும் ஒரு மாதத்திற்கு குழந்தைகளை வீட்டில் வைத்து எப்படிச் சமாளிப்பது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். கூடவே, விடுமுறைக்கு மனைவி, குழந்தைகளுடன் ஊருக்குப் போனால் எப்படி இருக்கும் என்றும் இப்போதே பகல் கனவு ஆரம்பித்து விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications