உனக்கு பொண்ணுங்க கிட்ட இருந்துதான் மெசேஜ் வர மாட்டேங்குதுனு பார்த்தா.. அலர்ட் மெசேஜ்கூட வரலையே!
சென்னை: செல்போன்களுக்கு எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ் அனுப்பப்பட்டு ஒரு வாரம் ஆனாலும், இன்னமும் பிரெஷ்ஷாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பேரிடர்களின் போது மக்களிடம் அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த வாரம் தமிழகத்தில் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை தமிழகத்தில் உள்ள ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களுக்கு நடத்தப்பட்டது. திடீரென தங்களது போனில் இப்படி ஒரு மெசேஜைப் பார்த்ததும் பதறிப் போனவர்கள், தங்களது அனுபவங்களை எல்லாம் மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்.
இந்த மெசேஜ் அனுப்பப்பட்டு ஒரு வாரம் ஆகப் போகிறது. ஆனாலும், இந்த மெசேஜை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. 'என்ன பெரிய எமர்ஜன்சி அலர்ட்.. மனைவியோட மிஸ்டுகால் பார்த்து இருக்கியா நீ?' கணவர்கள் தங்கள் பங்கிற்கு தற்போது தங்களது அனுபவங்களை நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications